Monday, April 23, 2012

கேரள வெண்டைக்காய் கிச்சடி ( பச்சடி) / Bhendi Pachadi

இந்த வருடம் விஷு விருந்திற்கு சென்ற பொழுது கேரள தோழி ப்ரியாவிடமிருந்து கற்றுக் கொண்டது.நன்றி ப்ரியா.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 100கிராம்
எண்ணெய் பொரிக்க தேவைக்கு
கெட்டி தயிர் - 1/2 - 3/4 கப்
உப்பு - தேவைக்கு


அரைக்க:
தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் -2 மட்டும்
கடுகு - அரை தேக்கரண்டி

தாளிக்க :
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு ,வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 2இணுக்கு

தேங்காய் பச்சை மிளகாய் கடுகு,சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய பின் ஒவனில் 2 நிமிடம் வைத்து எடுத்தால் சுத்தமாக பிசு பிசுப்பே இருக்காது.

பின் தேவைக்கு ஒரு கடாயில் அளவாக எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த பின்பு நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நிதானமாக பொன் முறுகலாக பொரித்து எடுக்கவும்.எண்ணெய் குடிக்காது.

பொரித்த எண்ணெயை மற்ற குழம்பு வைக்க பயன் படுததலாம்.

பொரித்ததை தனியே வைக்கவும்.

பொரித்த எண்ணெயில் ஒரு மேஜைக்கரண்டி எடுத்து அதனில் கடுகு வெந்தயம் வற்றல்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அத்துடன் பொரித்து வைத்த வெண்டைக்காய் சேர்க்கவும்,அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.அத்துடன் தயிர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.தயிர் சேர்த்த பின்பு அடுப்பு எரியக் கூடாது.நன்கு கலந்து விடவும்.


சுவையான கேரள வெண்டைக்காய் கிச்சடி ரெடி.
நாம் பச்சடி என்று தான் சொல்வோம்.அவர்கள் கிச்சடி என்கிறார்கள்.ப்ழத்தில் செய்வதை தான் பச்சடி என்பார்களாம்.
இது போல் பாகற்காயிலும் செய்யலாம்.
இதனை ப்லைன் சாதம்,புலாவ்,சப்பாத்தியுடன் கூட சாப்பிடலாம்.நம்ம இஷ்டம்.விஷு சத்யா வின் போது இதுவும் ஒரு அயிட்டமாக பரிமாறியிருந்தாங்க.சுவை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.கடுகு அரைத்து சேர்ப்பதே தனி சுவை.

--ஆசியா உமர்.


26 comments:

ராதா ராணி said...

வெள்ளை வெளேர் வெண்டைகாய் கிச்சடி கண்ணுக்கு குளிர்ச்சியா வெயிலுக்கு இதமா நல்லா இருக்கு.கடுகை அரைத்து சேர்ப்பது வித்தியாசமாக உள்ளது.அடுத்து வெண்டைகாய் வாங்கி இது போல் செய்ய வேண்டும்.சுவையும் போட்டோவில் தெரிகிறது.நல்ல ஆரோக்கியமான குறிப்பா இருக்கு.

அமைதிச்சாரல் said...

வெண்டைக்காய் கிச்சடி நல்லாருக்கு..

Aruna Manikandan said...

wonderful recipe :)
looks delicious :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

சுலபமான அதே நேரத்தில் வித்தியாசமான ஒரு சமையல். அருமை ஆசியாம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வழவழ கொழகொழ வெண்டைக்காயில் அதுவும் பச்சடி/கிச்சடியா?

புதிய தகவல்.

வெண்டைக்காயை வாங்கி வந்து நன்கு அலம்பிவிட்டு, துணி போட்டுத் ஒவ்வொன்றாக அழுத்தித் துடைத்து விட்டு, அதன் பிறகு சற்று நேரம் FAN காற்றில் காயவைத்து, பிறகு அதில் பூச்சிகள் இல்லையா என ஆராய்ச்சி செய்து, கத்தியால் நறுக்கும் போதே வழவழா கொழகொழா என கத்தியை ஆக்கிவிட்டும். ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல துணியால் அந்தக் கத்தியைத் துடைத்துக்கொண்டே இருப்பேன்.

இவ்வாறு நறுக்கிய வெண்டைக்காயை கறி (பொரியல்) மட்டுமே செய்து சாப்பிடதுண்டு.

