Saturday, March 10, 2012

ஒட்டகக் கறி பிரட்டல் / Camel Meat Sukka.

தேவையான பொருட்கள்;
ஒட்டகக் கறி - அரைக்கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
சிறிய தக்காளி - 1
மஞ்சள் தூள் - முக்கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் -1- ஒன்னரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
அலங்கரிக்க நறுக்கிய மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

எங்களுக்கு தெரிஞ்சவங்க இந்த ஒட்டகக்கறியை கொண்டு வந்து சமைத்து சாப்பிடுங்கன்னு தந்தாங்க.அப்பாடா! அதனை கட் செய்து கழுவி எடுத்து சமைத்து எடுப்பதற்குள் ஸ்ஸ்சப்பா...இங்கு மார்க்கெட்டுகளில் அதிகம் விற்பனைக்கு வராது.இது ஷேக் பேலஸில் இருந்து வந்தது.

சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு 7 தண்ணீர் விட்டு அலசி தண்ணீர் வடிகட்டவும்.

அரைக் கிலோ கறியை எப்படி சமைப்பது என்று சொல்கிறேன்.ரெடி செய்த ஒட்டகக் கறியோடுஒரு டேபிள்ஸ்பூன் தயிர், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், கால்டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து விரவி ஒரு அரை மணி நேரம் வைக்கவும்.

ஊறிய கறியை குக்கரில் வைத்து சுமார் 20 -30 நிமிடம் அடுப்பை மீடியமாக வைத்து வேக வைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும் கீறிய பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.வதக்கவும்.

தக்காளி சேர்க்கவும்.பின்பு வெந்த கறியை சேர்க்கவும்.மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் சேர்த்து பிரட்டவும்.
பின்பு மேற்குறிப்பிட்ட அனைத்து மசாலாவும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து சிறிது உப்பும் சேர்த்து மூடி போட்டு மசாலா வாடை அடங்கி கறியோடு மசாலா ஒட்டி வரட்டும்.

நறுக்கிய மல்லி இலை தூவி பிரட்டி விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
இதனை நான் மஞ்சள் கொடைமிளகாய் ஸ்லைஸ் செய்து அலங்கரித்துள்ளேன்.

சுவையான ஒட்டகக் கறி பிரட்டல் ரெடி.
இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம்,எலுமிச்சை சாதம்,ரசம் சாதம் அல்லது சப்பாத்தி,குபூஸ் உடன் கூட பரிமாறலாம்.

--ஆசியா உமர்.

20 comments:

ராதா ராணி said...

பந்தியில் முதல் ஆள் நாந்தேன்..ஒட்டக கறி இங்க கிடைக்காதே..படத்தப் பாத்து ஜொள்ளு வடியுதே...

athira said...

அச்சச்சோ என்ன இது ஒட்டகத்தைச் சமைப்பார்களோ? இன்றுதான் கேள்விப்படுகிறேன்...

Asiya Omar said...

ராதா ராணி வருகைக்கு நன்றி.மகிழ்ச்சி.வந்த கறியை பிரித்து வடை, வறுவல் என்று காலி செய்வதற்குள் போதுமென்றாகி விட்டது.
எங்கேன்னு சொன்னால் பார்சல் அனுப்பி விடுகிறேன்.

Asiya Omar said...

அதிரா உங்க சமைத்து அசத்தலாம்னு பெயர் வைத்ததாலோ என்னவோ எல்லாம் சமைக்க வேண்டியதாக இருக்கிறது.இந்தியாவில் எங்க சொந்த ஊரில் கூட ஹஜ்ஜுப் பெருநாளிற்கு ஒட்டகம் குர்பானி கொடுக்கிறாங்க அதிரா.ஒட்டகக் கறி பீஃப் டேஸ்ட் தான்.கொழுப்பு சுத்தமாக இல்லை.ஆண்டவன் தர்றான்,ஆசியா சமைக்கிறாள்.இது எப்படி இருக்கு?

எல் கே said...

:)

ராதா ராணி said...

மஞ்சள் குடமிளகாயும் மல்லி இலையும் போட்டு அழகா இருக்கு பிரட்டல்.ம்ம்ம்....இதே ப்ரிப்பரேசன்ல கோழி,இல்ல ஆட்டுக்கறியை போட்டு பிரட்டல் செய்து திருப்தி பட்டுக்க வேண்டியதுதேன்.:)

அமைதிச்சாரல் said...

உள்ளேன் அம்மா :-)))

ஒட்டகம் பாவம்.

Asiya Omar said...

எல்கே எட்டி பார்த்தமைக்கு மகிழ்ச்சி.

அமைத்திச்சாரல் வருகைக்கு நன்றி.
இது ஃபைலில் நீண்ட நாட்களாக இருந்தது.பக்ரீத சமயம் செய்ததை இப்ப தான் போஸ்டிங் செய்கிறேன்.இது குர்பானி கறி.

ஸாதிகா said...

கறியைப்பார்த்தாலே பயமாக இருக்கு ஆசியா.

athira said...

ஆண்டவன் தர்றான்,ஆசியா சமைக்கிறாள்.இது எப்படி இருக்கு?////

ஹா..ஹா...ஹா.. இது ஸூஊஊஊஊஉப்பராத்தான் இய்க்குது:))..

எதுவும் பழகவில்லையாயின் ஒரு மாதிரி இருக்கும், பழகிட்டால் போச்சு:)

சே.குமார் said...

அக்கா...
இந்தக்கறி இதுவரை சாப்பிட்டதில்லை.
இதே மசாலா வகைகளை கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி சமைக்க பயன்படுத்தினால் ருசி இருக்கும்தானே...

இன்னும் அலைனில் தங்க இடம் கிடைக்கவில்லை. தற்போது எனக்கு தெரிந்த சார் ஒருவரின் அறையில் தங்கியிருக்கிறேன். முடிந்தால் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kumar006@gmail.com (மின்னஞ்சல் பெயர் குமார் சைபர் சைபர் ஆறு)
நன்றி.

Asiya Omar said...

ஸாதிகா வருகைக்கு மகிழ்ச்சி.படத்தில் பார்க்க எனக்கே அப்படி தான் இருக்கு தோழி.இது குர்பானி கறி.இதனை போஸ்ட் செய்ய யோசித்து இத்தனை நாள் ஆகி விட்டது.

அதிரா மிக்க நன்றி.

Asiya Omar said...

தம்பி குமார் நான் ஏற்கனவே மெயில் செய்து அது எங்கோ போய்விட்டது. என் கணவரிடம் சொல்லி தெரிந்த ஆட்களிடம் கேட்க சொல்கிறேன்.மகிழ்ச்சி.

சுவனப்பிரியன் said...

ஒட்டக கறியா! வேக வைக்க சிறிது நேரம் எடுக்கும். சிறந்த பகிர்வு.

Mahi said...

முதல்ல எதோ காமெடி கீமடி பண்ணறீங்கனுதான் நினைச்சென்,நெசமாலுமே ரெசிப்பிதான் போட்டிருக்கீக! ;)))))))))

//.ஆண்டவன் தர்றான்,ஆசியா சமைக்கிறாள்.இது எப்படி இருக்கு?// சும்மா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைல்ல இருக்குது.நீங்க அசத்துங்கோ! :)))))))))

Asiya Omar said...

சுவனப் பிரியன் மிக்க நன்றி.

மகி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

vanathy said...

ஒட்டக கறியா??? சும்மா தமாஷ் பண்றீங்க என்று நினைச்சேன்.

Jaleela said...

இது இங்குள்ள அரபிகள் விரும்பி சாப்பிடுவது, முன்பு கீழே அரபி வீட்டில் இருந்து வரும் எல்லாரும் சாப்பிடுவார்கள் ரொம்ப நல்ல இருக்கு என்பார்கள்.
பார்க்க நல்ல் இருக்கு

முன்பிலிருந்தே பழக்கம் இல்லாதாதால் நான் சாப்பிடவும் மாட்டேன் சமைக்கவும் மாட்டேன்.

சிநேகிதன் அக்பர் said...

அட்டகாசம். நல்ல டேஸ்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன்.

Asiya Omar said...

வானதி மிக்க நன்றி.தமாஷ் இல்லை.நிஜமாகவே சமைத்து அசத்தியது தான்.

ஜலீலா வருகைக்கு நன்றி.மகிழ்ச்சி.

சகோ.அக்பர் பீஃப் சாப்பிடுகிறவர்களுக்கு இது பிடிக்கும். வருகைக்கு மகிழ்ச்சி.