Monday, April 2, 2012

சப்ஜா மில்க் ஷேக் / Subja Milk Shake

கோடை காலத்தில் குளு குளுன்னு இந்த சப்ஜா மில்க் சாப்பிட்டால் அப்படியே வ்யிறும் மனசும் குளிர்ந்து போய்விடும்.

தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
சப்ஜா விதை - 1 டேபிள்ஸ்பூன்
பாதாம் கலர் அல்லது ரோஸ்மில்க் அல்லது பிஸ்தா கலர்- தேவைக்கு சில துளிகள்
வெனிலா ஐஸ்கிரீம் - 4 குழிக்கரண்டி
சீனி தேவைக்கு - 4 -6 டேபிள்ஸ்பூன்
கஸ்டர்டு - ஒரு கப் (விரும்பினால்)


இப்படிதான் இருக்கும் சப்ஜா விதை.இதனை தண்ணீரில் குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும் அல்லது கொதிக்கும் நீர் விட்டால் அரைமணியில் ஊறி விடும்.ஊறிய பின்பு தான் உபயோகிக்க வேண்டும்.
பாலை திக்காக காய்ச்சி ஆற வைக்கவும். அத்துடன் தேவைக்கு சீனி கலந்து வடிகட்டி கொள்ளவும். தேவையான எசன்ஸ் அல்லது கலர் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ரோஸ்மில்க் கலர் அல்லது பாதாம் கலர் அல்லது பிஸ்தா கலர் சேர்க்கலாம்.
பரிமாறும் பொழுது ஊறிய சப்ஜா விதை ஒரு டம்ளர் பாலுக்கு 1-2 டீஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளலாம்.நான் இங்கு பரிமாறியிருப்பது சப்ஜா ரோஸ்மில்க்.


பாதாம் கலர் சேர்த்த மில்க்,சப்ஜா விதை சிறிது வெனிலா ஐஸ்கிரீம் கலந்து இப்படியும் பரிமாறலாம்.
ஸ்பெஷலாக பரிமாற அழகான ஒரு கண்ணாடி டம்ளரில் கால் டம்ளர் காய்ச்சிய கஸ்டர்ட்,பாதாம் மில்க் கால்டம்ளர்,ஐஸ்கிரீம் 2 ஸ்கூப்,சப்ஜா விதை சேர்த்து ஃபலூடா மாதிரியும் பரிமாறலாம்.சப்ஜா விதையை ஐஸ்கிரீம் மேல் போடும் பொழுது அது வழுக்கிக் கொண்டு ட்ம்ளரின் உள்ளே சென்று பார்ப்பதற்கு இப்படி இருக்கும்.விரும்பினால் நட்ஸ் பொடித்து தூவி அலங்கரித்து கொடுக்கலாம்.

சுவையான சப்ஜா மில்க் ஷேக் ரெடி.பருகி மகிழுங்கள்.

-ஆசியா உமர்.


29 comments:

கோவை2தில்லி said...

இந்த மில்க் ஷேக்கை பார்த்தவுடனே கண்கள் குளிர்ந்து விட்டன...

சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர் தான்.

அமைதிச்சாரல் said...

ஜில்லுன்னு இருக்கு மில்க் ஷேக்..

அஸ்மா said...

சலாம் ஆசியாக்கா!

எனக்கு ரொம்ப பிடித்தமான கூல்ட்ரிங்ஸ். அதை நீங்கள் பரிமாறிய விதம் அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ஜில்லென்ற பதிவு.
மகிழ்ச்சி. பாராட்டுக்கள். நன்றிகள்.

Saras said...

Refreshing drink for this summer..Thanks for sharing and for your lovely words.

Thankyou
Saras

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கவே நல்லா இருக்கு...

நெய்வேலியில் சப்ஜா விதை போட்டு ஒரு சர்பத் கிடைக்கும்.... சிறுவயதில் குடித்திருக்கிறேன்... அது நினைவுக்கு வந்தது!

பகிர்வுக்கு நன்றி.

ராதா ராணி said...

ஆசியா..மில்க் ஷேக் சூப்பர் !எல்லா பொருட்களும் வீட்டில் ரெடியாக இருக்கின்றது.சப்ஜா விதை என்பது துளசி விதையை தானே சொல்கிறீர்கள்..துளசி விதை கைவசம் இருக்கின்றது.

Asiya Omar said...

கோவை2 தில்லி மிக்க நன்றி.

அமைதிச் சாரல் எனக்கும் ஜில்லுன்னு இருக்கு.

அஸ்மா வாலைக்கும் ஸலாம்.மிக்க நன்றி.

