தேவையான பொருட்கள்:மஞ்சள் பூசணி - முக்கால் கிலோ
(ஒருசிறிய துண்டு அதுவே இத்தனை எடை)
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு- தலா ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சாம்பார் பொடி அல்லது பொரியல் பொடி - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
மஞ்சள் பூசணியின் கடினமான மேல் தோல் சீவி இப்படி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.சிறிது காய்வெட்டாக பார்த்து வாங்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு போட்டு லேசாக சிவறவும், கீறிய அல்லது கிள்ளிய பச்சை மிளகாய் போட்டு, கருவேப்பிலையும் சேர்த்து தாளிக்கவும்.
சிறிது மூடி வைத்தால் உடன் வதங்கி விடும். சாம்பார் போடி சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
தேங்காய்த்துருவல் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.உப்பு சரி பார்க்கவும்.அப்படியே சும்மாவே சாப்பிடலாம்.
--ஆசியா உமர்.




19 comments:
பூசணிக்காயில் பொரியல் .வித்தியாசமாக செய்து காட்டி இருக்கீங்க தோழி.
சூப்பர் பொரியல்! நான் வெங்காயம் சேர்ப்பேன்,நீங்க சேர்க்கலை! நீங்க சாம்பார் பொடி போட்டிருக்கீங்க,நான் போடமாட்டேன்! ;)
இன்றைய ஸ்பெஷல் இனிமை.
மிக்க நன்றி ஸாதிகா.
மிக்க நன்றி மகி.
மிக்க நன்றி சகோ.சங்கரலிங்கம்.
மிக்க நன்றி சகோ.குமார்.மெயில் பாருங்க.
வித்தியாசமான பொரியல்,.. பொதுவா பூசணியை சாம்பார், கூட்டு வகைகள்லதான் அதிகமா சேர்ப்போம். இது சூப்பர் டேஸ்டுல இருக்கும் போலிருக்கே.
அப்படியே அந்த பிளேட்ட இங்கு அனுப்புங்க
வித்தியாசமாக இருக்கு.. ஒருதடவை செய்துதான் பார்க்கோணும்.
பார்க்கவே நல்லாருக்கு...செய்து பார்க்கிறேன்..
சுவையான குறிப்பு. நானும் இப்படித் தான் செய்வேன். ஆனால் சாம்பார் பொடி சேர்ப்பதில்லை...
சூப்பர் ரெசிப்பி.
அம்மா செய்யும்போது அப்போ பிடிக்காது...இப்போ செய்து பார்க்க ஆசை வந்துடுச்சு.நல்லாருக்குக்கா
நன்றாக இருக்கிறது ஆசியா இந்த குறிப்பு! விளக்கப்படங்களும் அருமை!!
பூசனிப்பொரியல் கேள்விப்பட்டதே இல்லையே, ஆத்துக்காரியிடம் செய்முறையை கொடுக்கிறேன்
பூசணி நிறையப்பேர் விரும்பி சாப்பிடுவதில்லை. இது மாதிரி செஞ்சு கொடுத்தா கண்டிப்பா சாப்பிடுவாங்க.
வித்தியாசமான பொரியல்.
வித்தியாசமாயிருக்கு.பூசனிக்காயின் இனிமை பிடிப்பதில்லை.
குழந்தைகளுக்கு நல்ல உணவாயிருக்கும்!
அமைதிச்சாரல்
ஜலீலா
அதிரா
பாசமலர்
கோவை2தில்லி
வானதி
மேனகா
மனோ அக்கா
அம்பலத்தார்
விச்சு
காஞ்சனா
ஹேமா
வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
wow this is love Asiya.I have an award for u at my place!
Thanks Princy for your visit and sharing the award.
Post a Comment