Monday, May 7, 2012

காரப்பொடி வறுவல்

தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த காரப்பொடி மீன் - அரைக்கிலோ
மிளகாய்த்தூள் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மீனை தலையை நீக்கி இப்படி சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.


மீனுடன் தேவைக்கு உப்பு, மஞ்சப்பொடி, மிளகாய்ப்பொடி, மிளகுப்பொடி சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.



கடாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் மீடியம் நெருப்பில் வைத்து கருகாமல் முறுக பொரித்து எடுக்கவும்.


சுவையான காரப்பொடி வறுவல் ரெடி.

பொரிக்கும் பொழுதே பாதி உள்ளே போய்விடும். கட்டிப்பருப்பு, ரசம், மோர்க்குழம்பு இவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இது பத்திய மீன். மிளகு ஆணம் வைத்தும் சாப்பிடலாம்.

18 comments:

கோவை நேரம் said...

நல்ல டிஷ்..ஆமாங்க...மீன் பேரே காரப் பொடி யா..? இந்த மீன்ல காரம் இருக்குமா..?

கோவை நேரம் said...

இந்த மாதிரி மீன் எங்க ஏரியால கிடைக்காதே...

ஸாதிகா said...

காரப்பொடியில் வறுவலா?நாங்கள் மிளகு ஆனம் மட்டும் வைப்போம்.ப்டத்தை பார்க்கும் பொழுது உடனே வறுத்துப்பார்க்கத்தூண்டுகிறது.அருமையாக இருக்கு தோழி!

Sangeetha Nambi said...

Wow ! New to this recipe.......

S.Menaga said...

அம்மா இந்த மீனில் சுறா மீன் குழம்பு போல வைப்பாங்க,வறுத்ததில்லை...நல்லாயிருக்குக்கா...

Priya said...

Super crispy varuval,mouthwatering..

VijiParthiban said...

ஆசியா அக்கா ரொம்ப அருமையான காரபொடி வறுவல் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குங்க..

Yasmin said...

Wow!!!super

ராதா ராணி said...

இந்த மீனில் குழம்பு வைத்திக்கிறேன்..வறுவல் செய்ததில்லை.ரசம் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.

விச்சு said...

ம்ம்ம்... பார்க்கவே அழகாயிருக்கு.

Jaleela Kamal said...

பிள்ளை பெற்றவர்கலுக்கு இதில் மிளகு சூப் வைத்து கொடுப்பாங்க் ஆனா எனக்கு இந்த்a வறுவல் தான் பிடிக்கும்.

மிக அருமை

Asiya Omar said...

கோவை நேரம் மிக்க நன்றி.
ஸாதிகா மிக்க நன்றி.
சங்கீதா மிக்க நன்றி.
மேனகா மிக்க நன்றி.
ப்ரியா மிக்க நன்றி.
விஜி மிக்க நன்றி.
அமைதிசாரல் மிக்க நன்றி.
யாஸ்மின் மிக்க நன்றி.
ராதா ராணி மிக்க நன்றி.
விச்சு மிக்க நன்றி.
ஜலீலா மிக்க நன்றி.

ராஜி said...

காரப்பொடி மீனா? புதுசா இருக்கே. எங்க ஊர் பக்கம் கிடைக்காதுன்னு நினைக்குறேன். கிடைச்சா செஞ்சு பார்க்குறேன்.

ஜெய்லானி said...

//இது பத்திய மீன். மிளகு ஆணம் வைத்தும் சாப்பிடலாம்.//

4 கிலோ வாங்கி வந்தால் எனக்கு மட்டுமே 3 கிலோ :-)). என்னோட ஆல் டைம் ஃபேவரைட் :-))))))

En Samaiyal said...

காரபொடி மீன் எங்க ஊருல கேள்விபட்டது இல்லே ஆனா ரொம்ப அருமையா இருக்கும் போல இருக்கு. குறிப்பு பகிர்வுக்கு நன்றி ஆசியா.

Asiya Omar said...

ராஜி வருகைக்கு மிக்க நன்றி.இது பாறை மீன்போல் சின்னதாக இருக்கும்.அவசியம் கிடைத்தால் ருசித்து பாருங்க.முள்ளு பார்த்து சாப்பிடனும்,முறுக பொரித்தால் அப்படியே சாப்பிடலாம்.

என் சமையல் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Asiya Omar said...

சகோ.ஜெய்லானி வாங்க,நீண்ட நாள் கழிச்சி வந்திருக்கீங்க,உங்க ஆல்டைம் ஃபேவரைட் தான் அழைத்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.மிக்க மகிழ்ச்சி. நன்றி.