Sunday, March 11, 2012

பருப்பு சோறு / Dal Pulav

தேவையான பொருட்கள்:
பாசுமதி அல்லது பச்சரிசி - 200 கிராம்
பருப்பு - கையளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
மிள்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
மல்லி புதினா -சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

சமைக்கும் நேரம்- அரைமணி நேரம்
பரிமாறும் அளவு - 1-2
செய்முறை:
அரிசி பருப்பை சிறிது நேரம் ஊற வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் நெய் விட்டு காயவும் நறுக்கிய வெங்காயம் வதக்கவும் .சிவறவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கரம் மசாலா போட்டு வதக்கவும்.

நறுக்கிய மல்லி புதினா,தக்காளி,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
சிறிது உப்பு சேர்த்தால் தக்காளி விரைவில் வதங்கி விடும்.மஞ்சள் தூள் மிள்காய்த்தூள் சேர்க்கவும்.
நன்கு மசிந்து மசாலா வாடை அடங்கட்டும்.
குக்கரில் அரிசியின் அளவிற்கு இரண்டு மடங்கு தண்ணீர் வைத்து கொதி வரட்டும்.

கொதி வந்ததும் அரிசி பருப்பை சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.மூடி விட்டு ஆவி வரவும் வெயிட் போடவும்.மீடியம் நெருப்பில் வைக்கவும்.இரண்டு விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.

ஆவியடங்கியவுடன் குக்கரை திறக்கவும்.இப்படி இருக்கும்.


சோறு உடையாமல் கலந்து சிறிது மூடி வைக்கவும்.

சுவையான பருப்பு சோறு ரெடி. புதினாத்துவையல் அல்லது ஊறுகாயுடன் சூடாக பரிமாறவும்.


இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

--ஆசியா உமர்.

25 comments:

அம்பலத்தார் said...

அழகான படங்களுடன் நல்ல நளபாகம் ஒன்றை பகிர்ந்திருக்கிறியள்.

Yasmin said...

ரொம்ப ஈஸியாக இருக்கு. செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

தால் புலாவ்! நல்லா இருக்குங்க...

ஸாதிகா said...

வித்த்யாசமாக இருக்கே தோழி.

அமைதிச்சாரல் said...

நல்லாவே இருக்கும். அது மேல ஒரு ஸ்பூன் நெய்யை ஊத்தி வெச்சு, கூடுதலா ரெண்டு அப்பளமும் பொரிச்சு வையுங்க. இன்னா வாரேன் :-))

athira said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பராத்தான் இருகு... ஆனா இதுக்கெல்லாம் தக்காளி முக்கியம்.. எமக்குத்தான் அது ஒத்துவராதே:(((.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல சுவையான பதிவு

ராதா ராணி said...

பூண்டு,சீரகம்,சேர்த்து பருப்பு சோறு செய்திரிக்கிறோம்.இந்த செய்முறை புதிதாக இருக்கு.செய்து பார்த்திட வேண்டியதுதான்.:)

Asiya Omar said...

அம்பலத்தார் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

செய்து பாருங்க,வருகைக்கு மகிழ்ச்சி.

சகோ.வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

Asiya Omar said...

ஸாதிகா வருகைக்கு மகிழ்ச்சி.நாங்க ஸ்கூல் போகும் சமயம் வாரம் ஒரு நாள் இந்த சாப்பாடு லஞ்ச் பாக்ஸில் இருக்கும்.

Asiya Omar said...

அமைதிச்சாரல் வாங்க ரெடியாகவே இருக்கு.மிக்க மகிழ்ச்சி.

அதிரா வருகைக்கு மகிழ்ச்சி.

ராஜபாட்டை வருகைக்கு மகிழ்ச்சி.

ராதாராணி வருகைக்கு மகிழ்ச்சி.செய்து பாருஙக.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு ஆசியா. நன்றி.

கோவை2தில்லி said...

வித்தியாசமா இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி.

ஹேமா said...

நான் இப்படிச் சமைப்பதுண்டு ஆசியா.எனக்குப் பிடித்ததும் சுலபமானதும்கூட !

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப நல்லா செய்திருக்கீங்க ஆசியாக்கா.. பார்க்கும்போதே சாப்பிட எச்சி ஊறுது!!

இதே மாதிரி, பீலி கிச்சடி செய்ய ஆந்திரா நண்பர் ஒருதடவை சொல்லித் தந்தார். ஊரில் இருக்கும்போது செய்து சாப்பிட்டது..

நல்ல பகிர்வு ஆசியாக்கா..

Asiya Omar said...

ராமலஷ்மி கருத்திற்கு மிக்க நன்றி.

கோவை2தில்லி கருத்திற்கு மிக்க நன்றி.

ஹேமா கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

ஸ்டார்ஜன் வாங்க,வருகைக்கு மகிழ்ச்சி.பீலிக் கிச்சடியா? புதுசாக இருக்கு.குறிப்பு கொடுங்க.அல்லது மின்மினி கிட்ட சொல்லி போடச் சொல்லுங்க.எங்க வீட்டில் இத்னை வாசனை சம்பா பச்சையில் ஆக்குவாங்க.ஸ்கூலிற்கு அனுப்பி விட்டு ஒரு நேரம் காலையில் டிபனாக கூட சாப்பிடுவதுண்டு.

schmetterlingwords said...

Salaams....

ungal bloggai pudhidhaaga follow seygiren... Ungal Tirunelveli samayal ellam arumai... Indha paruppu pulav seymuraiyai paarthaale nalla manamum rusiyum therigiradhu... Bookmark seydhullen... :)

Ongoing Event: Healthy Morsels - Pregnancy

Kalpana Sareesh said...

rombha superaana recipe

vanathy said...

super recipe.

Kanchana Radhakrishnan said...

அருமையான குறிப்பு ஆசியா. நன்றி.

Mahi said...

Nice recipe Akka..little different from arisi-paruppu sadham..looks delicious!

Asiya Omar said...

schmetterlingwords மிக்க நன்றி.
கல்பனா மிக்க நன்றி.
வானதி மிக்க நன்றி.
காஞ்சனா மிக்க நன்றி.
மகி மிக்க நன்றி.

Gopi Ramamoorthy said...

looks delicious!

இப்பவே சாப்பிடனும் போல இருக்கு

saleemyousuf said...

chachi update with tomato rice,lemon rice and bisibelabath.....