Saturday, March 3, 2012

மட்டன் போன் புலாவ்(குக்கர் முறை)/ Mutton Bone Pulav

தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசி - அரைக்கிலோ
ஆட்டு எழும்பு - அரை- முக்கால் கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
நறுக்கிய மல்லி புதினா - தலா ஒரு கையளவு
பச்சை மிளகாய் - 4
சிறிய எலுமிச்சை பழம் - 1
த்யிர் - 2டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
ஏலம் -3
பட்டை-2 துண்டு
கிராம்பு - 4
சோம்பு - அரைடீஸ்பூன்
மிளகு - அரைடீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவைக்கு.

ஆட்டு எழும்பை தேவையற்ற சவ்வு,கொழுப்பு நீக்கி சுத்தமாக கழுவி தண்ணீர் வடிய வைக்கவும்.அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும்.நறுக்க வேண்டியவற்றை தயார் செய்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காயவும்பட்டை,கிராம்பு,ஏலம்,சோம்பு,மிளகு,
பிரியாணி இலை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு சிறிது வதக்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதங்க விடவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து,சிறிது உப்பு சேர்க்கவும். பாதி மல்லி புதினா சேர்க்கவும்.வதங்கிவிடும்.மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விட்டு மட்டன் எழும்பை சேர்க்கவும்.
தயிர் சேர்த்து பிரட்டி விடவும்.
அரிசிக்கு ஒரு மடங்கு தண்ணீர் சேர்த்து கொதி வரட்டும்.

மட்டன் எலும்பு சேர்த்து கொதி வரவும் கரம் மசாலா சேர்க்கவும்.மூடி முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து விடவும். 20 நிமிடம் வேகட்டும்.

வெந்து இப்படி காணப்படும்.மீதி மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

இன்னொரு அளவு தண்ணீர் சேர்க்கவும்.ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும்.நன்கு கொதி வரவும் உப்பு சரி பார்த்து எலுமிச்சை சாறு கலந்து குக்கரை மூடி சிம்மில் 10 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.அல்லது ஒரு விசில் வந்து அடுப்பை அணைக்கவும்.
ஆவியடங்கி குக்கரை திறந்தால் இப்படி இருக்கும்.

பிரட்டி விட்டு பரிமாறவும்.

சுவையான மட்டன் போன் புலாவ் ரெடி.
இதனை ஆனியன் ரைத்தா அவித்த முட்டையுடன் பரிமாறலாம்.

--ஆசியா உமர்.


12 comments:

ஸாதிகா said...

அருமையான பிரியாணியை செய்து வெங்காயப்பச்சடி அ கோ மு தந்தூரி சிக்கன் என்று பறிமாறி அசத்தி விட்டீர்கள் ஆசியா.சூப்பர்.

Asiya Omar said...

ஸாதிகா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.இங்கு மட்டன் ஒரு கிலோ 40 திர்ஹம்,ஆனால் மட்டன் போன் கிலோ 5 திர்ஹம் தான்,ஆனால் சுவையும் சத்தும் எலும்பில் தான் இருக்கிறது.இங்கு மட்டன் சாப்பிடவும் ஆள் இல்லை.சரி முயற்சி செய்து பார்ப்போம்னு செய்தேன்,என்னவொரு ஒரு மணம்,கை நாள் முழுவதும் மணந்தது.

பாச மலர் / Paasa Malar said...

மட்டன் போன் புலாவ்...வித்தியாசமாக இருக்கிறது....

Yasmin said...

ரொம்ப சிம்பிளான சூப்பரான மட்டன் போன் புலாவ்,வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

பாசமலர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

வாங்க யாஸ்மின் உங்க ப்ளாக் சூப்பராக இருக்கு.வலையுலக சமையலில் அசத்த வாழ்த்துக்கள்.

S.Menaga said...

ஆஹாமட்டன் எலும்பில் புலாவ் செய்து அசத்திடீங்க..

ஹேமா said...

ஆசியா...உங்கள் படத்தோடு கூடிய பதிவோடு உங்கள் பின்னூட்டமும் சமைத்துப் பார் என்றே சொல்கிறது !

FOOD NELLAI said...

வார இறுதி ஸ்பெஷல்.

Asiya Omar said...

மேனகா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஹேமா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சகோ.சங்கரலிங்கம் வருகைக்கு மகிழ்ச்சி.

Sangeetha Nambi said...

romba nalla iruku...

கலை said...

superaa solli irukenga akaa....try panren naanum

Jaleela Kamal said...

பரிமாறி மாறிய விதம் அருமை.
அதுவும் குக்கரில் செய்தால் சுவை இன்னும் கம கமக்குமே