Monday, March 19, 2012

கீரை கோஸ் கேரட் பொரியல்/ Greens Cabbage Carrot Poriyal


இந்த குறிப்பை ஹெல்தி மார்சல்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை அல்லது ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்
நறுக்கிய கோஸ் - ஒரு கப்
நறுக்கிய கேரட் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - 1
ஊறவைத்த பாசிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சப்பொடி,சீரகப்பொடி,பெருங்காயப்பொடி - தலா கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு,சீரகம் - தலா அரைடீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,சீரகம்,வற்றல் போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.கேரட்,கோஸ்,கீரை சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விட்டு ஊறிய பாசிப்பருப்பை சிறிது தண்ணீருடன் சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விட்டு மஞ்சப் பொடி,சீரகப்பொடி,பெருங்காயப்பொடி சேர்க்கவும்.நன்கு வதக்கி மூடி விடவும்.


இப்படி வெந்து வரும்,உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி விடவும்.

சுவையான சத்தான முருங்கைக்கீரை கோஸ் கேரட் பொரியல் ரெடி.
பக்க உணவாகவோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம்.மிகவும் சத்தான ருசியான பொரியல்.

-ஆசியா உமர்.

23 comments:

ஸாதிகா said...

வித்தியாசம்,வித்துயாசமாக முற்சிக்கின்றீர்கள் ஆசியாபார்க்கவே அருமையாக உள்ளது..

Asiya Omar said...

நன்றி ஸாதிகா உடன் வருகைக்கும் கருத்திற்கும்.

ராதா ராணி said...

ஆசியா..சிறியவர்,பெரியவர்,அனைவரும் விரும்பும் அருமையான சத்தான குறிப்பு.நல்லா இருக்கு.

ராதா ராணி said...

நிறைய புதிய குறிப்புகள் கொடுத்து ஈவேண்டில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

FOOD NELLAI said...

சுவை மிக்க குறிப்புகள், சுவை குறையாமல் கொடுத்துள்ளீர்கள், சகோ.

அமைதிச்சாரல் said...

முட்டைக்கோசுடன் காரட்டைச் சேர்த்து செஞ்சதுண்டு. முருங்கைக்கீரையையும் சேர்த்தது வித்தியாசமா இருக்கு..

வித்தியாசமே..உன் இன்னொரு பெயர்தான் ஆசியாவோ :-))

விதவிதமா வித்தியாசமா அசத்துறீங்க..

இராஜராஜேஸ்வரி said...

வித்தியாசமான பயனுள்ள சத்தான உணவு செய்முறைக் குறிப்பிற்கு பாராட்டுக்கள்.. நன்றி..

Kalpana Sareesh said...

too many veggies perfect for kids..

Aruna Manikandan said...

looks healthy and delicious :)

கோவை2தில்லி said...

சத்துள்ள பொரியல் தான். பார்க்கவும் கலர்ஃபுல்லாக இருக்குங்க.

S.Menaga said...

காய்களுடன் கீரை சேர்த்து செய்திருப்பது ரொம்ப நல்லாயிருக்குக்கா..

Yasmin said...

வித்தியாசமான சத்தான குறிப்பு.நல்லா இருக்கு..வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

உண்மையில் வெகு அசத்தலாய் இருக்கிறது கீரை கோஸ் கேரட் பொரியல் ஆசியா.

Asiya Omar said...

ராதா ராணி
சங்கரலிங்கம் சார்
அமைதிச்சாரல்
இராஜராஜேஸ்வரி
கலபனா
அருணா
கோவை2தில்லி
மேனகா
யாஸ்மின்
கோமதியக்கா

அனைவரின் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அஸ்மா said...

கேட்கும்போதே சூப்பரா இருக்கு இந்த காம்பினேஷன்! நன்றி ஆசியாக்கா.

schmetterlingwords said...

Keerai kaaigarigalin sathu muzhuvadhum serndhulladhu.. Paarkavum azhagaaga pasiyai thoondumpadi ulladhu.. Healthy Morsels event ku anuppiyadhukku nanri... Thodarndhu aarvamudam aadharavu koduppadharku migavum nanri... :)

விச்சு said...

நல்லாயிருக்கு. எங்க அம்மாவும் இது மாதிரி சமைத்து கொடுத்திருக்காங்க. ஆனா அது வேற காம்பினேஷன்.

Malar Gandhi said...

Thats an interesting combo' there. Never tried pairing greens with veggies, looks awesome.

Asiya Omar said...

அஸ்மா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஹெல்தி மார்சல்ஸ் வருகைக்கு நன்றி.மகிழ்ச்சி.

விச்சு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

மலர் காந்தி வாங்க,மிக்க மகிழ்ச்சி.

Reshmi Ahmed said...

keeraiyum koasum migavum nalla combination ! Healthy Morsels'ku anuppiyatharku mikka nanri Asiya :)

Mahi said...

நல்ல காம்பினேஷன்! கீரையகளுடன் காய்கள் சேர்த்து சமைத்ததில்லை. நல்லா இருக்கு ஆசியா அக்கா!

Umm Mymoonah said...

Nice healthy combo, thank you for linking with Healthy Morsels :)

Gopi Ramamoorthy said...

நல்ல ஹெல்தியான காம்போ.