Monday, April 30, 2012

முருங்கைப்பூ முட்டை சாதம் -நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு

நான் ஆங்கில சமையல் வலைப்பூ ஆரம்பித்து அங்கும் குறிப்புக்கள் கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அங்கு Taste of Pearl City, Lecker and Yummy Recipes, Schemetterling Words மூவரும் சேர்ந்து நடத்திய கர்ப்பிணி பெண்களுக்கான ஆரோக்கியமான சமையல் நிகழ்வில் பகிர்ந்த தேர்வான என் குறிப்பை இங்கு கொடுப்பதில் மகிழ்ச்சி.
கர்ப்பிணி பெண்களுக்கான ஆரோக்கியமான சத்தான குறிப்புகளாக வந்த எண்ணற்ற குறிப்புகள் மத்தியில் அவர்கள் தேர்வு செய்த குறிப்புகளில் ஒன்றாக என்னுடைய Moringa Flowers Egg Fried Rice இடம் பெற்றிருக்கிறது.இவென்ட் பற்றிய விபரம், வந்த அனைத்து குறிப்பையும் காண இங்கு செல்லவும்.


இந்த விருது Token of Appreciation. குறிப்பு வெற்றி பெற இறுதி சுற்றில் தேர்வாக வேண்டும்.


தேவையான பொருட்கள்:


முருங்கைப்பூ ஒரு கைபிடியளவு


கொழுந்து முருங்கைக்கீரை ஒரு கைப்பிடியளவு


நறுக்கிய நாட்டு வெங்காயம் 2 மேஜைக்கரண்டி


நறுக்கிய நாட்டு பூண்டு 2 மேஜைக்கரண்டி


நாட்டுக் கோழி முட்டை - 1


முழு சீரகம் 1 தேக்கரண்டி


நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி


வேகவைத்த சாதம் பாதி கோப்பை


உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.
தேவையான பொருட்களை தயார் செய்து இப்படி எடுத்து வைத்து கொள்ளவும்.


ஒரு வாண்லியில் நல்லெண்ணேய் விட்டு சிறிது காய்ந்தவுடன் சீரகம் போட்டு பொரியவும் , நறுக்கிய நாட்டு பூண்டு,நறுக்கிய நாட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.மிதமான நெருப்பில் நன்கு வதங்கட்டும் சிவற வேண்டாம்.அத்துடன் சுத்தம் செய்து கழுவிய முருங்கைப்பூ,கொழுந்து முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.

நாட்டு முட்டை ஒன்றை தேவைக்கு மிளகு, உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.க்லந்த முட்டையை சேர்க்கவும். குறைவான தணலில் வேக விடவும்.வெந்து வரும் பொழுது இப்படி பிரட்டி விடவும்.வடித்த அரைக்கோப்பை சாதத்தை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். உப்பு தேவைப்பட்டால் சிறித்து சேர்த்து பிரட்டிகொள்ளவும்.


சுவையான சத்தான முருங்கைப்பூ முட்டை சாதம் ரெடி.அப்படியே சூடாக எடுத்து பரிமாறவும்.இது ஒரு நபருக்கான அளவு.சாப்பிட்டு விட்டு வெது வெதுப்பான நீர் சாப்பிடலாம்.


முருங்கைப்பூ கிடைத்தால் பேறுகாலம் நெருங்கி வரும் நாட்களில் கர்ப்பிணி பெண்களுக்கு குறைந்தது மூன்று நாட்களாவது இந்த சத்தான் சாதத்தை செய்து கொடுக்கவும். அண்ட வாயுவை ஒதுக்கி வலி எடுத்து சுகப் பிரசவம் ஆகும்.


வலி லேசாக இருக்கும் பொழுது தெம்புக்கு இந்த சாதம் செய்து கொடுத்தோ அல்லது பூண்டு கஞ்சி வைத்து கொடுத்தோ மருத்துவமனைக்கு பேறுகாலத்திற்கு அழைத்து செல்லலாம்.வலி வந்த பின்பு ஒன்றும் சாப்பிட முடியாது. மருத்துவமனையில் தெம்பிற்கு குளுக்கோஸ் (ட்ரிப்) ஏத்துவாங்க.சாப்பிட ஏதும் தரமாட்டாங்க.முக்கி சுகப் பிரசவம் ஆக தெம்பு வேண்டாமா? இது மாதிரி மருத்துவ குணமுள்ள உணவை கொடுத்து அழைத்து செல்வது நல்லது.இதுவென்று இல்லை மற்ற உணவுகள் கூட ஏதாவது கொடுத்து அழைத்து செல்லவும்.இரண்டு இட்லியாவது கொடுங்க.வெறும் வயிறாக மட்டும் பேறுகாலத்திற்கு கூட்டிட்டு போகாதீங்க.


ஹெல்தி மார்சல்ஸ்க்கு நான் குறிப்பு கொடுக்கனும், எனக்கு முருங்கைப்பூ வேண்டும் என்று என் கணவரிடம் சொல்ல அவர் இங்கு (அமீரகத்தில்) தேடி எனக்காக பறித்து எடுத்து வந்ததால் இந்த குறிப்பு கொடுக்க முடிந்தது.


கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இந்த சத்தான சாதம் செய்து ருசித்திடலாம். இது எங்க வீட்டு பாட்டி வைத்தியம்.


சைவப் பிரியர்கள் முட்டை சேர்க்காமல் செய்து சாப்பிடலாம்.


20 comments:

கோமதி அரசு said...

ஆரோக்கியமான முருங்கைப்பூ சாதம் செய்து காட்டிவிட்டீர்கள். முட்டை இல்லாமல் செய்து நானும் அசத்தி விடுகிறேன்.

கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல உணவு என்றவுடன் இதை என் கொழுந்தனார் பெண்ணுக்கு பரிந்துரைத்து விட்டேன்.
வாழ்த்துக்கள் வெற்றிக்கு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

முருங்கை சம்பந்தமான எல்லாமே உடல் நலனுக்கு மிக நல்லது. அதுவும் முருங்கை மரம் எனபது இந்தியாவில் மட்டும்தான் இருப்பதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு முருங்கைப் பூவில் நல்லதொரு
உணவு வகையை சொல்லித் தந்ததற்கு
மிக்க நன்றி ஆசியாம்மா.

அமைதிச்சாரல் said...

அருமையான சத்தானதொரு சாதம்,.. அசத்திட்டீங்க ஆசியா.

ராதா ராணி said...

நல்ல குறிப்பு..முருங்கை பூ,கீரை ,இரண்டும் அருமையான மருத்துவ குணம் வாய்ந்தது.அதை உணவே மருந்தா குறிப்புல சொன்னது மிக அருமை..வாழ்த்துக்கள்!

athira said...

ஆஹா அருமையான மருத்துவக் குறிப்பு... வெற்றி பெற வாழ்த்துக்கள்... அதில் பாதிப்பங்கு உங்கள் கணவருக்கே... ஹா..ஹா..ஹா...

விச்சு said...

நான்கூட நம்ம சாப்பிடமுடியாதோ’னு நினைச்சேன். நல்லவேளை அனைவரும் சாப்பிடலாம்னு வயித்துல பால வார்த்தீங்க. முருங்கையே ஆண்களுக்குத்தான் அப்படின்னு முந்தனைமுடிச்சு’ல நம்ம ஆளு சொல்லியிருக்கார்.

VijiParthiban said...

முருங்கைப்பூ முட்டை சாதம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான கருத்து ரொம்ப பயனுள்ள பகிர்வு ஆசியா அக்கா.

vanathy said...

நல்ல ரெசிப்பி. இங்கே முருங்கை கிடைப்பது கஷ்டம்.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் ஆசியா
மிக அருமையான குறிப்பு

இதை 9 வது மாத துவக்கதில் இருந்தே சாப்பிடலாம்

S.Menaga said...

ஆரோக்கியமான சமையல் ,அசத்திட்டீங்கக்கா...முருங்கைப்பூ கிடைத்தால் செய்து பார்க்கலாம்,கிடைக்கனுமே...

சே. குமார் said...

அருமையான குறிப்பு அக்கா.
அசத்திட்டீங்க...

Asiya Omar said...

கோமதியக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

புவனேஸ்வரி முருங்கை மரமே மருத்துவ குணமுள்ளது தான்,அதனை tree of life என்று சொல்வதுண்டு.இங்கு முருங்கை மரம் ஒரு சில இடங்களில் இருக்கு.கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

ராதா மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

விச்சு மிக்க நன்றி.

விஜி மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

Asiya Omar said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.ஆமாம் ஒன்பதாவது மாதம் தொடங்கினாலே இந்த சாதம் செய்து தருவார்கள்.
மிக்க நன்றி ஜலீலா.

மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.உங்களுக்கு இந்த குறிப்புகள் உபயோகப்படும்.

குமார் மிக்க நன்றி.

schmetterlingwords said...

Salaams Asiya,

Oh! Post pottaache... !! :) Ungalin bayanulla kurippugal palayatril irundhu idhai therndhedutthom. Ungal kurippugal anaithume garbini pengalukku migavum ubayogamaanadhu dhan... Indha post il melum vibarangal kooriyiruppadharku nanri!!

Pirarukku ubayogamaaga irukkum endra nalla ennathil murungai poo vaangi ketta ungalukkum, ungalukku aadharavu thandhu parithu vandha ungal kanavarukkum ellaam valla Iraivan nanmaigalai kootu tharuvaanaaga... Ameen :)

Asiya Omar said...

ஆயிஷா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கணேஷ் said...

உங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சமயமிருப்பின் பார்த்து கருத்துக் கூறவும். ந்ன்றி.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_03.html

arul said...

arumayana vilakam

Asiya Omar said...

இந்த குறிப்பை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி கணேஷ்.வருகைக்கு மகிழ்ச்சி.

கருத்திற்கு மிக்க நன்றி அருள்.

Padhu said...

Very healthy dish and nice combo with eggs