Thursday, April 5, 2012

இறால் வடை / Prawn Vadai


தேவையான பொருட்கள்:
உரித்த இறால் - அரை கப் அல்லது 20 எண்ணம்
பொட்டுக்க்டலை - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
சோம்பு -அரைடீஸ்பூன்
மிளகு ,சீரகம்- தலா கால் டீஸ்பூன்
எண்ணெய்,உப்பு - தேவைக்கு.

உரித்து சுத்தம் செய்த இறாலை நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,கரம்மசாலா தேவைக்கு உப்பு விரவி வைக்கவும்.பின்பு அதனை ஒரு பாதி வேக்காடு வெந்து எடுத்து ஆற வைக்கவும்.

ஆறிய இறாலை கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
பொட்டுக்கடலையோடு மிளகு,சீரக,சோம்பு சேர்த்து பொடித்து வைக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி இலை நறுக்கி மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
எல்லாவற்றையும் கலந்து இப்படி பிசைந்து கொள்ளவும்.

வடைகளாக தட்டி கொள்ளவும்.

வடைச் சட்டியில் எண்ணெய் காய வைத்து பக்குவமாக பொரித்து எடுக்கவும்.



சுவையான இறால் வடை ரெடி.

சும்மா அப்படியே சாப்பிடலாம்.சாதம் வகைகளுக்கு பக்க உணவாகவும் பரிமாறலாம்.நோன்பு கஞ்சிக்கு தொட்டு சாப்பிடவும் அருமையாக இருக்கும்.பார்ட்டியில் ஸ்டார்டராகவும் பரிமாறலாம்.

--ஆசியா உமர்.

13 comments:

Sangeetha Nambi said...

Tempting me ! :)

ஸாதிகா said...

இறாலில் வடையா.பலே.அவசியம் டிரை பண்ணி பார்க்கவேண்டும்

ராதா ராணி said...

இறால்ல வடையெல்லாம் செய்வாங்களா...! வடைன்னா பருப்பை சேர்ப்பாங்க..நீங்க வித்தியாசமா பொட்டுக்கடலையை சேர்த்து செய்திருக்கிறீங்க..நானும் செய்து பார்கிறேன்.ஆசியா..உங்க குறிப்பு எல்லாமே புதுமையா சுவையா இருக்கு.

ஹேமா said...

இறால் வடை.....எங்கட வீட்ல விருந்தினர் வந்தால் முதலிடம் இதுக்குத்தான்.ஆனால் எனக்குச் செய்யத்தெரியாது.உங்கள் குறிப்பு உதவும் எனக்கு.நன்றி ஆசியா !

En Samaiyal said...

எனக்கும் எறா வடை புதுசாவே இருக்கு. அருமையா செஞ்சு காமிச்சு இருக்கீங்க. நன்றி ஆசியா

S.Menaga said...

இறால் வடை செய்முறை என்னுடையதைவிட உங்களுடையது வித்தியாசமா இருக்கு...

Priya said...

Rendu vada yeduthukalama?? attakasama irruku..

vanathy said...

super mouth watering recipe.

சே. குமார் said...

அருமையான விளக்கம் படத்துடன்..
சாப்பிடணுமுன்னு ஆசைதான்...
படம் பார்த்து ரசிக்க மட்டுமே முடிகிறது.

Asiya Omar said...

மிக்க நன்றி சங்கீதா.
மிக்க நன்றி ஸாதிகா.
மிக்க நன்றி ராதா ராணி.
மிக்க நன்றி ஹேமா.
மிக்க நன்றி என் சமையல்.
மிக்க நன்றி மேனகா.
மிக்க நன்றி ப்ரியா.
மிக்க நன்றி வானதி.
மிக்க நன்றி குமார்.

அனைவரின் வருகைக்கும் மகிழ்ச்சி.

Yasmin said...

வித்தியாசமான ரொம்ப சூப்பரான குறிப்பு...

Asiya Omar said...

தமிழ் மீரான் said...

"இறால் வடை / Prawn Vadai":

அட.. பார்க்கவே எச்சில் ஊறுகிறதே. நல்ல குறிப்புக்கு நன்றி.

சகோ கருத்தை பப்ளிஷ் செய்ய முடியலை,அதனால் காப்பி பேஸ்ட் வருகைக்கு நன்றி.

Asiya Omar said...

யாஸ்மின் வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி.