Sunday, April 15, 2012

மரவள்ளிக்கிழங்கு கட்லெட் / Tapioca Cutlet


தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - மீடியம் சைஸ் (300 கிராம்)
பச்சைமிளகாய் - 1
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
மல்லி இலை - 2 மேஜைக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
விரும்பினால் முழு சீரகம் - கால் டீஸ்பூன்
மைதா - 3 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் கிரெம்ஸ் - ஒரு கப்
உப்பு - எண்ணெய் - தேவைக்கு.

மரவள்ளிக்கிழங்கை மண் போகக் கழுவி சிறிது நேரம் தண்ணீரில் ஊற விடவும்.துண்டு போட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேக விடவும்.குக்கரில் என்றால் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆவியில் இரண்டு விசிலில் இறக்கவும்.

தோல் நீக்கி இப்படி மசித்து கொள்ளவும்.
அத்துடன்,நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய்,மல்லி இலை,மஞ்சப் பொடி,சீரகம் தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


12 உருண்டைகளாக பிடித்து ரெடி செய்து வைக்கவும்.மைதாவை அரை கப் தண்ணீரில் கரைத்து மரவள்ளிக்கிழங்கு உருண்டைகளை விரும்பிய வடிவில் தட்டி கரைத்த மைதாவில் முக்கி எடுத்து ப்ரெட் கிரெம்ஸ் மிக்ஸில் உருட்டி கால் மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.செட் ஆகிவிடும்.

பின்பு ஒரு சாலோ ப்ரை பேனில் எண்ணெய் காயவைத்து பக்குவமாக மீடியம் சிம்மில் பொரித்து எடுக்கவும்.இரு பக்கமும் திருப்பி போட்டு கோல்டன் ப்ரவுன் வரவும் எடுத்து பேப்பர் டவலில் வைத்து எண்ணெய் வடித்து டொமட்டோ சாஸுடன் பரிமாறவும்.

சுவையான மரவள்ளிக்கிழங்கு கட்லெட் ரெடி
குட்டீஸ்க்கு மிகவும் பிடிக்கும்.அதன் ருசி நம்மையும் சாப்பிடத்தூண்டும்.
எப்பவும் உருளைக்கிழங்கு சேர்த்து தான் கட்லெட் செய்வோம், இந்த மரவள்ளிக்கிழங்கு என்ன பாவம் செய்தது? அதனால் தான் அதை வைத்து முயற்சி செய்து அசத்தியாச்சு.

--ஆசியா உமர்.

18 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கட்லெட் சுவையாக உள்ளது, படத்திலேயே. பாராட்டுக்கள்.

ராதா ராணி said...

மாலை நேரத்திற்கு அருமையான ஸ்நாக்ஸ்...செய்முறையும் எளிதாக உள்ளது.செய்து பார்த்துடறேன் ஆசியா..:)

Tharifa said...

super

S.Menaga said...

சுவையான கட்லட்,பார்க்கும்போதே சுவைக்க தோனுது...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சூப்பர் ஆசியாக்கா.. ரொம்ப நல்லாருக்கு.

இமா said...

ஹலோ!ஹாய்! ;))))))))

இமா said...

குறிப்பு பிடிச்சிருக்கு ஆசியா. ஃப்ரோஸன் கிழங்கு இருக்கு. எனக்கு தனியாக சமைக்க சோம்பல். இந்த வாரம் 2 விருந்து இருக்கு. சமைத்து அசத்திருறேன்.

Asiya Omar said...

வை.கோ சார்,நீங்க சொன்னால் சரி தான்.மிக்க நன்றி.

ராதாராணி மிக்க நன்றி.

தாரிஃபா மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

ஸ்டார்ஜன் மிக்க நன்றி.

இமா வாங்க.செய்து பாருங்க.மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

அருமையான வித்தியாசமான கட்லட்.அவசியம் செய்து பார்த்துவிட வேண்டும்.

Priya dharshini said...

Super cutlet ,sapttu romba naal aguthu

Kalpana Sareesh said...

super def shd tyr it..

விச்சு said...

மரவள்ளிக்கிழங்கை இப்படியும் சாப்பிடலாமா!! அருமை.

கோவை2தில்லி said...

மரவள்ளிக்கிழங்கு எனக்கு வெறுமனே உப்பு போட்டு வேகவைத்தாலே சாப்பிட பிடிக்கும். இப்படி செய்தால் ஆஹா....

செய்து பார்க்கிறேன்.

Sangeetha Nambi said...

Very different cutlet !

Asiya Omar said...

ஸாதிகா மிக்க நன்றி.
ப்ரியதர்ஷினி மிக்க நன்றி.
கல்பனா மிக்க நன்றி.
விச்சு மிக்க நன்றி.
கோவை2தில்லி மிக்க நன்றி.
சங்கீதா மிக்க நன்றி.

அனைவரின் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Priya said...

Super o super intha cutlet, rendu yeduthukalam pola irruku..

Kanchana Radhakrishnan said...

அருமை..
செய்து பார்க்கிறேன்.

Yasmin said...

சூப்பரான வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள்......