Monday, February 20, 2012

சீரக மீன் குழம்பு / Cumin Fish Gravy

தேவையான பொருட்கள்;
மீன் - 400 கிராம்
சின்ன வெங்காயம் - 100கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 6 பல்
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன்
உ.பருப்பு,வெந்தயம்.சீரகம் - தலா அரைடீஸ்பூன்
மல்லி கருவேப்பிலை - சிறிது
(விரும்பினால் தேங்காய் விழுது- 2 டேபிள்ஸ்பூன்)

மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், சீரகம்,உளுத்தம் பருப்பு,வெந்தயம் போட்டு சிவறவும்,பச்சை மிளகாய்,பூண்டு,கருவேப்பிலை போட்டு வதக்கவும்.அத்துடன் உரித்த சின்ன வெங்காயம் ,நறுக்கிய தக்காளி,சிறிது உப்பு சேர்த்து மசிய விடவும்.

தக்காளி மசிந்து வரும் பொழுது மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.

புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

மீனை சேர்க்கவும்.
பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

மீன் வெந்தவுடன் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.விரும்பினால் தேங்காய் சேர்த்தும் செய்யலாம்.
சுவையான சீரக மீன் குழம்பு ரெடி.

--ஆசியா உமர்.

18 comments:

Sangeetha Nambi said...

Tempting......

ஸாதிகா said...

வித்தியாசமாக உள்ளது ஆசியா.

சிநேகிதி said...

படங்கள் நாவினை சப்பு கொட்ட வைக்கிறது அக்கா

Asiya Omar said...

சங்கீதா வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா,இதுவும் ஒரு முயற்சி தான்.

சிநேகிதி மிக்க நன்றி.செய்து பாருங்கபா.
தூத்துக்குடி பக்கம் மீனவர்கள் காய்ந்த மிளகாய்,சீரகத்தை அம்மியில் வைத்து அரைத்து இந்த குழம்பை செய்றாங்க.

athira said...

சூஊஊஊஊஊஊப்பர் குழம்பு. இது விளைமீன் தானே ஆசியா?.

Asiya Omar said...

அதிரா சரியாக சொல்லிட்டீங்க,
விளைமீனில் சிறியது.கருத்திற்கு நன்றி.

கலை said...

naanum try pannuren akaka

கலை said...

pagirvukku nanringa akka

அமைதிச்சாரல் said...

மும்பை வரைக்கும் மணக்குது ஆசியா :-)

S.Menaga said...

மீன் குழம்பை பார்த்ததும் வாய் ஊறுதுக்கா..விளை மீன் ஆங்கிலப் பெயர் என்ன??

Asiya Omar said...

கலை,வாங்க வாங்க.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Asiya Omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.செய்து பாருங்க.

மேனகா,sheri என்று இங்கு மார்க்கட்டில் போட்டிருக்கும்.கருத்திற்கு நன்றி.

vanathy said...

super kuzambu. Thanks for sharing.

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

குழம்ப பார்த்ததுமே வயிறு பசிக்கிற மாதிரி இருக்கு சகோ..:)

ஹேமா said...

வாசனையே நல்லாயிருக்கும்.அடுத்த வார விடுமுறைச் சமையல் மீன்குழம்புதான் !

Jaleela Kamal said...

vaasana ingka varaikkum adikkuthee

Magia da Inês said...

Passei para uma visitinha.
Receita deliciosa.
Bom dia!
(⁀‵⁀,)
¸`⋎´
¸.•°`♥
Beijinhos.
Brasil

பாச மலர் / Paasa Malar said...

வித்தியாசமாக இருக்கிறது ஆசியா...