புதுத்தகவல் கொடுத்துள்ளீர்கள்.
வேறு யாருக்காவது பயன் படலாம்.
நான் எஸ்கேப்.

ராமலக்ஷ்மி said...

அழகான படங்களுடன் படிப்படியான குறிப்புகள். நன்றி ஆசியா. நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

Sangeetha Nambi said...

Different recipe for me !

Priya said...

Supera irruku pachadi..

Asiya Omar said...

மிக்க நன்றி ராதா.அருமையாக இருந்தது.மோர்குழம்பு போல் சாதத்துடன் சாப்பிடலாம்.

மிக்க நன்றி சாந்தி.

மிக்க நன்றி அருணா.

மிக்க நன்றி புவனேஸ்வரி.

Asiya Omar said...

மிக்க நன்றி வை.கோ சார் வாங்க.வெண்டைக்காயை பொரித்து செய்வதால் வழ வழன்னு இருக்காது.சுவை அருமையாக இருக்கும்.

மிக்க நன்றி ராமலஷ்மி செய்து பாருங்க.படங்கள் சுமார் தான் அடுப்படியில் எடுக்கும் அவசர போட்டோ இது.

மிக்க நன்றி சங்கீதா.

மிக்க நன்றி ப்ரியா.

S.Menaga said...

பச்சடி சூப்பரா இருக்கே...

தளிகா said...

ஒரே கலக்கல் தான் போங்க..மலையாளிகள் கூட இவ்வளவு பக்குவமா செய்ய மாட்டாங்க..பசியை தூண்டி தூண்டி விடறீங்க

சே. குமார் said...

வித்தியாசமான ஒரு சமையல்...

அருமை அக்கா.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நல்லா இருக்கு!

ஹேமா said...

வெண்டிக்காய் பிடிக்காது.ஆனாலும் இது சுவையாய் இருக்குமெண்டு நினைக்கிறன் !

ஸாதிகா said...

வெண்டைக்காயில் பச்சடி.சூப்பராக செய்து காட்டிட்டீங்க தோழி.

கோமதி அரசு said...

என் அம்மா பிறந்த ஊர் திருவனந்தபுரம் அதனால் அம்மா இதை போல் செய்வார்கள் ஆனால் இதை வெண்டைக்காய் பச்சடி என்றே சொல்வார்கள்.

மோர் குழம்புக்கு கொஞ்சம் பெரிய துண்டாய் எண்ணெயில் வறுத்து தான் போடுவார்கள்.

வெங்கட் பார்க்க மட்டும் அல்ல சுவையும் அருமையாக இருக்கும்.

ஆசியா, இந்த கோடை வெயிலுக்கு ஏற்ற வெண்டைக்காய் பச்சடி.
செய்முறை படங்கள் செய்ய தூண்டுகிறது.
நன்றி அருமை.

Mahi said...

வெண்டைக்காயை வெறுமனே வதக்கி தயிரில் போடுவதுண்டு,தேங்காய் அரைச்சு சேர்ப்பது புதுசா இருக்கு. ஒரு முறை செய்து பார்க்கணும் ஆசியாக்கா!

இங்கே மலையாளிகள் யாருமே இல்ல, நீங்க வேற வருஷவருஷம் விஷு சத்யா-ஓணம் சத்யான்னு சொல்லி காதில புகை விட வைக்கறீங்க...அவ்வ்வ்வ்வ்! ;)

VijiParthiban said...

Akka,
wonderful pachadi!....

கோவை2தில்லி said...

நான் இந்த பச்சடி சாப்பிட்டிருக்கிறேன். சூப்பராக இருக்கும். உங்க படங்கள் பார்த்தாலே சுவையும் பிரமாதம் என்று சொல்லி விடும். மோர்குழம்பு போல் தான்.

Kanchana Radhakrishnan said...

super pachchadi

Jaleela Kamal said...

பச்சடி கிச்சிடிய பார்த்ததுமே அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு இருக்கு.

vanathy said...

Never heard about this recipe. Will try this one very soon.

athira said...

சூப்பர் குறிப்பு, வெயிலுக்கு ஏற்ற இதமான கிச்சடி.

Yasmin said...

வெண்டைக்காய் கிச்சடி செய்து பார்க்கிறேன்.

விச்சு said...

ஸ்ஸ்ஸ்...ஆஆஆ...