Thursday, May 10, 2012

பாலும் பழமும் பாச்சோறும்


எங்கள் ஊர் வழக்கப்படி திருமணத்தின் போது நிக்காஹ் பள்ளிவாசலில் அல்லது மணப்பந்தலில் முடிந்து மாப்பிள்ளை, மணப்பெண் வீட்டிற்கு வந்து மாலை மாற்றிய பின்பு புதுமணத் தம்பதிகளுக்கு பாலும் பழமும் கொடுப்பது வழக்கம். திருமணம் முடிந்து மணமக்கள், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்த பின்பு அங்கு புதுமணத் தம்பதியருக்கு பாச்சோறு ஊட்டுவார்கள்.

பாச்சோறு செய்வதற்கு:

தேவையான பொருட்கள்:

வடித்த சோறு - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - பாதி கப்

கருப்பட்டி - 100 கிராம்

ஏலக்காய் -2

நெய் - 1 மேஜைக்கரண்டி

முந்திரி பருப்பு - 1 மேஜைக்கரண்டி.

சாதத்தை பதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும், கருப்பட்டி சில்லை தட்டி சிறிது தண்ணீர்,தட்டிய ஏலக்காய் சேர்த்து கெட்டியாக பாகு காய்ச்சி எடுக்கவும்.நெய்யில் முந்திரிவறுத்து எடுக்கவும்.தேங்காய் துருவிக் கொள்ளவும்.வாசனை சம்பா சோறு ஆக்கி எங்க ஊரில் செய்வாங்க.சூப்பர் மணமாக இருக்கும்.

வடித்த சாதத்தில் சூட்டோடு கருப்பட்டி பாகு, நெய்,வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கிளறவும்.அதனை ஒரு தட்டில் எடுக்கவும்,மேல் தேங்காய்த்துருவல் தூவி அலங்கரிக்கவும்.

சுவையான பாச்சோறு ரெடி.எளிமையான இனிமையான சத்தான குறிப்பு. கருப்பட்டியில் இரும்புச்சத்து இருக்கு,குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பாலும் பழமும் செய்வதற்கு:

பால் - ஒரு கப். மொந்தன் வாழைப்பழம் -1,சீனி - 2 மேஜைக்கரண்டி

பழம் சீனி சேர்த்து கலந்து அத்துடன் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

பொதுவாக மணமக்களுக்கு பாலும் பழமும், பாச்சோறும் கொடுத்த பின்பு அதனை திருமணவீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு மற்றவர்களுக்கு கொடுப்பது வழக்கம். பாலும் பழத்திலும் இருக்கும் சத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
நீங்களும் எடுத்து ருசித்து எப்படியிருக்குன்னு சொல்லுங்க.
இந்த குறிப்பை ஹெல்தி மார்ஷல்ஸ் சிறுகுழந்தை உணவுகள் இவென்ட்டிற்கு அனுப்புகிறேன்.

26 comments:

Thenammai Lakshmanan said...

சூப்பர்.. எங்க ஊரிலும் பாற்சோறு உண்டு ஆனா அது படைப்பு என்ற நிகழ்ச்சியில் செய்வாங்க..:)

Sangeetha Nambi said...

Very different & new recipes...

ஸாதிகா said...

கருப்பட்டி சேர்த்த பாச்சோறு..எங்கள் பக்கம் பாஸ்மதி அரிசியில் சீனி சேர்த்து செய்வோம்.இதை விட அருமையாக காயல்காரகள் பாச்சோறு சுவையாக இருக்கும்.

Asiya Omar said...

தேனக்கா முதல் வருகைக்கு மகிழ்ச்சி.இன்று என் திருமணநாள்.பாச்சோறு நினைவு வந்ததால் இந்த பகிர்வு.

சங்கீதா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா வருகைக்கு மகிழ்ச்சி. வாசனை சம்பாவில் தான் ஆக்குவது வழக்கம்.நான் இதனை சீரகசம்பாவில் செய்திருக்கேன்.இன்னும் ரிச்சாக செய்யனும்னால் பாலி சேர்த்து ஆக்கி,நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து போடலாம்.அந்தக் காலத்தில் செய்த முறையை அப்படியே கொடுத்திருக்கிறேன் தோழி.சூடாக பானையில் அந்தக் கருப்பட்டி பாகை வடிகட்டு விட்டு நெய் சேர்த்து தேங்காய்ப்பூ சேர்க்கும் பொழுது அதன் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.

ஸாதிகா said...

ஆசியா இப்பொழுதான் கவனிக்கிறேன்.முதல் புகைப்படத்தில் 20 ஆவது திருமண நாள் என்று.என் அன்பான வாழ்த்துக்கள்.இறைவனின் பேராற்றலும் ரஹ்மத்தும் என்றென்றும் உங்கள் குடும்பத்தினருக்கு நீடித்திருக்க துஆ செய்கிறேன்.இன்னும் பற்பல திருமண நாள் கண்டு சீரோடும் சிறப்போடும் வாழ என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் தோழி!

ராமலக்ஷ்மி said...

மணநாள் வாழ்த்துகள் ஆசியா!

