Saturday, February 25, 2012

மீன் தலை ரசம்/ சூப் - Fish Rasam/ Soup

தேவையான பொருட்கள்:
மீன் தலை - சிறியது -6
(சங்கரா,விலைமீன்,விறால் மீன்)
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
பூண்டு - 4 பல் பெரியது
சின்ன வெங்காயம் - 6+4
தக்காளி - பெரியது 1
மல்லி கருவேப்பிலை - சிறிது
நல்ல எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு.

மீன் தலை, மஞ்சள் தூள், உப்பு சிறிது சேர்த்து நன்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.கொதிவரவும் மிளகு,சீரகம்,சின்ன வெங்காயம் 6,பூண்டு பல் சேர்த்து அரைத்த விழுதை போடவும்.

தக்காளியையும் அரைத்து விடவும்.

நன்றாக கொதித்து சூப் இறங்கி வரவேண்டும்.

நறுக்கிய மல்லி இலை தூவவும்.

ஒரு கடாயில் நல்ல எண்ணெய் வீட்டு காயவும்,நறுக்கிய நான்கு சின்ன வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி ரெடியான சூப்பில் கொட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.


சுவையான மீன் தலை ரசம் /சூப் ரெடி.
மீன் வாடை அவ்வளவாக தெரியாது.அப்படியே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம்.மீன் தலையை ருசிக்க விரும்புபவர்கள் சூப் சாப்பிட்டு விட்டு மெதுவாக சாப்பிடலாம்.இல்லாவிடில் சூப் மட்டும் பருகலாம்.தொண்டைக்கு இதமாக வாய்க்கு ருசியாக இருக்கும்.சுத்தமாக ஆய்ந்து மீனை கழுவ வேண்டும் அது மிக முக்கியம்.


பொதுவாக மீன் தலையை குழம்பில்,பொரிக்க ஒரு சிலர் உபயோகிப்பதில்லை.அப்படி செய்பவர்கள் ஃபிஷ் ஸ்டாக் எடுத்து விரும்பிய வெஜிடபிள் சேர்த்தும் சூப்பாக பருகலாம்.


--ஆசியா உமர்.

5 comments:

அர அல said...

மீன் தலையில இப்படி ஒரு சூப்பா?மாஷா அல்லாஹ்,பகிர்வுக்கு நன்றி சகோதரி

Asiya Omar said...

அர அல வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ரொம்ப அருமை ஆசியா
பிள்ளை பெற்றவர்களுக்கு செய்து கொடுபோம்,
இங்கு குளிர் காலத்திலும் அடிக்கடி செய்வது.

ஹேமா said...

மீன்தலையில் நாங்கள் தேங்காய்ப்பால் சொதி வைப்பது வழக்கம் ஆசியா.ரசம் இதுவும் நல்லாயிருக்குமே !

Uma Maheswari said...

I cooked this dish today with Rohu fish head. It was excellent - without any smell. This has become my favourite as well. Thanks for this wonderful recipe.