Wednesday, March 21, 2012

அயிலக்கறி / Mackerel Curry

இது அறுசுவைத்தோழி தளிகாவின் குறிப்பு. மிக்க நன்றி தளிகா.

 • மீன் இந்த சைஸ் பார்த்து வாங்கிக்கோங்க.அது தான் ருசி.பெரிய சைஸ் எங்களுக்கு பிடிப்பதில்லை.அயிலா நம்ம கானாங்கெழுத்தி தான்.
 • தேவையான பொருட்கள்;
 • மேக்கரேல்/அயிலா மீன் - அரை கிலோ
 • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
 • அல்லது சின்ன வெங்காயம் - 3/4 கப்
 • தக்காளி - ஒன்று
 • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் - 5
 • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
 • மல்லித் தூள் - 3/4 - 1 தேக்கரண்டி
 • தேங்காய்ப் பால் - ஒரு கப்
 • தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
 • தாளிக்க:
 • தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
 • கறிவேப்பிலை - 2 கொத்து
மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். தேங்காயை ஒன்றாம்பால், இரண்டாம் பால் என்று தனித்தனியே அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காயவும் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாயை வரிசையாக இரண்டிரண்டு நிமிடம் வதக்கி அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் இரண்டாம் தேங்காய்பாலையும் ஊற்றி உப்பு சேர்த்து கொதி வரும்பொழுது மீன் சேர்க்கவும்.
மீன் சேர்த்து 5-10 நிமிடம் சிறு தீயில் கொதிக்கட்டும்.

முதல் திக்கான தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

சிறிது நுரை கூடி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

பின் தாளிப்பில் கொடுத்துள்ள கறிவேப்பிலை, வெங்காயத்தை 2 தேக்கரண்டி எண்ணெயில் நன்கு பொன்னிறமாக வதக்கி சேர்க்கவும்.
சுவையான அயிலக்கறி ரெடி.

அயிலக்கறியை விருப்பமான உணவுடன் பக்க உணவாக பரிமாறவும்.


---ஆசியா உமர்.

18 comments:

Sangeetha Nambi said...

Wow ! Tasty :)

ஸாதிகா said...

புளியே சேர்க்காமல் வித்தியாசமாகத்தான் உள்ளது ஆசியா.

athira said...

ம்க்கரல் ஒருவித சுவையான மீன். இங்கு எங்கட ஆற்றில்(கடலில்) பிடிக்கிறவர்கள். ஆனால் இங்கத்தைய மக்ரல்.. பெரிசூஊஊஊஊஊஊ...

நல்ல சுவையான குறிப்பு ஆசியா+ நன்றி தளிகா.

Asiya Omar said...

சங்கீதா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா தக்காளியின் சுவையுடன் இருக்கும்.கருத்திற்கு நன்றி.

அதிரா பெரிய மீனும்சுவை தான்,நல்ல சத்தும் கூட. நன்றி, மகிழ்ச்சி.

S.Menaga said...

கானாங்கெழுத்திதான் அயிலைமீனா?? இப்போதான் தெரிந்துக் கொண்டேன் நன்றிக்கா...நானும் பெரிய சைசில்தான் பார்த்திருக்கேன்..குழம்பு பார்க்கவே அருமையா இருக்கு.

ராதா ராணி said...

ஆஹா! எனக்கு பிடிச்ச மீன் குழம்பு..அதுவும் தேங்காயில் பாலெடுத்து சேர்த்தால் அதன் சுவையே தனிதான்.

Yasmin said...

அருமை.ரொம்ப சூப்பரா இருக்கு. நல்லா செய்தும் காட்டி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

schmetterlingwords said...

Ayilai meen curry asaththalaaga irukkiradhu...

Enakku innum namma ooru meengal palavatrai theriyaadhu... amma veetil irukum bodhu samayalil periya akkarai kaatavillai.. ippo therindhu kolla aarvamai irukkiradhu... indha mackerel vaangi inge seydhu paarkiren... nanri.. :)

Asiya Omar said...

நன்றி மேனகா!
நன்றி ராதாராணி!
நன்றி யாஸ்மின்!
நன்றி schmetterlingwords!

தாங்களின் கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

தளிகா said...

இப்போ மும்மடங்கு சந்தோஷ்ம்..ஒண்ணு என் குறிப்பு செய்தது..இன்னொன்னு குறிப்பின் லின்கும் தந்து என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு..மூன்று எங்க வீட்டுக்கு கிச்சனுக்கு எப்ப வந்தீங்கன்னு யோசிக்க வைக்கிற மாதிரி அச்சு அசல் அப்படியே நான் செய்த அதே முறை,நிறம்,மணமும் வருது இப்போ;-)
ரொம்ப சந்தோஷம் ஆசியாக்கா

ஹேமா said...

புளி விடாமல் மீன்குழம்பா.உடம்புக்கும் நல்லதுதான் புளி தவிர்ப்பது !

விச்சு said...

தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது பார்க்கவே அழகா இருக்கு.

Asiya Omar said...

தளிகா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

விச்சு மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

குறிப்பும் புகைப்படமும் நன்றாக இருக்கிறது ஆசியா! புளி சேர்க்காத குழம்பு!

Asiya Omar said...

மிக்க நன்றி மனோ அக்கா.உங்களுடைய சமையல் எப்பவும் சூப்பர்.

Gopi Ramamoorthy said...

மாக்கரல் சாப்பிட்டதில்லை. நல்லா இருக்கும் போலயே.

இனி எங்கே சாப்பிடறது? கல்யாணம் ஆனதுக்குப் பிறகு நான் வெஜ் சாப்பிடுவதை நிறுத்தியாச்சி.

மாதேவி said...

பார்க்க நன்றாக இருக்கின்றது ஆசியா.

மீன்சமையல் எங்கள் வீட்டில் சாப்பிட ஒருவரும் இல்லை.

Jaleela Kamal said...

மீனை பார்க்கவே சூப்பராக இருக்கு ஆசியா

நானும் கேரளா ரெசிப்பிக்க்கா தளி ரெசிபி தான் பார்த்து வைத்துள்ளேன்.