Friday, April 20, 2012

தேங்காய் வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
புளி - இரு புளிக்கொட்டை அளவு
வெங்காயம்(மீடியம் சைஸ்) -பாதி
உப்பு - தேவைக்கு.
தேங்காய்,பச்சைமிளகாய்,புளி, தேவைக்கு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.அரைத்த பின்பு பாதி வெங்காயத்தை நறுக்கி போட்டு இரண்டு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும்.விரும்பினால் கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து கொட்டலாம்.நான் இந்த சட்னியை தாளிக்காமல் தான் வைப்பதுண்டு.இது உளுந்து வடை,அரிசி மாவு ரொட்டி,நோன்பு கஞ்சி,இட்லி,தோசை,ஆப்பம்,பருப்பு சோற்றுக்கு நன்றாக இருக்கும்.இதைத்தான் நான் பரோட்டா,சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்னு சொன்னேன்.

சுவையான தேங்காய் வெங்காய சட்னி ரெடி.
எங்க வீட்டு அவசர சட்னி இது.செய்து பாருங்க,பிடிச்சிருந்தால் மெனுவில் சேர்த்துக்கோங்க.

--ஆசியா உமர்.


22 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எங்க வீட்டில் தோசையோ இட்லியோ சுட்டால் எனக்கு இந்த இருந்தால்தான் சாப்பிடுவேன். தேங்காய் சட்னி ரொம்ப நல்லாருக்கும். ரொம்ப நல்லாருக்கு ஆசியாக்கா.

Mahi said...

சில சமயங்களில் தேங்காச் சட்னியில் 2 சின்னவெங்காயம் சேர்ப்பேன், பெரிய வெங்காயம் ஒரு சிறீஈஈஈய்ய துண்டும் சேர்த்ததுண்டு! ஆனா எங்க வீட்டய்யாவுக்கு மூக்கு நீளம்..ஏதோ வித்யாசம் இருக்கேன்னு டவுட்டாக் கேப்பாரா,அதனால் ப்ளெய்ன் தேங்காச் சட்னிதான்! :)

பச்சை வெங்காயமும் ஒரு தனிருசிதான்! நல்லா இருக்குது ஆசியாக்கா!

Asiya Omar said...

மிக்க நன்றி ஸ்டார்ஜன்.கருத்திற்கு மகிழ்ச்சி.

மகி,இது எங்க மாமியாரோட ஃபேவரைட்.அது எனக்கும் பிடிச்சு போச்சு.கருத்திற்கு நன்றி மகி.

அப்பாவி தங்கமணி said...

ஊர்ல இருந்த வரைக்கும் "எப்ப பாத்தாலும் இந்த தேங்கா சட்னி வெங்காய சட்னி தானா?"னு கம்ப்ளைன்ட் பண்ணுவேன்... இப்போ...:((

angelin said...

சிவப்பு அரிசி கஞ்சிக்கு இந்த சட்னி காம்பினேஷன் நல்ல இருக்கும் .

அப்புறம் உங்க ரெசிப்பி பரோட்டாஸ் செய்தேன் .என் பொண்ணு ரொம்ப ஆசையா சாப்பிட்டா.இருட்டு நேரமானதால் படமெடுக்கல .அடுத்த முறை படமெடுத்து போடுகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

சட்னி அருமை. [செய்முறை]

இப்போதே நாக்கில் நீர் ஊறுகிறது.

இதைப்படிக்கும் வரை யாருமே இதுவரை செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சட்னி இல்லாவிட்டால் பட்னி
என்னும் கட்சி நான்.

நல்ல காரசாரமாக இருக்க வேண்டும்.

Asiya Omar said...

அப்பாவி வாங்க,ஆமாம் ஊர் ருசியே தனி தான்.வருகைக்கு நன்றி.

ஏஞ்சலின் சிவப்பு அரிசியில் இதுவரை கஞ்சி செய்தது இல்லை.பொதுவாக கஞ்சிக்கு நல்லாயிருக்கும்.கருத்திற்கு நன்றி.

Asiya Omar said...

வை.கோ சார், இந்த சட்னி காரமாய் தான் இருக்கும்.வெங்காய காட்டம் இருக்கும்.இன்னும் ஒரு டிப்ஸ் ஒரு பச்சை மிளகாய்,ஒரு மிளகாய் வற்றல் சுட்டு வைத்தும் இதே மாதிரி அரைக்கலாம்.அது சிறிது மணமாக இருக்கும்.
மிக்க நன்றி சார். வருகைக்கு மகிழ்ச்சி.

Priya said...

Vengayam thenga chutneyla yeppovachum serthu senchathu undu,romba naal achu..

கோமதி அரசு said...

ஆசியா, நீங்கள் பெரியவெங்காயம் வைக்கிறீர்கள் நான் சின்ன வெங்காயம் சேர்த்து அரைப்பேன். புளி சேர்த்தால் சின்ன வெங்காயத்தை வதக்கி தாளித்து போடுவேன்.

நீங்கள் சொன்ன மாதிரி செய்துப் பார்க்கிறேன்.

நீங்கள் சொன்ன முறையில் இரண்டு பூண்டு பல்லும் சேர்த்து அரைத்தால் மிக பிரமாதமாய் இருக்கும்.

ராதா ராணி said...

வெங்காயத்தை வதக்காமல் சேர்ப்பது இதுவரை அறிந்ததில்லை..இன்று செய்து பார்த்திடறேன்.

ராமலக்ஷ்மி said...

தேங்காய் சட்னியில் வெங்காயம். செய்து பார்த்து விடுகிறேன். குறிப்புக்கு நன்றி ஆசியா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சப்பாத்திக்கு சரியான ஜோடி இந்த தேங்காய் வெங்காயச் சட்னி ஆசியாம்மா. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

Viji M.Sc(IT).,M.Phil., said...

hello akka,

very nice

கோவை2தில்லி said...

தேங்காய் சட்னியில் இதுவரை நான் வெங்காயம் சேர்த்ததில்லை. நீங்க சொல்வதை பார்த்தால் சூப்பரா இருக்கும் என்று தோணுது. செய்து பார்க்கிறேன்.

ஆனா எங்க வீட்டு ராஜாவுக்கு சட்டென்று சுவையில் வித்தியாசம் தெரிந்து விடும். முயற்சி செய்து பார்க்கிறேன். பிடித்திருந்தால் ஓகே...

ஸாதிகா said...

வித்தியாசமான ஈஸியான சட்னியாக இருக்கு ஆசியா.

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான சட்னி! செஞ்சு தரேன் சொல்லி இருக்காங்களே - பார்க்கலாம் :)

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

எங்க டாடி இருந்தவரை ஓவ்வொரு சமையல்லுக்கு ஒவ்வொரு காம்பினேஷன் சட்னி செய்ய சொல்வாஙக்.
தேஙகா சட்னி பார்த்ததும் அவஙக் ஞாபகம் தான் வருது

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.

Sangeetha Nambi said...

Bachelor's chutney !

Sangeetha Nambi said...

U have been tagged ! Check this
http://recipe-excavator.blogspot.in/2012/04/tag-o-mania.html