Thursday, March 15, 2012

முட்டை மிளகு மசாலா / Egg pepper Masal

தேவையான பொருட்கள்:
அவித்த முட்டை - 6
பெரிய வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
மல்லி,கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை  டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன்,நறுக்கிய வெங்காயம் போடவும்,நன்கு சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்,.
அத்துடன் கீறிய பச்சை மிளகாய்,நறுக்கிய மல்லி கருவேப்பிலை,தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து மூடி வைத்தால் ஒரு நிமிடத்தில் தக்காளி மசிந்து கூட்டு போல் ஆகிவிடும்.
அத்துடன் மல்லித்தூள்,மிளகுத்தூள்,சீரகத்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.கால் கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேல் வர வேண்டும்.
அவித்த முட்டையை இப்படி நாலாப்பக்கமும் கீறி வைக்கவும்.

ரெடியான மசாலாவில் அவித்த முட்டையை போட்டு ஒரு போல் மசாலா முட்டையில் ஒட்டிவரும் படி பிரட்டி எடுக்கவும்.மல்லி,கருவேப்பிலையை நறுக்கி எண்ணெயிலேயே போடுவதால் மசாலா மணமாக இருக்கும்.பார்க்க இந்த நிறம் வர வேண்டும்.உப்பு பார்த்து சிறிதளவு போடவும்.கூடினால் மசாலா கடுத்து விடும்.
சுவையான முட்டை மசாலா ரெடி.

இதனை உங்கள் விருப்பமான உணவுடன் பக்க உணவாக பரிமாறலாம்.


-ஆசியா உமர்.


18 comments:

சே.குமார் said...

ஈசியா இருக்கே... நாம செய்து பார்த்துவிடலாம்...

வாழ்த்துக்கள் அக்கா.

சிநேகிதன் அக்பர் said...

பேச்சிலருக்கேற்ற சமையல் குறிப்பு. நன்றி!

FOOD NELLAI said...

முட்டை மசாலா-கம கம.

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் * அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்* அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... மேலே மூவருக்கும் 3 முட்டை போனால்.. மீதி மூன்றும் எனக்குத்தான்...

அறிந்திருக்கிறேன், ஆனால் இப்பூடிச் செய்ததில்லை.. அவித்தால் போதுமே.. லபக்கென உள்ளே போயிடும்:)).. விருந்தின்போது செய்ய சூப்பராக இருக்கும்..

ஸாதிகா said...

நான் நாளைக்கே இதெ முரையில் சமைத்துப்பார்த்து விடுகின்றேன்.அருமையாக இருக்கு தோழி.

Mahi said...

மசாலா நல்லா இருக்கு ஆசியாக்கா!

விச்சு said...

மசாலாவைப் பார்த்தே மயங்கிட்டேன்.

ராதா ராணி said...

மிக அருமையாக உள்ளது..இன்னைக்கு லஞ்சுக்கு செய்துடறேன்.ஆமா,கடைசி படத்துல முட்டை மசாலா பக்கத்துல ரோல் ரோலா இருக்கிற டிஷ் பேர் என்னது ஆசியா..அதுவும் நல்லா இருக்கு.:)

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குது குறிப்பு..

Sangeetha Nambi said...

Masala will taste yum along with egg for sure......

ராஜி said...

முட்டை மசாலா பார்க்கும்போதே எச்சிலூறுதே. செஞ்சு பார்த்துட வேண்டியதுதான் பகிர்வுக்கு நன்றி

Kalpana Sareesh said...

arumayaana egg curry..

S.Menaga said...

இந்த மாதிரி வெங்காயம்,தக்காளி சேர்த்து செய்த மசாலா தான் பிடிக்கும்,அதுவும் அந்த கடைசி படம் சூப்பர்ர்!!

Yasmin said...

பார்க்கும்போதே சாபிடவேன்டும் போல இருக்கு.வாழ்த்துக்கள்....

Asiya Omar said...

தம்பி குமார்
சகோ.அக்பர்
சங்கரலிங்கம் சார்
அதிரா
ஸாதிகா
மகி
விச்சு
ராதாராணி
அமைதிச்சாரல்
சங்கீதா
ராஜி
கல்ப்னா
மேனகா
யாஸ்மின்

அனைவரின் வருகைக்கும் மகிழ்ச்சி.நன்றி.

Jaleela Kamal said...

வாசனை மனமும் அருமையாக இருக்கு

பாச மலர் / Paasa Malar said...

எனக்கு இது மிகவும் பிடித்த ஒன்று.

Asiya Omar said...

நன்றி ஜலீலா.
நன்றி பாசமலர்.