Tuesday, March 6, 2012

ஐடியா பன்/ப்ரெட் பிஸ்கட் - Idea Bread / Bun Biscuit

ப்ரெட் / பன் பிஸ்கட்
தேவையான பொருட்கள்;
ப்ரெட் - 4 துண்டுகள்
அல்லது இரண்டு பன்
சீனி - 4 + 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1-2 டேபிள்ஸ்பூன்


ப்ரெட்டை விரும்பினால் ஓரத்தை கட் செய்து விட்டு சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.அத்துடன் உங்க ருசிக்கு தகுந்த படி சீனியை சேர்த்து கலந்து கொள்ளவும்.அதனுடன் நெய்யையும் சேர்த்து கலந்து விடவும்.

ஒரு பேக்கிங் பவுலில் சிறிது நெய் தடவி ரெடி செய்த ப்ரெட் சீனி கலவை ஒரு போல் சமமாக பரத்திஅழுத்தி வைக்கவும்.எலெக்ட்ரிக் அவனில் மீடியம் ப்லேம் செட் செய்து 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.

ஆறியவுடன் இப்படி திருப்பி ஒரு கட்டரில் போடவும்.
சதுர துண்டுகளாக கட் செய்யவும்.

ஒரு பாத்திரத்தில் விரும்பினால் சிறிது சீனி அதே அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு உருகி பாகு போல் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்.

ரெடி செய்த சீனிப் பாகை கட் செய்த ப்ரெட் பிஸ்கட்டின் மீது தடவவும்.தடவாமலும் சாப்பிடலாம்.
இதனை ப்ரெட்டை விட பன்னில் செய்யும் பொழுது ருசி செமையாக இருக்கு.செய்து பாருங்க.குட்டீஸ்கு மிகவும் பிடிக்கும்.
என் மகளோட ஆஃப்கான் ஃப்ரெண்ட் ஆர்சு சொல்லிக் கொடுத்து மகள் செய்தது.இது மாதிரி ஈசி ஈசி ஸ்நாக்ஸ் அவளாக செய்து எங்களுக்கு தருவது வழக்கம். ட்ரூ நைஸ் பிஸ்கட் மாதிரி கொஞ்சம் டேஸ்ட் இருக்கும்.

--ஆசியா உமர்.

25 comments:

Jaleela Kamal said...

பார்க்கவே அழகாகா இருக்க்கு,
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
கலக்கல் தான்

Asiya Omar said...

நன்றி ஜலீலா உடன் கருத்திற்கு.மகிழ்ச்சி.

சிநேகிதன் அக்பர் said...

nice

எம் அப்துல் காதர் said...

இது மகளின் கைவண்ணமா? ஓ.. அசத்தல் + வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

மகளுக்கு என் வாழ்த்துகள்:)! அருமையான குறிப்பைக் கொடுத்ததற்கு எங்கள் நன்றியும்,

கோவை2தில்லி said...

மகளுக்கு வாழ்த்துகள். நல்ல ரெசிபி தான். செய்து பார்க்கலாம்.

Sangeetha Nambi said...

semma super...

athira said...

சூப்பர் ஆசியா... ச்ஷோ ஈசியான குறிப்பு. செய்துதான் பார்க்கோணும்.

கலரும் சூப்பர்.

பிரெட்டைக் காயவைத்தோ அல்லது ரோஸ்ட் பண்ணினல்தானே அரைக்க முடியும்? இங்கு பிரெட் காயவே காயாது... தண்ணித்தன்மையாகி பழுதாகும்.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நல்லா இருக்கு....

வீட்டிலும் பார்த்து விட்டதால் செய்வார்கள் என நினைக்கிறேன் :)

சே.குமார் said...

அருமையான குறிப்பைக் கொடுத்ததற்கு மருமகளுக்கு என் வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி அக்கா.

vanathy said...

சூப்பரா இருக்கு. நான் எப்போதும் வீட் ப்ரெட் தான் வாங்குவேன். வெள்ளை ப்ரெட் பார்க்க ஆசையாக இருக்கு.

Yasmin said...

பிரெட் பிஸ்கட் நல்லா இருக்கு.
வாழ்த்துகள்!

Asiya Omar said...

சகோ.அக்பர்
சகோ.அப்துல் காதர்
ராமலஷ்மி
கோவை2தில்லி
சகோ.வெங்கட் நாகராஜ்
தம்பி குமார்
அதிரா
சங்கீதா
வானதி
யாஸ்மின்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Mahi said...

ஈஸி & சிம்பிள் இனிப்பு ஆசியாக்கா! சூப்பரா இருக்கு,ருமானாவிடம் பாராட்டுக்களை சொல்லிருங்கோ!;)

விச்சு said...

"சாஃப்"பிட்டுபார்த்திருவோம்.

ஸாதிகா said...

கண்டிப்பாக செய்து பார்த்து விடுகின்றேன் தோழி.

ஸாதிகா said...

ஜூனியர் ஆசியாவும் விரைவில் ஒரு வலைப்பூ திறந்துவிடுவா

Asiya Omar said...

மகி மிக்க நன்றி.

விச்சு செய்து பாருங்க.இது குட்டீஸ் சமாச்சாரம்.

ஸாதிகா நான் படம் எடுத்தாலே அவ படம் எடுத்திடுவா..ப்ளாக் எங்கே ஆரம்பிக்கிறது.

Aruna Manikandan said...

so sweet of ur daughter asiya :)
Thx. for sharing !!!!

FOOD NELLAI said...

இளைய சமுதாயத்தின் இனிப்பு தயாரிப்பு.

Rathai said...

Super recipe. That's an excellent way to use up leftover bread. Thanks for the idea. Summa solla koodathu. Unmaiyilaye samaithu asathureenga ponga.

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Priyaram said...

paarkkave crispy yaa super raa irukku...

Kanchana Radhakrishnan said...

மகளுக்கு என் வாழ்த்துகள்.

ஹேமா said...

ஆசியா உங்க மகளுமா...வீட்ல சமையல் அட்டகாசம்தன்னு
சொல்லுங்க !