Tuesday, March 27, 2012

முள்ளங்கி கீரை பருப்பு /Radish Greens Dal

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1
முள்ளங்கி கீரை - 2 கப்
பருப்பு - 50 கிராம்
பூண்டு - 4 பல்
தக்காளி - 1
மஞ்சப் பொடி - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைக்க:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம்,சோம்பு - தலா கால் டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1

தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - தலா அரைடீபூன்
சின்ன வெங்காயம் - 5 நறுக்கியது.
பெருங்காயப் பொடி -கால் டீஸ்பூன்

நான் எப்பவும் ஒரு கீரை பேய், ஃப்ரெஷாக எங்கே கீரையைக் கண்டாலும் விடுவதில்லை.இந்த சத்தான முள்ளங்கி கீரை கிடைத்தால் விடுவேனா என்ன?


முள்ளங்கி,கீரையை மண் போக அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
றவைத்த பருப்பை நறுக்கிய பூண்டு பல் மஞ்சப் பொடி சேர்த்து வேகவைக்கவும்.


சீரகம் சோம்பு,வற்றல் போட்டு மிக்ஸியில் பொடித்து விட்டு ,தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

பருப்பு மலர்ந்து வரும் பொழுது நறுக்கிய முள்ளங்கி கீரையை சேர்க்கவும்.சிறிது நேரம் வேக விடவும்.
நறுக்கிய தக்காளி,சிறிது உப்பு சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து வேகட்டும்.
அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.கலந்து விடவும்.

நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் நெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு சேர்த்து வெடிக்கவும்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பெருங்காயப் பொடி சேர்க்கவும்.சிவந்து வரவும் ,தாளித்ததை வெந்த கீரை பருப்பில் கொட்டவும்.

சுவையான சத்தான முள்ளங்கி கீரை பருப்பு ரெடி.
ப்லைன் சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

--ஆசியா உமர்.

19 comments:

Sangeetha Nambi said...

i need it right away !

Gopi Ramamoorthy said...

ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வரேன்.

முள்ளங்கிக் கீரையை நிறைய பேர் வீணாக்கி விடுவார்கள். நீங்கள் அதையும் உபயோகித்து ஆரோக்கியமான டிஷ் ஒன்றைச் செய்திருக்கிறீர்கள்.

இப்பவே சாப்பிடனும் போல இருக்கு

Kalpana Sareesh said...

wonderful greens dhal nice preparation

அமைதிச்சாரல் said...

ஜூப்பர் ரெசிப்பி ஆசியா.. முள்ளங்கிக்கீரையை மட்டும் தனியா பருப்பில் சேர்ப்பேன். இது புதுசாவும். பார்க்கறதுக்கே அருமையாவும் இருக்கு..

FOOD NELLAI said...

கிழங்குடன் கீரையும் சேர்த்துப் பயன்படுத்த அருமையான வழி.

ராதா ராணி said...

மண் பாத்திரத்தில் கீரை செய்வதும் தனி ருசிதான்.முள்ளங்கி,கீரையோடு விற்பனைக்கு வருவது இங்கு அரிது..கிடைக்கும் சந்தர்ப்பத்தில் செய்து பார்த்துவிடுகிறேன்.அழகாக கலர்புல்லாக சாப்பிட தோன்றுகிறது.:)

Jaleela Kamal said...

அந்த் மண் சட்டிபார்க்கவே அருமையாக இருக்கு

எனக்கு ஒன்று வாங்கி பார்சல் அனுப்புங்களே..

மருத்துவ குனமுள்ள பருப்பு அருமை

Asiya Omar said...

சங்கீதா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சகோ.கோபி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

கல்பனா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றி சங்கரலிங்கம் சார்.

மிக்க நன்றி ராதா,செய்து பாருங்க.

Asiya Omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.அபுதாபி அல் ஆதிலில் வாங்கியதாக என் தோழி லஷ்மி தந்தாங்க.இனி போகும் பொழுது இருந்தால் உங்களுக்கு வாங்கி அனுப்புகிறேன்.

ஸாதிகா said...

சத்துமிகு சை டிஷ்.கண்டிப்பாக சப்பாத்திக்கு செய்து பார்க்கவேண்டும்.

ஸாதிகா said...

சத்துமிகு சை டிஷ்.கண்டிப்பாக சப்பாத்திக்கு செய்து பார்க்கவேண்டும்.

கோவை2தில்லி said...

நானும் இந்த கீரையை வெங்காயம், தக்காளியுடன் சப்ஜி செய்து சப்பாத்திக்கு தந்திருக்கிறேன். ஆனா இந்த ரெசிபி பார்க்கும் போதே ஆசையாக இருந்தது. படங்களுடன், செய்முறை பிரமாதம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

செய்முறைகளைப் படித்ததுமே, படங்களைப் பார்த்ததுமே, உடனே செய்து சாப்பிட்டது போல மகிழ்ச்சி ஏற்பட்டது.

அழகான பகிர்வு. ஆரோக்யமான கீரை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல செய்முறை.....

நேசம் - உடான்ஸ் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்.

Mahi said...

பருப்பை விட அந்த மண்சட்டிதான் என் கவனத்தை இழுக்குது ஆசியாக்கா!;)

சூப்பரா இருக்கு பருப்பு! தேங்காயெல்லாம் அரைச்சு விட்டு சூப்பரா செய்திருக்கீங்க.கீரையை மட்டும் தனியாச் சமைக்கும் அளவு முள்ளங்கி வாங்கினா மாசக்கணக்கில தாங்கும் அளவு வாங்கணும்..அவ்வ்வ்!! அவ்வளவூண்டு கீரைதான் இங்கே முள்ளங்கில இருக்கும்.
எனி ஆல்டர்னேட்டிவ் ஐடியா?! ;)

ஹேமா said...

சத்தான உணவு.காரமும் குறைவு.நல்லாயிருக்கும் !

விச்சு said...

முள்ளங்கி கீரையும் சமைப்பாங்களா... சாப்பிட்டதே இல்ல. நீங்க சொன்ன விதமே நல்லாயிருக்கு.

மாதேவி said...

அருமையான சத்தான உணவு ஆசியா.

Jaleela Kamal said...

ஓ அல் ஆதிலிலா நான் இங்கு இருக்கான்னு பார்க்கீறேன்

நானும் கீரை பேய் தான் ( ஆனால் பாலக்கீரை பேய் ஹிஹி)

அதுவும் இல்லாம கொத்து மல்லி கருவேப்பிலை ஸ்டாக் இருந்தால் கூடா பச்சபச்சேன்னு பார்த்துட்டா வாங்கிடுவேன்.