Wednesday, April 18, 2012

ஈசியா பரோட்டா சுடலாம் வாங்க

பேச்சிலர்ஸ்க்காகத்தான் இந்த ஈசி பதிவு.வீட்டில் பரோட்டா சுடனும் என்றால் ஒரு சிலர் அதனை பெரிய மலையாகக் கருதி செய்வதேயில்லை.பரோட்டா வெளியில் சாப்பிட்டால் உடல் நலனுக்கு கேடு.நிறைய எண்ணெய் மற்றும் மேற்சாமான் சேர்ப்பாங்கன்னு பயம்.அதனையே நாம் எப்பவாவது வீட்டில் ஆசைக்கு செய்து சாப்பிடலாம் .சிம்பிளாக அரை மணி நேரத்தில் எப்படி பரோட்டா சுடுவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தரமான மைதா மாவு - 300 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சீனி - 1 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன் (அல்லது சுவைக்கு)
தண்ணீர் - முக்கால் கப்

ஒரு பவுலில் தண்ணீர்,உப்பு,சீனி போடவும்.பின் மைதா மாவு சேர்க்கவும்.நன்கு கலந்து பிசைந்து எடுக்கவும்.அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உருண்டையாக்கி மூடி அரை மணி நேரம் வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து கையால் சிறிது நிமிண்டி ஆறு உருண்டைகளாக பிரிக்கவும்.

ஒரு உருண்டையை எடுத்து சிறிய வட்டமாக பரத்தி சிறிது எண்ணெய் தடவி நான்காக இப்படி மடித்து வைக்கவும்.ஆறு உருண்டைகளையும் இப்படி செய்து கொள்ளவும்.இரண்டாவது ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை இப்படி மடிக்க தடவ பயன் படுத்த வேண்டும்.
பின்பு இப்படி சதுரமாக பரத்தி கொள்ளவும்.கையால் கூட பரத்தலாம்.கையால் பரத்தினால் நன்கு பொங்கி வரும்.
தவா சூடானவுடன் பரத்திய சதுர பரோட்டாவை போட்டு வேக விடவும்.இப்படி மேற்புறம் கலர் மாறி வரும்.

திருப்பி போடவும்.இப்படி திட்டு திட்டாக இளஞ்சிவப்பு புள்ளி வரும் பொழுது எண்ணெயை சிறிது சிறிதாக இருபக்கமும் தடவி சுட்டு எடுக்கவும்.அடுப்பை மீடியம் சிம்மில் வைத்து சுட வேண்டும்.மீதியுள்ள ஒர் டேபிள் ஸ்பூன் எண்ணெய் சுடும் பொழுது தடவ பயன்படுத்தலாம்.

ஆக ஆறு பரோட்டா செய்ய மொத்தம் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் தேவைப்படும் .

சுட்டு எடுத்த பரோட்டாவை இப்படி தட்டி எடுத்து பாரிமாறவும்.அடுக்காக சூப்பராக வரும்.வீச்சு பரோட்டா செய்ய தெரியாதவங்க இப்படி செய்து அசத்தலாம்.
சும்மாவே சீனி தொட்டு சாப்பிடலாம்.அல்லது தேங்காய் வெங்காய சட்னி கூட போதும்.அடுத்து சட்னி பதிவு .ஒ.கே வா?
அல்லது எனக்கு குருமா தான் பிடிக்கும் என்றால் சிக்கன் உருளைக்கிழங்கு குருமா சூப்பர் காம்பினேஷன்.
சாஃப்ட் குவிக் சப்பாத்தி செய்முறைக்கு இங்கு கிளிக்கவும்.
வீச்சு பரோட்டா சுட இங்கு செல்லவும்.

ஈசி பரோட்டா வீடியோ சமையல் காண இங்கு கிளிக்கவும்.வீடியோ பகிர்வு இங்கே..
--ஆசியா உமர்.

23 comments:

Sumi said...

Super like :)

Mahi said...

