Monday, April 9, 2012

பேச்சிலர்ஸ் சிக்கன் சில்லி ப்ரை / Bachelor's Chicken Chilli Fry.

தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன் - 300 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

முதலில் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு அலசி,தண்ணீர் வடிகட்டி,மஞ்சள் தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
பின்பு அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய்,தக்காளி,சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்..
அத்துடன் விரவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

மிளகாய்த்தூள் சேர்க்கவும்.சிக்கனில் தண்ணீர் ஊறும்.சிறிது மூடி வேக விடவும்.
நன்கு வெந்து தண்ணீர் சுண்டி ட்ரையாக வர வேண்டும்.
நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான சிக்கன் சில்லி ஃப்ரை ரெடி.இதனை சாதம் வகைகளுடன் பரிமாற அருமையாக இருக்கும்.சிக்கன் எலும்போடு உள்ள துண்டுகளை குழம்பு வைத்து விட்டு எலும்பில்லாத நெஞ்சுப் பதியை இப்படி வைத்து அசத்தலாம்.



--ஆசியா உமர்.

13 comments:

ராதா ராணி said...

செய்யறதுக்கு ரொம்ப ஈசியாவும் சுவையாவும் இருக்கும் போல இருக்கே..:P

En Samaiyal said...

அருமையான சிக்கன் ப்ரை பண்ணி காமிச்சு இருக்கீங்க. சுலபமா இருக்கு செய்முறை

ஸாதிகா said...

ரொம்ப சிம்பிளான சிக்கன் ஃபிரை.பார்க்கவே யம்மியா இருக்கு.

ஹேமா said...

நல்லாயிருக்குமே.இண்ணைக்கு இப்பவே என் சமையல்.சுலபமாகவும் இருக்கும் !

Sangeetha Nambi said...

its not only for Bachelor... Everyone can try this..... :)

S.Menaga said...

ஈசி சிக்கன் ப்ரை பார்க்கவே நாவூறுது..

Asiya Omar said...

நன்றி ராதா ராணி.
நன்றி என் சமையல்.
நன்றி ஸாதிகா.
நன்றி ஹேமா.செய்து பாருங்கபா.
நன்றி சங்கீதா.ஆமாம் எல்லோருமே ஈசியாகச் செய்யக் கூடியது.
நன்றி மேனகா.

Priya said...

Mouthwatering here, pasikuthu pasikuthu..

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் நன்று ஆசியா..பேச்சிலர்ஸ் என்ன நாமும் ஈஸியாகச் செய்யலாம்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆஹா.. அருமையா செய்திருக்கீங்க ஆசியாக்கா.. நாளைக்கு செய்து பார்த்திட வேன்டியதுதான்.

Asiya Omar said...

ப்ரியா
பாசமல்ர்
ஸ்டார்ஜன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ரொட்டி குபூஸுடன் சூப்பராக இருக்குமே

vanathy said...

super recipe.