Wednesday, March 14, 2012

உதிரி மீன் வறுவல் / Shredded Fish Fry

மாதத்தில் ஏதாவது ஒரு சனிக்கிழமை மீன் மார்க்கெட்டிற்கு அவர் அழைத்து செல்வது வழக்கம்.அப்ப ஃப்ரீஸர் லோட் ஆகிவிடும்.
குழம்பிற்கு,பொரிக்க,அவிக்க,கிரில்,சூப்பிற்கு என்று பிரித்து கழுவி எடுத்து மசாலா தடவி வைப்பதற்குள் போதுமென்றாகிவிடும்.அதனால் ஃபிஷ் ரெசிப்பியை தவிர்க்க முடியலை.
சமையற்கட்டில் எவ்வளவு சமைத்தாலும், மீன் சமைத்த மாதிரி வாடை எல்லாம் இருக்காது.சாப்பிடும் பொழுது மட்டும் மணக்கும்.ஏனெனில் மாதத்திற்கு ஒரு முறை தான் மீன் கழுவல் வேலை.அப்புறம் தேவைக்கு வெளியே எடுத்து சமைப்பதால் இது ஒரு சௌகரியம்.ஃப்ரெஷாக மீன் வாங்கி இப்படி சுத்தம் செய்து முறைப்படி வைத்துக் கொண்டால் அருமையாக ருசியாக சமைத்து சாப்பிடலாம்.மீன் சத்தை பற்றி நான் சொல்ல வேண்டுமா? எங்க வீட்டிலும் சரி,எங்க மாமா வீட்டிலும் சரி மீன் சமையல் அதிகம் இருக்கும்.

எனக்கு தூத்துக்குடியில் கேம்ப் டூவில் ஆரம்பித்த பழக்கம்.ஒரு நாள் அவருடைய நண்பர் படகில் பொழுது போக்காக மீன் பிடிக்க சென்று நான்கு கிலோ ஒரே மீன் மஞ்சப் பாரை கொண்டு வந்து தந்தார்.வெறும் 90 ரூபாய்க்கு.அதில் இருந்து மீன் சுத்தம் செய்து பதப்படுத்தி சமைப்பதில் பழகியது.மீன் பற்றிய நினைவுகள் நிறைய இருக்கு.அப்ப அப்ப இனி பகிர்ந்தால் போச்சு.

சரி இனி குறிப்பு.
தேவையான பொருட்கள்:
பொரித்த மீன் - 2 துண்டு (200 கிராம்)
பூண்டு - 4 பல் நறுக்கியது
வெங்காயம் - 1
கொடை மிளகாய் சிறியது - 1
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 பின்ச்
கார்ன் ஃப்லோர் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மீனை வழக்கம் போல் பொரிக்க மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு,லைம் ஜூஸ் சேர்த்து விரவி பொரித்தெடுத்தது அல்லது அதனை அவித்தும் எடுக்கலாம்.

மீனில் தோல் முட்களை நீக்கி விட்டு உதிர்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு,கொடைமிளகாய்,வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
உதிர்த்த மீனை போடவும்.பிரட்டி விடவும்.
மஞ்சள்,மிளகாய்,மிளகுத்தூள்களை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.விரும்பினால் லைம் சிறிது சேர்கலாம்.
வறுத்தது போல வர கார்ன் ஃப்லோரை தூவி நன்கு நல்ல பிரட்டி பிரட்டி எடுக்க வேண்டும்.
சுவையான உதிரி மீன் வறுவல் ரெடி.
இதனை சாதம் சப்பாத்தி,குபூஸ்க்கு சைட் டிஷாக சாப்பிடலாம்.ப்ரெட் சாண்ட்விச்,சாப்பாத்தி ரோல் செய்யவும் பயன் படுத்தலாம்.

--ஆசியா உமர்.


19 comments:

Jaleela Kamal said...

உதிரி மீன் புட்டு அருமை, எனக்கும் மீன் சமையல் என்றால் அவ்வளவு பிரியலம்,

Kanchana Radhakrishnan said...

nice pictures.

athira said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆ.. மீன் பொரித்தாலே போதுமே.. அதிலும் வறுவல் இப்படிச் செய்யும்போது சொல்லவா வேண்டும்.