Nice layer paratha Asiya Akka! I always make this (with aata flour though) for my hubby's lunch box.He likes this than normal Roti's ! ;)

ராதா ராணி said...

ரொம்ப நல்லாயிருக்கு ஈசி பரோட்டா..:)

GEETHA ACHAL said...

எங்க வீட்டில் எப்பொழுதுமே இது மாதிரி தான் சாப்பாத்தி செய்வோம்...அக்‌ஷ்தாவிற்கு ரொம்ப பிடிக்கும்...

சூப்பர்ப் பரோட்டா....மைதா மாவில் செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்..

Sangeetha Nambi said...

Perfect method for me :)

ஸாதிகா said...

பரோட்டா சுடத்தெரியாதவர்களுக்கு மிக சுலபமான வழியைக்காட்டி கொடுத்து விட்டீர்கள்.பரோட்டாவுக்கு காம்பினேஷன் வெஜ்.நான் வெஜ் குருமாதான்.


இன்னொன்னுதெரியுமா?எனக்கு சப்பாத்தி திரட்டுவதை விட பரோட்டா திரட்டத்தான் பிடிக்கும்.ஏன் தெரியுமா எனக்கு எப்பொழுதும் சப்பாத்தி திரட்டுவதென்றால் ஒரு பக்கம் வட துருவம் போகும் மறு புறம் தென் துருவம் போகும்.ஷேப்பே வராது:)

ஆதலினால் சப்பாத்திமாவை நீங்கள் சொன்ன பிரகாரம் பேச்ச்சிலர் பரோட்டா போல் செய்து போல்டட் சப்பாத்தி என்று கொடுத்து விடுவேன் என் பிள்ளைகளுக்கு.

Aruna Manikandan said...

looks perfect :)

இமா said...

நிச்சயம் ஈசியான பரோட்டாதான்.

கோவை நேரம் said...

சப்பாத்தி இந்த மாதிரி தான் சுடுவாங்க நம்ம அம்மணி ..அப்புறம் மலபார் பரோட்டா நம்ம நீல்க்ரிஸ் ல கிடைக்கும்.அதை வாங்கி கொஞ்சம் தோசைகல்லுல போட்டு சூடு பண்ணி சாப்பிடுவோம் ..உங்க முறையில் செய்து பார்க்கலாம்

Thenammai Lakshmanan said...

சூப்பர் ஈஸி பரோட்டா..ஆசியா:)

கோவை2தில்லி said...

ஈஸியான பரோட்டாவா இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி.

ஹேமா said...

மரவள்ளிக்கிழங்கு கட்லெட்டும்,பரோட்டாவும் இப்பத்தான் பாக்கிறேன்.சுலபமான சமையல் முறைகள்.நன்றி ஆசியா !

மாதேவி said...

பரோட்டா அருமை.

vanathy said...

super recipe.

Priya said...

Super o super..arumaiyana dish.

கோமதி அரசு said...

சும்மாவே சீனி தொட்டு சாப்பிடலாம்.அல்லது தேங்காய் வெங்காய சட்னி கூட போதும்.அடுத்து சட்னி பதிவு .ஒ.கே வா?//

எனக்கு ஒ.கே ஆசியா.


நீங்கள் பரோட்டா செய்வது போல் தான் சப்பாத்தி செய்வேன்.

Alex said...

பரோட்டா சூப்பர்.

savitha ramesh said...

romba nalla irukku.soft a vum irukku.seydhu paarkiren.....

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.

arul said...

thanks for sharing this

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா - அட - ப்ரோட்டா போடுவது இவ்ளோ ஈசியா - எங்க வூட்ல எல்லாம் பரோட்டாவே கிடையாது ஆசியா - செய்முறை விளக்கம் படங்களுடன் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Gayathri Sathyanarayanan said...

simple method to prepare parotta. will try

Swathy Arunkumar said...

பரோட்டா இவ்வளவு சுலபமா? :) குறிப்புக்கு மிக்க நன்றி அக்கா... கண்டிப்பாக நாளையே செய்து பார்க்கிறேன் :)
சுவாதி அருண்குமார்