Sunday, May 13, 2012

கேரட் பீட்ரூட் பட்டாணி பொரியல்

தேவையான பொருட்கள்:
கேரட் - 1
பீட்ரூட்-1
உரித்த பச்சை பட்டாணி - 50 கிராம்
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சோம்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - மேஜைக்கரண்டி
கடுகு,உ.பருப்பு - 1தேக்கரண்டி
மல்லி,கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
கேரட், பீட்ரூட்,வெங்காயம், மல்லி இலை நறுக்கி ரெடி செய்து வைக்கவும்.பச்சைப் பட்டாணி உரித்து அலசி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு உ.பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வெடிக்கவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

கேரட், பீட்ரூட்,பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

திறந்து தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து பிரட்டி விடவும். தேங்காய்,பச்சை மிள்காய், சோம்பு கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்,பிரட்டி விட்டு சிறிய தீயில் சிறிது மூடி பின் திறக்கவும்.

நறுக்கிய மல்லி இலை தூவவும்.பிரட்டி விட்டு பரிமாறவும்.

சுவையான சத்தான கேரட் பீட்ரூட் பட்டாணி பொரியல் ரெடி.

18 comments:

Shanthi said...

Looks colourful and healthy too

ராதா ராணி said...

நல்ல கலர்புல்லான சத்தான குறிப்பு..காரட்டையும் பீட்ரூட்டையும் சேர்த்து இதுவரை செய்ததில்லை.இந்த குறிப்பை முயன்று பார்க்க வேண்டும்.

athira said...

சூப்பர், கலரும் சூப்பராக இருக்கு.

விச்சு said...

வாவ் காரட், பீட்ரூட், கொத்தமல்லி வீட்ல சொல்லி செஞ்சு பார்த்துடனும்.

Packya said...

tasty...healthy..colorful dish :)

FOOD NELLAI said...

சுவையும், சத்தும் கலந்த உணவு.

Aruna Manikandan said...

Healthy and delicious poriyal :)

VijiParthiban said...

ஆசியா அக்கா மிகவும் அருமை "கேரட் பீட்ரூட் பட்டாணி பொரியல்".

ஸாதிகா said...

கலர்ஃபுல் பொரியல் சூப்பர் தோழி.

மாதேவி said...

சத்தான பொரியல். அருமை.

Priya said...

Wat a healthy and colourful poriyal, this poriyal goes excellent as filling for samosas na.

S.Menaga said...

கலர்புல்லான சத்தான பொரியல்...

சே. குமார் said...

ஆஹா...
அருமையான பதார்த்தம்...
சுலபமா செய்யலாமே...
தேங்காய் சேர்க்காமல் சாப்பிட்டு இருக்கிறேன்....

Mahi said...

பீட்ரூட் கூட மத்த காய்கள் சேர்த்ததில்லை..பொரியல் நல்லா இருக்கு ஆசியாக்கா!

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

Kanchana Radhakrishnan said...

சூப்பராக இருக்கு.

vanathy said...

பார்க்கவே நல்லா இருக்கு.

En Samaiyal said...

அருமையான பொரியல் பண்ணி காமிச்சு இருக்கீங்க சூப்பர்.