எங்கள் வீட்டில் மீன் பிடிக்கவே பிடிக்காது(என்னைத்தவிர யாருக்கும்), ஆனால் நான் வாரம் ஒருநாளாவது செய்வேன், உடம்பிற்கு நல்லதுதானே... அண்டைக்குப் பாருங்கோ.. முகம் அப்படியே சோர்ந்து போனபடிதான் சாப்பாடு உள்ளே போகும்:))).. ஹா..ஹா..ஹா... அதையும் ரசிக்கோணும்:))

ராதா ராணி said...

உங்க ஐடியா நல்லாத்தான் இருக்கு...தமிழ் நாட்டில இருக்கிற பவர்கட்டிற்கு இங்க இது சாத்தியப்படுமா.பவர்கட் சரியான பிறகு உங்க ஐடியாவை பாலோ பண்ணறேன்.

ராதா ராணி said...

கொலஸ்ட்ரால் இருக்கிறவங்க உங்க முறைபடி மீனை அவித்து உதிரி மீன் செய்யலாம் .நல்லா இருக்கு,செய்து பார்க்கிறேன்.:)

Asiya Omar said...

ஜலீலா முதல் கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

காஞ்சனா வருகைக்கு மகிழ்ச்சி.

அதிரா வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஆஹா!ராதா வருகைக்கு நன்றிங்க.
ஊரை நினைவுபடுத்தியது :(((..
விரைவில் சரியாகும் என்று நம்புவோம்.

ஸாதிகா said...

மீன் ஸ்மெல்லுக்காகவே நாங்களும் பதினைந்து நாட்களுக்கொரு முறைதான் மீன் வாங்கி மொத்தமாக கிளீன் செய்து பீரீஸ் பண்ணி விடுவோம்.அதுதான் சமைப்பதுக்கு வசதி.

எனக்குத்தான் மீன் சாப்பாடு அவ்வளவாக பிடிக்காது.பிடித்தமில்லாத மீன் சமையல் அன்று லஞ்சுக்கு மேகியுடன் அநேகமாக என் லஞ்ச் முடிந்து போகும்.

தோழி,இதுவரை நான் மீன் கழுவவும் கற்றுக்கொள்ள வில்லை.சமையலில் உங்களுடன் கம்பேர் செய்தால் நான் ஜீரோதான் போலும்.

Asiya Omar said...

அய்யோ! ஸாதிகா உங்க சமையல் குறிப்புகளும் செய்முறையும் எப்பவும் ரசிப்பதுண்டு.எதிலும் ஒரு நேர்த்தி இருக்கும்.எத்தனை பகிர்ந்து இருக்கீங்க.நட்பு சமையலும் உங்க குறிப்புக்களையும் பரிமாறிய விதம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு.கருத்திற்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

அருமையாயிருக்கு குறிப்பு..

Anonymous said...

superaa irukku akka...naanum try panren

Yasmin said...

அருமையான குறிப்பு.
நானும் இந்த உதிரி மீன் வறுவல் ட்ரை செய்து பார்க்கிரேன்.

சே.குமார் said...

அருமையாயிருக்கு குறிப்பு.

Asiya Omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

கலை செய்து பாருங்க ,மிக்க மகிழ்ச்சி.

யாஸ்மின் செய்து பாருங்கபா,மிக்க மகிழ்ச்சி.

தம்பி குமார் மிக்க நன்றி.

Kavitha said...

ஆசியா,
ரொம்ப நன்றாக இருக்கு,மீன் எப்படி செய்தாலும் சாப்பிடுவேன்..
அவசியம் செய்துவிட்டு சொல்கிறேன்..

குட்டிப்பையா|Kutipaiya said...

pathapaduthurathu freeze panrathu patriyum detail'aaga pagirndhu kolungalen! enai pol zero'kaluku romba useful'a irukum!

ஹேமா said...

மீன் வறுவல்....வாசனையும் சுவையும் நினைக்கவே வாயூறுதே !

Gopi Ramamoorthy said...

வித்தியாசமா இருக்கு

Gopi Ramamoorthy said...

வித்தியாசமா இருக்கு