Friday, March 9, 2012

முட்டை இட்லி உப்புமா / Egg Idli Uppuma

தேவையான பொருட்கள்:
இட்லி - 2 - 4
முட்டை - 1
மிளகுப் பொடி - 2 பின்ச்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மல்லி கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - ஒரு நபர்.
இட்லி ரெடியாக இருந்தால் எத்தனை பேருக்கும் கால்மணி நேரத்தில் ரெடி செய்து விடலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் கருவேப்பிலை,நறுக்கிய மிளகாய், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
முட்டையை சிறிது உப்பு ,மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வேக வேண்டும்.நன்கு பிரட்டி விடவும்.

முட்டை வெந்தவுடன் உதிர்த்த இட்லியை சேர்க்கவும்.

நன்கு பிரட்டி விட்டு நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.உப்பு தேவைக்கு சிறிது சேர்க்கவும்.
சுவையான முட்டை இட்லி உப்புமா ரெடி.மாலை அல்லது காலை நேர டிபனாக பரிமாறலாம்.காலையில் மீதியான இட்லியை குழந்தைகளுக்கு இப்படி மாலையில் செய்து கொடுக்கலாம்.

இக்குறிப்பை சரஸ்வதியின்  Dish In 30 minutes ~ Breakfast Recipe with Giveaway இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

--ஆசியா உமர்.

17 comments:

Mahi said...

நல்ல ஐடியா ஆசியாக்கா!

Asiya Omar said...

மகி நல்ல சத்தும் கூட.இது மாதிரி இன்னும் எதில் எல்லாம் முட்டை சேர்க்க முடியுமோ அதில் சேர்த்து பிள்ளைகளுக்கு கொடுப்பதுண்டு.முட்டை வாடையே தெரியலை.

Yasmin said...

சுலபமான சுவையான குறிப்பு வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

இட்லியில் முட்டை சேர்த்தா?நல்லா அசத்துறீங்க தோழி...!

Yasmin said...

சிம்பிள் & சூப்பர்.வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அட...இட்லி மிஞ்சினா இப்பிடிச் செய்திடலாமே.நல்ல ஐடியாதான் ஆசியா !

vanathy said...

சூப்பர் ரெசிப்பி & ஐடியா.

Jeeva Nandam said...

இட்லி ஆம்லெட் தானே...

En Samaiyal said...

புதுசா இருக்கு முட்டை இட்லி உப்புமா. அடுத்து இந்த ரெசிபிய செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்

ரேவா said...

அட சகோ சூப்பரான ரெசிப்பி, தினம் தினம் இட்லியா சாப்பிடுறதுக்கு இந்த மாதிரி செஞ்சு சாப்டா நல்லாத்தான் இருக்கும்,,,, நன்றி சகோ :)

ராதா ராணி said...

நல்ல ஐடியா..இட்லி மீந்து போனாலும் போகலையின்னாலும் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு சாப்பிடலாம்..ஐடியாக்கு மிக்க நன்றி ஆசியா.

Kalpana Sareesh said...

wow too good recipe..

விச்சு said...

வெறுமனே ஆம்லெட்தான் பொடுவோம் இது நல்ல ஐடியா..

athira said...

நல்ல ஐடியா, சாதாரண உப்புமாவையும் இப்படிச் செய்திடலாம் இனி.

பாச மலர் / Paasa Malar said...

வித்தியாசமாக இருக்கிறது ஆசியா...

அமைதிச்சாரல் said...

வித்தியாசமான டிபன்..

Asiya Omar said...

யாஸ்மின் மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

ஜீவன் மிக்க நன்றி.

என் சமையல் மிக்க நன்றி.

ரேவா மிக்க நன்றி.

ராதா ராணி மிக்க நன்றி.

கல்பனா மிக்க நன்றி.

விச்சு மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

பாசமலர் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.