Tuesday, May 1, 2012

கத்திரிக்காய் உருளைக்கிழங்கு ரோஸ்ட்

தேவையான பொருட்கள்;
கத்திரிக்காய் - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு உ.பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உ.பருப்பு,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்பு நறுக்கிய கத்திரிக்காய் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.நன்கு பிரட்டி வதங்க விடவும்.

சிறிது வதங்கியதும் கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.



ஓரளவு வதங்கி வரும் பொழுது உப்பு போட்டு பிரட்டிவிடவும், அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.சிறிது மூடி குறைந்த தணலில் வதங்க விடவும்.

வதங்கியதும் அடுப்பை அணைக்கவும்.

சுவையான கத்திரிக்காய் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி. ப்லைன் ரசம் சாதம் அப்பளத்துடன் பரிமாற அருமையாக இருக்கும். இலகுவாக செய்யக் கூடியது. கத்திரிக்காய், உருளைக்கிழங்கு வதங்கி இப்படி துண்டு துண்டாய் சாப்பிட சூப்பராக இருக்கும்.எனக்கு கத்திரி உருளை இரண்டும் பிடித்த காய்கள்.வேண்டுமானால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் ரோஸ்ட் செய்யலாம்.

25 comments:

angelin said...

புது விதமா இருக்கு .இப்படி இரண்டையும் சேர்த்து செய்ததில்லை .
இன்று இரண்டு காய்களும் இருக்கு .உடனே செய்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி ஆசியா .

ராமலக்ஷ்மி said...

கை விட்டு அள்ளிக் கொள்ளத் தூண்டுகிறது கடைசிப் படம். அருமையான குறிப்புக்கு நன்றி ஆசியா.

Priya said...

ROmba naal achu intha combola samachi, roast attagasama irruku..

சே. குமார் said...

சுலபமான வித்தியாசமான ரோஸ்ட்... இன்று இரவு டிரை செய்து பார்க்கிறோம் அக்கா.

சே. குமார் said...

சுலபமான செய்முறை அக்கா...
செய்து பார்க்கலாம்...

கோமதி அரசு said...

கத்திரிக்காய், உருளை ரோஸ்ட் படங்கள் எல்லாம் அசத்தல்.(சுவையும் தான்)

தண்ணீர் தெளித்தால் எண்ணெய் குறைச்சலாய் விட்டால் போது இல்லையா!
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ரோஸ்ட்.
நன்றி ஆசியா.

athira said...

சூப்பர்...

இதே முறையிலேயே நாம் உருளைக்கிழங்குக்குப் பதில் கருவாடு சேர்ப்போம்.. முடிவில் தேசிக்காப்புளி விடுவோம்.

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்கு ஆசியா.. சப்பாத்திக்கும் நல்லாவே இருக்கும்.

Asiya Omar said...

ஏஞ்சலின் மிக்க நன்றி.செய்து பாருங்க.

ராமலஷ்மி மிக்க நன்றி.

மிக்க நன்றி ப்ரியா.

குமார் நன்றி.செய்து பாருங்க சுலபமாக இருக்கும்.

Asiya Omar said...

கோமதியக்கா இந்த ரோஸ்ட் மாதிரி சமையலுக்கு கொஞ்சம் எண்ணெய் விட்டால் ருசி தான்.குறைவாகவும் பயன்படுத்தலாம்.மிக்க நன்றிக்கா.

Asiya Omar said...

அதிரா வருகைக்கு மகிழ்ச்சி,நான் கொஞ்சம் கொஞ்சமாக அசைவ உணவை குறைக்க முயற்சி செய்றேன்.நீங்க கருவாடை நினைவு படுத்தறீங்களே. கருவாடு கடைக்கு எதிர் கடை கத்திரிக்காய் கடை இருக்கும் சில ஊரில் அது தான் நினைவு வருது.உங்க பக்குவம் சூப்பர். நாங்களும் சமைப்பதுண்டு.

Asiya Omar said...

அமைதிச்சாரல் வாங்க,மிக்க நன்றி.ஆமாம் சப்பாத்திக்கு என்ன தோசைக்கு கூட நல்லாதான் இருக்கும்.

savitha ramesh said...

Arumaya irukku ponga.love the combo.

விச்சு said...

எங்க வீட்டுல உருளைக்கிழங்கு மட்டும் போட்டு இப்படி செய்வாங்க. கூடவே கத்தரிக்காயும் சேர்த்தா? செம டேஸ்ட்.

ராதா ராணி said...

கிழங்கையும்,காயையும் சேர்த்து ரோஸ்ட்...புதுமையா அட்டகாசமா இருக்கு ஆசியா..ஈசியாவும் இருக்கு.செய்து பார்த்திடரேன்.

Sangeetha Nambi said...

Even i tried this once.. This was a perfect sidedish with hot steamed rice.

ஸாதிகா said...

வாவ்.கத்த்ரி உருளை காம்பினேசன் கண்டிப்பாக டேஸ்டாக இருக்கும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நீங்கள் சொல்வது ரொம்ப சரி ஆசியாம்மா.உருளைக்கிழங்கில் செய்யும் எல்லா ரெசிபியும் ரசம் சாதத்திற்கு சரியான பொருத்தம்தான்.
அதுவும் இதில் கத்திரிக்காய் வேறு சேர்த்து விட்டீர்கள். அமர்க்களமாக இருக்கும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆசியாம்மா.

Geetha6 said...

super and yummy!

Geetha6 said...

super

ஹேமா said...

கறியாக இல்லாமல் இப்படிப் பிரட்டல் நல்லாயிருக்குமே !

vanathy said...

சூப்பரா இருக்கு. விரைவில் செய்து பார்க்கிறேன்.

VijiParthiban said...

மிகவும் அருமை ஆசியா அக்கா கத்திரிக்காய் உருளைக்கிழங்கு ரோஸ்ட்.

Asiya Omar said...

சவீதா மிக்க நன்றி.

ராதா மிக்க நன்றி.

விச்சு மிக்க நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

புவனா மிக்க நன்றி.

கீதா மிக்க நன்றி.

ஹேமா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

விஜி மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Mahi said...

Same pinch! I make the same poriyal...perfect with Arisi-paruppu sadham!