வை.கோ. சார் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Asiya Omar said...

மிக்க நன்றி சரஸ்.வருகைக்கு மகிழ்ச்சி.

சகோ.வெங்கட் மிக்க நன்றி.நானே அடுத்து சப்ஜா சர்பத் கொடுக்கலாம்னு இருந்தேன்.மகிழ்ச்சி.

Asiya Omar said...

ராதா நிச்ச்யம் செய்து பாருங்க.துளசி விதை தான் சப்ஜா.நாங்கள் ஸ்கூலில் இருந்து ஒரு சமயம் பஸ் விட்டுட்டோம்னா நடந்து வருவோம்.பாளயங்கோட்டை ரெயில்வே கிராஸ் பக்கம் நிறைய இருக்கும்.அத்னை பறிச்சிட்டு வந்து ஊறப் போட்டு சர்பத் செய்து குடித்தது தான் நினைவுக்கு வருது. மில்க் ஷேக் நாங்க நோன்பு சமயம் செய்வது வழக்கம்.

Kalpana Sareesh said...

rombha superrr will try !!!

Mahi said...

சம்மர் கூலர் சூப்பரா இருக்கு..பார்ட்டிகளில் பரிமாற அருமையா இருக்கும்.

சப்ஜா விதை நான் அதிகம் சாப்பிட்டதில்லை. ஒருமுறை இங்கே வடைந்திய இனிப்பு ஒன்றில் சாப்பிட்டேன்னு நினைக்கிறேன்,ஆனா அதில் துளசி வாசமே வரலையே ஆசியாக்கா? அது வேறயோ அப்போ?

S.Menaga said...

குளுகுளு மில்க்க்ஷேக் சூப்பரா இருக்கு!!

Asiya Omar said...

மிக்க நன்றி.நிச்சயம் செய்து பாருங்க கல்பனா.

மகி,இந்த மில்க் ஷேக் உனக்கு தான்.டெக்னிகல் ப்ராப்ளம் உன்னால் தானே சரியானது.மிக்க நன்றி மகி.மிக்க மகிழ்ச்சி.
விதையில் துளசி வாடை எல்லாம் வராது.இது odourless,tasteless.
உடலிற்கு குளிர்ச்சியை தரக் கூடியது.

நன்றி மேனகா.மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

கோடைக்கேற்ற அருமையான பானம்.கோடைகாலத்தில் அடிக்கடி வீட்டில் செய்யும் பானம் இது.

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு..

பாச மலர் / Paasa Malar said...

பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது..

Danalakshmy jothi said...

Hallo mam, same receipe is for a drink named MILK SHARBATH- We have to mix 1 glass milk and 4spoons nanari sarbath essence in mixie, add sabja seeds and drink. It will be tasty and famous drink in Pondicherry,India.

Yasmin said...

ஜில்லுன்னு மில்க் ஷேக் சூப்பரா இருக்கு....

vanathy said...

super milk shake. I like subja seeds.

Anonymous said...

ஆசியா மில்க் ஷேக் சூப்பர். மெட்ராஸ் இல் ஜூஸ் கடையில் ரோஸ் மில்க் இல் இந்த சப்ஜா சீட்ஸ் போட்டு குடிச்சு இருக்கேன். இங்கே இந்த மாதிரி கெடைக்குமா தெரியல

Asiya Omar said...

ஸாதிகா
காஞ்சனா
பாசமலர்
தனலஷ்மி
யாஸ்மின்
வானதி
என் சமையல்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஹேமா said...

வெயில்காலம் தொடங்கிவிட்டதா.பதிவு சொல்கிறதே !

Jaleela Kamal said...

எனக்கு ரொம்ப் பிடிக்கும்
ரோஸ்மில்க் , பலூடா செயதால் சப்ஜா விதை போட்டு தான், பார்க்கவே அழகாக இருக்கும்

கோமதி அரசு said...

கோடை காலத்தில் குளு குளுன்னு இந்த சப்ஜா மில்க் சாப்பிட்டால் அப்படியே வ்யிறும் மனசும் குளிர்ந்து போய்விடும்.//

ஆசியா, நிச்சியம் நீங்கள் சொல்வது போல் செய்து சாப்பிடுகிறேன்.

வயிறும் மனசும் குளிர்ந்தால் வேறு என்ன வேண்டும்!

Asiya Omar said...

ஹேமா மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

கோமதியக்கா மிக்க நன்றி.நிச்சயம் செய்து பாருங்க.

savitha said...

presentation is very pleasenting...super..

savitha said...

super...

Asiya Omar said...

மிக்க நன்றி சவீதா.