Friday, March 30, 2012

ஈசி சிக்கன் சுருட்டு கறி / Easy Chicken Curry.

தேவையான பொருட்கள்:
சிக்கன் துண்டுகள் - முக்கால் கிலோ
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 3
நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 6 நபர்.

செய்முறை:

சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடித்து,அத்துடன்,தயிர்,மஞ்சள் தூள்,ஒரு டீஸ்பூன் இஞ்சிப் பூண்டு,தேவைக்கு உப்பு சேர்த்து அரை மணி நேரமாவது விரவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கி சிவற ஆரம்பிக்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு வதங்கட்டும்.

நறுக்கிய தக்காளி,மிளகாய்,மல்லி இலை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கி கூட்டு போல் ஆனவுடன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

விரவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்,தண்ணீர் சேர்க்கக் கூடாது,சிக்கனில் ஊரும் தண்ணீரே போதும்.அடுப்பை மீடியமாக வைக்கவும்.மூடி கால் மணி நேரம் வேக வேண்டும்,இடையில் திறந்து பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

இப்படி சிக்கன் கூட்டோடு சுருண்டு எண்ணெய் மேலெழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும்.
சுவையான சிக்கன் சுருட்டு கறி ரெடி.
விரும்பிய முக்கிய உணவுடன் பக்க உணவாகப் பரிமாறவும்.நீங்கள் சமைக்கும் சிக்கன் அளவிற்கு தகுந்தபடி பொருட்கள் அளவை கணக்கிட்டு சேர்த்து கொள்ளவும்.
.

-ஆசியா உமர்.

18 comments:

விச்சு said...

சிக்கன் சுருட்டு கறி எளிமையான செய்முறை அழகான படங்களோடு.

ஸாதிகா said...

அருமையான சுருட்டுக்கறி ஆசியா.சிக்கனை இப்படி சுருட்டினார்ப்போல் சமைத்தால்த்தான் டேஸ்டாக இருக்கும்.

ராதா ராணி said...

ஆசியா..கடைசி படத்துக்கு முந்திய படத்தை பாக்குறப்ப நாவில் நீர் ஊற செய்யும் அந்த வாசனையை உணர முடிகிறது.சிறிது மாறுபட்ட இந்த குறிப்பும் நன்றாக உள்ளது..வரும் ஞாயிறு இந்த குறிப்பை செய்ய போகிறேன்..

Sangeetha Nambi said...

Drooling over it !

அமைதிச்சாரல் said...

நல்லாயிருக்கு ஆசியா..

savitha ramesh said...

Paakave romba nalla irukku.Super pics.

vanathy said...

சூப்பர் ரெசிப்பி.

Asiya Omar said...

நன்றி விச்சு!
நன்றி ஸாதிகா!
நன்றி ராதாராணி!
நன்றி சங்கீதா!
நன்றி அமைதிச்சாரல்!
நன்றி சவிதா!
நன்றி வானதி!

வருகைக்கு மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

சுருட்டு கறி சிக்கன் அருமை

Jaleela Kamal said...

நீங்க வெங்காயம் கட்பண்ணி வதக்கும் அழகே தனிதான்.

Asiya Omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

அசைவங்கள் சுருளச் சமைப்பதுதானே ருசி..நல்லதொரு குறிப்பு ஆசியா..

Asiya Omar said...

நன்றி பாசமலர்.வருகைக்கு மகிழ்ச்சி.

Yasmin said...

சிக்கன் சுருட்டு கறி அருமையா இருக்கு...

En Samaiyal said...

சிக்கன் சுருட்டு கறி ரொம்ப நல்லா இருக்கு ஆசியா

ஹேமா said...

எனக்கு இப்படிப் பிரட்டல் கறியாக இருப்பதுதான் பிடிக்கும் ஆசியா !

Asiya Omar said...

யாஸ்மின்
என் சமையல்
ஹேமா

வருகைக்கு மகிழ்ச்சி.நன்றி.

Kavitha said...

செய்து,சுவைத்தாகிவிட்டது..
அருமை..
குறிப்பிற்கு நன்றி