Wednesday, May 30, 2012

ஈசி பிஸிபேலாபாத் / Easy Bisi bele bath

தேவையான பொருட்கள்;
அரிசி - 250 கிராம்
பருப்பு - 125 கிராம்
காய்கறி கலவை - 250 கிராம் (விருப்பம் போல்)
(கேரட்,பீன்ஸ்,பீஸ்,காளிப்ளவர்,கத்திரிக்காய்)
வெங்காயம் -1
தக்காளி -1
மல்லி,கருவேப்பிலை - சிறிது
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் - தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் - அரை கப்
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை - 1 தேக்கரண்டி (ஏலம் பட்டை கிராம்புதூள்-சுவைக்கு தகுந்த படி)
(ஏலம்-2,கிராம்பு-3,பட்டை - சிறிய துண்டு)
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு

தேவையான பொருட்களை முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.அரிசி,பருப்பை ஊற வைக்கவும்,காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.சமையல் விரைவில் முடிய வசதியாக இருக்கும். புளி கரைத்து வைக்கவும்.குக்கரில் ஊறிய துவரம் பருப்பு தேவைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிவரவும், கழைந்த ஊறிய அரிசியை சேர்த்து நான்கு கப் தண்ணீர்,கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்க்கவும்.கலந்து விடவும்.


நன்கு கொதி வரும் பொழுது மூடி அடுப்பை மீடியமாக வைத்து வெயிட் போடவும்.நான்கு விசில் வந்து அடுப்பை அணைக்கவும்.


ஒரு கடாயில்,தேங்காய் துருவல்,சாம்பார் பொடி,கரம் மசாலா பவுடர் சேர்த்து லேசாக சிவற வறுக்கவும்.


ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து எடுக்கவும்.


ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் ,பெருங்காயப் பொடி,நறுக்கிய வெங்காயம்,காய்கறிகள்,தக்காளி சேர்த்து வதக்கவும்,பின்பு அத்துடன்,புளித்தண்ணீர், கால் தேக்கரண்டி மஞ்சத்தூள்,உப்பு தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.


குக்கர் விசில் அடங்கியவுடன் திற்ந்தால் சாதம் பருப்பு வெந்து இப்படி காணப்படும்.மசித்து விடவும்.


அத்துடன் வேகவைத்த காய்கறிகள், வறுத்து பொடித்த பொடி சேர்த்து கிளறவும்.தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.


நறுக்கிய மல்லி இலை, நெய் சேர்க்கவும்.


எல்லாம் ஒருசேர கலந்து விடவும்.

சூடான சுவையான கமகமக்கும் பிஸிபேலாபாத் ரெடி.இதனை உருளை சிப்ஸ்,அப்பளம்,வடகத்துடன் பரிமாறலாம்.


இந்த குறிப்பை முன்பே என் ஆங்கில தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். அமீரக ஃபுஜைராவில் இருந்து பேச்சிலர்ஸ் கேட்டதால் மீண்டும் இந்த பகிர்வு.
இது வீட்டில் இருக்கும் சாம்பார் பொடி கரம் மசாலா பொடி வைத்து ஈசியாக செய்யக் கூடியது. பிஸிபேலாபாத் பொடி என்று தனியாக தயார் செய்ய வேண்டியது இல்லை.ரெடி மேட் பொடி இருந்தால் அதனையும் உபயோகிக்கலாம். என்றாலும் அதே சுவையும் மணமும் நிச்சயம் இதிலும் இருக்கும்.வாயுத் தொந்திரவு இருக்கும் பார்த்து அளவாக சாப்பிடவும்.

20 comments:

Mahi said...

Looks yummy Asiyakkaa! :P

Asiya Omar said...

உடன் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி மகி.நன்றி.

Sangeetha Nambi said...

Love it...

ராதா ராணி said...

பிஸிபேளாபாத் நல்லா இருக்கு..லன்ச்சிற்கு என்ன செய்யலாம்னு யோசித்து கொண்டே பிளாக்ல ஒரு ரவுண்ட் வந்தேன்..உங்க குறிப்பைதான் இன்று செய்ய போகிறேன்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிஸிபேலாபாத் போன்றே ருசிகரமான பதிவு.

செய்முறை விளக்கமும் அருமை. பாராட்டுக்கள் ;)

VijiParthiban said...

ஆசியா அக்கா மிகவும் அருமை உங்களுடைய பிஸிபேலாபாத் சூப்பர் பகிர்வு....

அமைதிச்சாரல் said...

ஈஸி பிஸி நல்லாருக்குது.

ஒரு முருங்கைக்காயை வேக வெச்சு சதைப்பற்றை மட்டும் வழிச்சுச் சேர்த்தா இன்னும் மணமா இருக்கும் இல்லையா.

ஹி..ஹி.. முருங்கைக்காய் இல்லாத சாம்பாரை நினைச்சுப்பார்க்க முடியலை எனக்கு :-)

Priya said...

Ippo than breakfast saapiten, but unga BBB paathathume pasikuthu,romba superaa irruku.

ஸாதிகா said...

சுலப்மாக செய்து காட்டிட்டீங்க் ஆசியா.எனக்கு பிடித்த ஐட்டம்.

Rekha said...

hi asiya.. wonderful blog.. very happy to see blog in tamil version :)
recipe looks awesome.. keep blogging..
pls visit mine and join in my space
http://indiantastyfoodrecipes.blogspot.com

Divya Pramil said...

Sounds delicious.. :)

Participate and win prizes
The Master Chef Contest

angelin said...

ரொம்ப நல்லா இருக்கு ஆசியா .இது வரை செய்ததில்லை .
இனி செய்து விடுவேன் .

athira said...

ஆஹா.. சூப்பர் ஆசியா... இப்படி ஆராவது செய்து தந்தா சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.

Aruna Manikandan said...

looks delicious :)

சே. குமார் said...

அருமையான ஒரு பதார்த்தத்தை அழகான படங்களுடன் பகிர்ந்த அக்காவுக்கு நன்றிகள்.

Sumi said...

Kandippa try panna vendiya recipe :)

Packya said...

ரொம்ப ஈசியான செய்முறையா இருக்கே..சுவையும் சூப்பரா இருக்கும்னு படங்களே சொல்லுதே..

Akila said...

Romba arumaya vanthu iruku... Just love it

En Samaiyal said...

ரொம்ப சுலபமா செஞ்சு காமிச்சு இருக்கீங்க ஆசியா

Asiya Omar said...

சங்கீதா
ராதா
வைகோ.சார்
விஜி
அமைதிச்சாரல்
ப்ரியா
ஸாதிகா
ரேகா
திவ்யா
ஏஞ்சலின்
அதிரா
அருணா
குமார்
சுமி
அகிலா
என் சமையல்

அனைவரின் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.