கருப்பட்டிக்கு பதில் வெல்லத்தில் செய்து அதிலேயே பழத்துண்டுகள் சேர்த்து செய்வதுண்டு. கருப்பட்டி சுவையே தனியல்லவா? செய்து பார்க்கணும்.

/ஹெல்தி மார்ஷல்ஸ்/ entry...

இதற்கும் வாழ்த்துக்கள்:)!

Asiya Omar said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸாதிகா.

ராமலஷ்மி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.உங்கள் குறிப்பு அருமையாக இருக்கு.இந்த சாதம் செய்து ஒரு அரைமணி கழித்து சாப்பிடவேண்டும் கருப்பட்டியை சாதம் உறிஞ்சி அருமையாக இருக்கும்.வீட்டில் மீதியாகும் சாதத்தில் கூட செய்யலாம்.

schmetterlingwords said...

Asiya, thirumana naal vaazhthukkal. Ellaam valla Iraivanin barakath ungaludan eppozhudhum irukka dua seygiren. :)

Paachoru enakku migavum pidikkum. Pala thirumana veedugalil, en annanmaar thirumanam utpada, rusithu saappittu irukkiren.. Naan thirumanam aagi sendra ooril indha vazhakkam illaadhadhal adhai romba miss panninen... Ungal kurippu enakku paachoru, paalum pazhamum aasaiyai kootugiradhu.. Viraivil seydhu saapida vendum. :)

Healthy Morsels event ku anuppiyadharku mikka nanri :)

விச்சு said...

பாச்சோறு ம்ம்ம்...

ராதா ராணி said...

பாற்சோறு தேங்காய் துருவலோடு நல்லா இருக்கு..எங்கள் ஊர் திருமணங்களில் கருப்பட்டி பாகில் ஊறிய பச்சரிசியில் தேங்காய் துருவல் சேர்த்து முதலில் மணமக்களுக்கு கொடுத்து பின் குழந்தைகளுக்கு தருவார்கள்..இப்பொழுது இது நடைமுறையில் இல்லை..மனங்கனிந்த இனிய மணநாள் வாழ்த்துக்கள்..:)

Jaleela said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஆசியா
பாச்சோறு பார்க்க வே பிராமாதமாக இருக்கு.

மனோ சாமிநாதன் said...

பால்சோறு வித்தியாசமாக இருக்கிறது ஆசியா! பாலும் பழமும் ஊரில் நடக்கும் திருமணங்களை ஞாபகப்படுத்தி விட்டது!

மனோ சாமிநாதன் said...

நீங்களும் உங்கள் கணவரும் அனைத்து சிறப்புக்களுடன் என்றும் இனிதே மகிழ்ந்திருக்க மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் ஆசியா!!

S.Menaga said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்க்கா!! ரெசிபி பார்க்கவே சூப்பரா இருக்கு.

Chitra said...

Perfect recipe for anniversary time!!!!!!!

HAPPY ANNIVERSARY!!!! :-)

Mahi said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

பாச்சோறு ரெசிப்பி நல்லா இருக்கு. எங்கவீடுகளில் திருமணம் முடிந்தததும் மணமக்களுக்கு பாலும்-பழமும் தருவார்கள். பால் தனியா,பழம் தனியாத்தான் இருக்கும். உங்க ஊர்ல பிசைந்துட்டீங்க! :)

athira said...

ஓ... ஸாதிகா அக்கா சொன்னதால்தான் நானும் கவனித்தேன், இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஆசியா.... தம்பதிகள் நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

athira said...

பாச்சோறு புதுப்பெயர்... இன்றுதான் அறிகிறேன்.. சூப்பர்... தேங்காய்ப்பூச் சேர்த்தால் சுவை சொல்லவா வேண்டும்...

Packya said...

சுவையான ரெசிபி.. பால்சோறு ரொம்ப நல்ல இருக்கு. கமகமன்னு இங்கே வாசம் தூக்குது. -packya

savitha ramesh said...

Happy anniversary.engalukku idhu pudhusu.romba nalla irukku.

Priya said...

Happy marriage anniversary to both of u..paalum pazhamum pachorrum super o super..

ஹேமா said...

இனிக்க இனிக்க வந்த திருமணநாள் வாழ்த்துகள் ஆசியா !

VijiParthiban said...

ஆசியா அக்கா மிகவும் அருமை.
எங்கள் ஊரிலும் இந்த வழக்கம் உள்ளது . ஆனால் பாச்சோறு கிடையாது. அதற்க்கு பதிலாக தேங்காய் பால் சாதம் கொடுப்பார்கள் அக்கா.

சே. குமார் said...

அருமையான் பகிர்வு அக்கா.
பாச்சோறு நான் சாப்பிட்டு இருக்கேன்...
அனுப்புங்க.. வெல்லுங்க... வாழ்த்துக்கள் அக்கா.

ஜெய்லானி said...

என்னது இது கல்யாண நாளை நினைவு படுத்திட்டீங்களேன்னு கேட்க வந்தேன் :-)))).

//athira said...

ஓ... ஸாதிகா அக்கா சொன்னதால்தான் நானும் கவனித்தேன், இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஆசியா.... தம்பதிகள் நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.//

பெரிய்ய்ய்ய்ய்ய்ய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Asiya Omar said...

வாழ்த்தும் கருத்தும் தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.