Saturday, March 24, 2012

ஈசி இறால் பிரட்டல் / Easy Prawn Roast

தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ மீடியம் சைஸ் இறால் வாங்கி சுத்தம் செய்து கழுவி எடுத்தால் அரைக்கிலோ கிடைக்கும்.
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
புளிக்காத கெட்டி தயிர் - 1-2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
காஷ்மீரி சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1-2
நறுக்கிய மல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்த இறாலுடன் சிறிது உப்பு,மஞ்சள்தூள்,தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும் ரெடி செய்த இறாலைப் போடவும்.பிரட்டி விடவும்.

வெந்து வரும் பொழுது தண்ணீர் இறாலில் ஊறும்.அத்துடன் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மல்லி இலை,பச்சை மிள்காய் சேர்க்கவும்.நன்கு பிரட்டு விட்டு தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்.

மிள்காய்த்தூள்,கரம் மசாலா சேர்க்கவும்.

நன்கு பிரட்டு விட்டு வேகவிடவும்.தண்ணீர் சுண்டி வரும்.

மூடி 5 நிமிடம் மிகச் சிறிய தீயில் வைக்கவும்.நல்ல பிரட்டினாற் போல் எண்ணெய் மேல் எழும்பி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான ஈசி இறால் பிரட்டல் ரெடி.
மசாலா,குழம்பு என்று செய்வதை விட ஈசியாக இப்படி செய்து திருப்தியாக சாப்பிடலாம்.இதனை விரும்பிய வற்றுடன் பக்க உணவாக பரிமாறவும்.

--ஆசியா உமர்.

14 comments:

FOOD NELLAI said...

விரும்பி உண்ணும் உணவு. நன்றி.

அமைதிச்சாரல் said...

அசத்தறீங்க ஆசியா.. பகிர்வுக்கு நன்றி.

Asiya Omar said...

நன்றி சங்கரலிங்கம் சார்.இறால் பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கும்.

நன்றி சாந்தி வருகைக்கும் கருத்திற்கும்.இது சிம்பிளாக கால்மணி நேரத்தில் முடிந்துவிடும்,டேஸ்ட்டும் எல்லாரும் சாப்பிடற மாதிரி இருக்கும்.

En Samaiyal said...

சுவையா இருக்கும் போல இருக்கு. இங்கெல்லாம் ப்ரோசன் எறா தான் கிடைக்கும் இவ்ளோ பெரிசாவும் இருக்காது. இருந்தாலும் ஒரு தடவ பண்ணி பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றி ஆசியா

ஹேமா said...

நான் இதே முறையில்தான் இறால் சமைக்கிறேன் ஆசியா !

Yasmin said...

பார்க்கும் போதே செய்ய ஆசையாக இருக்கு.கண்டிப்பா செய்து பார்கிரேன்.வாழ்த்துக்கள்....

விச்சு said...

இதுவரை இறால் சாப்பிட்டதே இல்லை. இதைப் பார்த்தவுடன் சாப்பிட ஆசையா இருக்கு.

ராதா ராணி said...

இதே முறையில்தான் நானும் செய்வேன்.கடைசியில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்துவிடுவேன்..அருமையாக உள்ளது பிரட்டல்..:)

Jaleela Kamal said...

இறால் பிரட்டல் கட்டி பருப்புடன் சூப்பராக இருக்குமே,
நேற்று நானும் இதே இறால் பிரட்டல் தான் கட்டிபருப்புடன்..
எனக்கு ரொம்ப பிடிச்சது.

ஸாதிகா said...

சிம்பிளா,ஸ்பைஸியாக உள்ளது ஆசியா.

Asiya Omar said...

என் சமையல்.
ஹேமா
யாஸ்மின்
விச்சு
ராதா ராணி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஜலீலா வாங்க கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா ஸ்பைசியாக இருக்காது.காஷ்மீரி சில்லி பவுடர் பார்க்கத்தான் சிவப்பாக இருக்கும்,காரம் குறைவாகவே இருக்கும்.ஈசியாக செய்யும் படியான குறிப்பு இது.

எம் அப்துல் காதர் said...

ஆஹா எனக்கு பிடித்த ஐட்டம்.

(அப்புறம்... 'வலி' .. 'யுடான்ஸ்'... 'நேசம்'... வாழ்த்துகள்)

Asiya Omar said...

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.
ஆமாம் ஆறுதல் பரிசு கிடைச்சிருக்கு.என்னால் நம்ப முடியலை.எல்லாப் புகழும் இறைவனுக்கே.