Friday, April 27, 2012

சோயா கீமா / Soya Keema.

தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - ஒரு கோப்பை
பச்சை பட்டாணி - அரை கோப்பை
நறுக்கிய த்க்காளி - 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
நறுக்கிய மல்லி புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
கலந்த மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
அல்லது
(அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,
1 தேக்கரண்டி மல்லித்தூள்,
கால் தேக்கரண்டி - மஞ்சள் தூள்)
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


முதலில் சோயா உருண்டைகளை கொதிக்கும் நீர் விட்டு 10 நிமிடம் வைக்கவும்.பின் தண்ணீர் வடித்து பிழிந்து எடுக்கவும்.

மிக்ஸி கப்பில் போட்டு இப்படி துருவலாக இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

குக்கர் பேன் அல்லது வாண்லியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்,கரம் மசாலா சேர்க்கவும்,பிரட்டி விடவும்,தக்காளி, நறுக்கிய பச்சை மிள்காய்,மல்லி,புதினா சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.மசாலாத்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

வதங்கியவுடன் பச்சை பட்டாணி,சோயா கீமா சேர்க்கவும்.
அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.மூடி மூன்று விசில் வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
ஆவியடங்கியவுடன் பிரட்டி பரிமாறவும்.
சுவையான சோயா கீமா ரெடி.

இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா,நாணுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
விரும்பினால் அரைத்த தேங்காய் முந்திரி விழுது 2 மேஜைக்கரண்டி சேர்த்து கொதிக்கவிட்டும் பரிமாறலாம்.வாயுத்தொந்திரவு உள்ளவர்கள் அளவாகச் சாப்பிடவும்.

20 comments:

athira said...

மீஈஈஈஈஇ 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:))

athira said...

சூப்பர் சோயா கீமா.... சோயாவை எப்படி சமைத்தாலும் சாப்பிடப் பிடிக்கும்.. அதில் இப்படிச் செய்தால் சொல்லவே வேண்டாம்... அருமை.

அமைதிச்சாரல் said...

அருமையா இருக்கும்,.. நான் தேங்கா விழுது சேர்க்காம தேங்காப்பாலெடுத்துச் சேர்ப்பேன்.

பகிர்வுக்கு நன்றி ஆசியா..

Akila said...

ippave saapidanum pola iruku....

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏதேதோ அசத்தலாகச் செய்யச் சொல்லியிருக்கீங்கன்னு புரிந்து கொண்டேன். ;))))

ஸாதிகா said...

அட சோயாவை வைத்து சூப்பரா சைட் டிஷ் செய்து காட்டி இருக்கீங்களே..அருமை.

Priya said...

Nutritious and excellent side dish for rotis..

ராதா ராணி said...

புதுசா நல்ல குறிப்பா இருக்கே ..சூப்பர்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சோயாவில் வித்தியாசமான ஒரு செய்முறை. அசத்தலாக உள்ளது. மிக்க நன்றி ஆசியாம்மா.

கோமதி அரசு said...

சோயாவில் சுவையான அயிட்டம் செய்து அசத்திவிட்டீர்கள் ஆசியா.
செய்துப்பார்க்கிறேன்.

Asiya Omar said...

அதிரா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

அகிலா மிக்க நன்றி.

வை.கோ சார் மிக்க நன்றி.

Asiya Omar said...

ஸாதிகா மிக்க நன்றி.எங்க வீட்டில் இது வெஜ் என்று சொல்லாமல் மட்டன் கீமாவா சிக்கன் கீமாவான்னு கேட்டேன்,பாவம் பதில் சொல்ல தெரியலை.

ப்ரியா மிக்க நன்றி.

ராதா மிக்க நன்றி.

புவனேஸ்வரி மிக்க நன்றி.

கோமதியக்கா மிக்க நன்றி.எங்க அண்ணி சோயாவில் கீமா செய்வேன்னு சொன்னாங்க.நானும் செய்து பார்த்தேன்,மற்ற பீஸ் தவிர கேரட் கோஸ்,பீன்ஸ் கூட சேர்த்து செய்யலாம்.

கோவை2தில்லி said...

நல்லதொரு ரெசிபி. எங்க வீட்டில் யாருக்கும் இந்த சோயாவின் வாடையே பிடிப்பதில்லை....:)

VijiParthiban said...

சூப்பர் சோயா கீமா.... அருமையாக இருக்கும் போல நானும் செய்து பார்க்கிறேன் அக்கா .

S.Menaga said...

சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ்!!

Mahi said...

குக்கரில் 3 விசில் விடணுமா?? அவ்வ்வ்..நான் இதுவரை குக்கரில் சோயா பொரியல் செய்ததில்லை ஆசியாக்கா! pan-லயேதான் வேகவிட்டிருக்கேன். அவ்ளோ நேரம் வேகவைத்தா பட்டாணி கரைஞ்சிராதா?? உங்க வீட்டுப் பட்டாணி அழகா முழுசாவே இருக்கே?

சீக்கிரம் ட்ரைப் பண்ணிப்பார்க்கறேன்.

Asiya Omar said...

கோவை2தில்லி மிக்க நன்றி.

விஜி மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

மகி என்னோட குக்கர் மூடி வெயிட் போட்ட உடனே விசில் தான்.ரொம்ப நல்ல குக்கர்.5 நிமிடத்தில் 3 விசில்.ஃப்ரோசன் பீஸ் உபயோகித்தேன்.
கருத்திற்கு நன்றி மகி.

மனோ சாமிநாதன் said...

ருசிகரமான குறிப்பு ஆசியா!

Yasmin said...

ஆசியாக்கா,சோயா கீமா அருமையா இருக்கு செய்து பார்க்கிறேன்.

savitha said...

பாக்கும் போதே சாப்டனும் போலவே இருக்கு. கண்டிப்பா செஞ்சு பாக்குறேன்.