Thursday, February 23, 2012

கானாங்கெழுத்தி மீன் வறுவல் / Mackerel Fish Fryதேவையான பொருட்கள்;
கானாங்கெழுத்தி மீன் - 1கிலோ (8-10 எண்ணிக்கை)
மிளகாய்த்தூள் -3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
ஒயிட் வினிகர் அல்லது லைம் ஜூஸ் - 4 டீஸ்பூன்
ரெட் கலர் - பின்ச்
கடலை மாவு  அல்லது கார்ன் ஃப்லோர்- அரை கப் 
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

மீனின் வயிற்றை நன்கு சுத்தம் செய்து நாடி,செவுள் ஆகியவற்றை நீக்கி சுத்தமாக கழுவி உப்பு போட்டு உலசி தண்ணீர் வடிகட்டி மீனை கீறிவிட்டு வைக்கவும்.இப்படி பளிச்சென்று இருக்கும்.


கடலை மாவு எண்ணெய் தவிர மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து மீனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த மீனை கடலை மா அல்லது கார்ன்ஃப்லோரில்  பிரட்டி வைக்கவும்.விரும்பினால் ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்தும் எடுத்து பொரிக்கலாம்.
வாணலியில் தேவைக்கு எண்ணெய் விட்டு காயவும் மீனை போடவும்.
ஒரு பக்கம் வெந்து சிவறவும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த மீனில் எண்ணெய் இருக்காது.மாவில் தோய்த்து போடுவதால் முறுகலாக எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
சுவையான கானாங்கெழுத்தி மீன் வறுவல் ரெடி.ருசி சூப்பராக இருக்கும்.
இந்த சைஸில் மீன் ஃப்ரெஷாக கிடைத்தால் வாங்கி இப்படி பொரித்து பாருங்க.பேச்சிலர்ஸ் ரெடிமேட் மீன் மசாலாவில்,மிளகுத்தூள், வினிகர்,சிறிது தண்ணீர் தேவைக்கு உப்பு கலந்து மீனில் தடவியும் பொரிக்கலாம்.


--ஆசியா உமர்.

17 comments:

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பொரியல் எனக்குத்தான்...:))

athira said...

மக்கரலுக்குப் பெயர் கானாங் கெழுத்தியோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இது நம் நாட்டில் பிடிக்கப்ப்டும் மீன்களில் ஒன்று(ஸ்கொட்லாந்து) ஆனா இங்கிருக்கும் மக்கரெல்.. சின்னனாக இருக்காது.. பெரீஈஈஈய பெரீஈய மீனாக இருக்கும்... எமக்குப் பெரிதாகப் பிடிப்பதில்லை கொழுப்பாக, எண்ணெய் அதிகமாக இருக்கும்.

ஆனால் இதில்தான் சத்து அதிகமாம், பொரித்தால் நன்று, கறி சமைத்தால் ஒரு துண்டுக்கு மேல் சாப்பிட முடியாது, இது இங்கு விலையும் மலிவு கிலோ நான்கு பவுண்டுகள் மட்டுமே...

athira said...

//பிடித்திருந்தால் கருத்து சொல்லுங்க...//

பிடிக்கவில்லையெனில் கருத்துச் சொல்லப்பூடாதோ? அவ்வ்வ்வ்வ்வ் முறைக்காதீங்க:))

Asiya Omar said...

நன்றி அதிரா கருத்திற்கு.இங்கும் இந்த மீன் மலிவு தான் கிலோ எட்டு திர்ஹமிற்கு கிடைக்கிறது.பெரிய சைஸ் ஆக இருந்தால் சுட்டு சாப்பிடலாம்.மத்தி மீனும்( sardines) இங்கு மலிவு.ஆனால் சின்ன மீன் தான் ருசியும் சத்தும் கூட.

ஸாதிகா said...

மீன்வறுவலுக்கு கடலைம்மாவு சேர்க்கவேண்டும் என்று சொல்லி இருக்கீங்க ஆசியா.டிரை பண்ணிடுவோம்.

அமைதிச்சாரல் said...

நல்லாருக்கு ஆசியா,.. ரவையில் புரட்டியெடுத்து, தவாவில் எண்ணெய் விட்டு பொரிக்கிறது மும்பை ஸ்டைல் :-)

Asiya Omar said...

ஆமாம் ஸாதிகா,ஒரே மாதிரி மீனை பொரிக்காமல் சிறிது சிறிது மாற்றத்துடன்.கருத்திற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

அமைதிச்சாரல் டிப்ஸ்க்கு நன்றி.ஒரு முறை ரவையில் புரட்டி பொரித்து பார்க்கிறேன்பா.

Sangeetha Nambi said...

romba nalla iruku fish fry...

அர அல said...

மாஷா அல்லாஹ்.அருமையான பொரியல்.

Anonymous said...

மீன் வறுவல் நல்லா இருக்கு ஆசியா. நான் மீன் சாப்பிட மாட்டேன் ஆனா எங்க வீ.காரருக்கும் பையனுக்கும் செஞ்சு கொடுப்பேன். இந்த மீனில் வறுவல் செஞ்சதில்ல.

Anonymous said...

// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பொரியல் எனக்குத்தான்...:))//

கர்ர்ர்ர் மீன் இன்னு சொன்ன ஒடனே மூக்கு வேர்த்திடிச்சு அதீசுக்கு :))

//பிடிக்கவில்லையெனில் கருத்துச் சொல்லப்பூடாதோ? அவ்வ்வ்வ்வ்வ் முறைக்காதீங்க:))//
இந்த மாதிரி குண்டக்க மண்டக்க டவுட்டு கேக்குறவங்களுக்கு எக்ஸ்ட்ரா காரம் போட்டு வறுவல் செஞ்சு கொடுங்க ஆசியா :))

விச்சு said...

பார்க்கும்போதே அழகா இருக்கே.

Asiya Omar said...

சங்கீதா கருத்திற்கு மிக்க நன்றி.

என் சமையல் கருத்திற்கு மிக்க நன்றி.

விச்சு கருத்திற்கு மிக்க நன்றி.

Mahi said...

நான் ப்ரெசென்ட்!:)

பலநாளா கேக்கணும்னு நினைச்சு மறந்து போகுது.."இவள் புதியவளில்" எனது பதிவு-என்று சைட்பாரில் படங்கள் தெரியுது,ஆனா பெரிதுபடுத்திப் பார்க்கமுடில. இதுபத்தி தனி பதிவு ஏதும் போட்டிருந்தீங்களா?? நான் மிஸ் பண்ணிட்டேனா?? அப்படின்னா லிங்க் குடுங்களேன்!

Asiya Omar said...

mahi வருகைக்கு நன்றி.இவள் புதியவள் லின்க் ஏதும் இதுவரை கொடுக்கலை.தேனம்மை அக்கா வெளியானதை ஃபேஸ் புக்கில் இணைத்து இருந்தாங்க,அதனை காப்பி பேஸ்ட் செய்து போட்டேன்.

Jaleela Kamal said...

ஆசியா மீன பார்க்கவே பளிங்கு போல் போல் இருக்கு

எங்க விட்டில் என் பெரியபையனும் நானும் தான் முள் மீன் சாப்பிடுவோம்