Monday, May 28, 2012

சீனி அவரைக்காய் / கொத்தவரங்காய் பொரியல்

தேவையான பொருட்கள்:
சீனி அவரைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 2 பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.

சீனி அவரைக்காயை நார் நீக்கி இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பூண்டு,பச்சை மிளகாய்,சீரகம் தட்டி வைக்கவும்,(விரும்பினால் இதனுடன் தேங்காயும் சேர்த்து துவைத்து கொள்ளலாம்) வெங்காயம் நறுக்கி வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிவரவும் நறுக்கிய சீனி அவரைக்காய், மஞ்சப்பொடி, உப்பு போட்டு வேகவைத்து தண்ணீர் வடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து, தட்டிய பூண்டு சீரகம்,பச்சை மிள்காய் சேர்த்து வதக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.சிம்மில் வைத்து நன்கு வதக்கவும், வேக வைத்த சீனி அவரைக்காயை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்,உப்பு சரி பார்க்கவும், தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.


சுவையான கொத்தவரங்காய் பொரியல் ரெடி.

அல்லது தேங்காய் சீரகம் ,பச்சை மிளகாய் அரைத்து கடைசியிலும் சேர்க்கலாம்.


10 comments:

VijiParthiban said...

ஆசியா அக்கா நான்தான் முதலில் ..............
அக்கா நாங்கள் கொத்தவரங்காய் என்றுதான் சொல்லுவோம் . பொரியல் அருமை அக்கா..

விச்சு said...

ம்ம்ம்ம்... வாசனை தூக்குது.

Sangeetha Nambi said...

Healthy veg...

அமைதிச்சாரல் said...

சீனியரைக்கா துவரன் ரொம்ப நல்லாருக்கு..

ராதா ராணி said...

காய் குழையாமல் பக்குவமாக நன்கு பொரியல் செய்துள்ளீர்கள் ஆசியா...நானும் இதே முறையில் செய்வதுண்டு.பூண்டு சேர்க்க மாட்டேன்.பூண்டு ஹெல்த்துக்கு நல்லதுதானே...இனி சேர்த்துட்டா போச்சு.:)

Kalpana Sareesh said...

romba arumai..

Priya said...

Konjam sadham irruntha pothum intha poriyala mudika,my fav.

சே. குமார் said...

கொத்த்வரங்கா பொறியல் சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

பொரியல் அருமை

En Samaiyal said...

கொத்தவரங்கா போரியல் அருமை ஆசியா