Wednesday, May 23, 2012

கத்திரிக்காய் கிரேவி / Brinjal Gravy

கத்திரிக்காய் என்றால் எனக்கு கொண்டாட்டம். காய்களில் எது இருக்கோ இல்லையோ கத்திரிக்காய் வீட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.இந்த குறிப்பை சின்ன சின்ன வயலட் கத்திரிக்காயில் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - கால் கிலோ
நறுக்கிய வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் - முக்கால் தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
எள்ளு - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - கால் தேக்கரண்டி
மல்லி, கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.



வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும், அதில் கழுவி துடைத்து நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை சேர்க்கவும்.திருப்பி திருப்பி பொரிய விடவும்.


பொரித்த கத்திரிக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.


வாண்லியில் தேங்காய்,எள்ளு,வேர்க்கடலை லேசாக வறுத்து எடுக்கவும், ஆறிய பின் அத்துடன் தக்காளி சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.


கத்திரிக்காய் பொரித்த அதே எண்ணெயில் பட்டை சோம்பு,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்,அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், இஞ்சி பூண்டு சேர்க்கவும்,வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்க்கவும்.வதக்கி விடவும்.பச்சை மிளகாய் சேர்க்கவும்.


புளித்தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதி வரட்டும்.


கொதித்து மசாலா புளி வாடை அடங்கியதும் பொரித்த கத்திரிக்காய் போடவும்.சேர்ந்து கொதித்து வரும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.


அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்,தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.


நன்கு கொதித்த பிறகு அடுப்பை சிம்மில் வைக்கவும்.தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.நறுக்கிய மல்லி இலை தூவவும்.


சுவையான கத்திரிக்காய் கிரேவி ரெடி, இதனை சப்பாத்தி, பிரியாணி, புலாவ், ப்லைன் ரைஸ்,ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம். வயலட் கத்திரிக்காய் பிஞ்சாக இருந்தால் ருசி மிக அருமையாக இருக்கும். காரம் சுவைக்கு தகுந்தபடி சேர்த்துக் கொள்ளவும்.


20 comments:

ஸாதிகா said...

mmm.....அருமையான கிரேவி ஆசியா.அவசியம் டிரை பண்ணுகிறேன்.

Asiya Omar said...

உடன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸாதிகா.கத்திரிக்காய் கிரேவி பலவிதமாக செய்யலாம்.இதுவும் ஒரு வகை தோழி..

Sangeetha Nambi said...

Love brinjal in any form... Superrrrrrr..........

VijiParthiban said...

கத்தரிக்காய் கிரேவி மிகவும் அருமை அக்கா. எனக்கு கொஞ்சம் கிடைக்குமா அக்காகாகாகாகா .

VijiParthiban said...

அக்கா கருத்து தெரிவிக்க நான்தான் முதலில் வருகிறேன் என்று நினைத்து வெகு விரைவாக வந்தேன். ஆனால் வந்ததும் தான் தெரிந்தது என்னக்கு முன்னாடியே ஸாதிகா அக்கா அவர்கள் வந்துவிட்டார் என்று! ....


பரவாஇல்லை என்று என் மனதை தேத்திக்கொண்டேன் அக்கா...

ராமலக்ஷ்மி said...

படிப்படியாக படங்களுடன் தந்திருப்பது மிக அருமை. சுவையான குறிப்பு ஆசியா. அவசியம் செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

கிரேவி அருமை.

Packya said...

வாவ்..சூப்பர் கிரேவி..அப்படியே சாப்பிடுவேன்..

ராதா ராணி said...

இன்னைக்கு எங்க வீட்டிலயும் இதே கிரேவிதான்...ஆனா எள்ளு, வேர்கடலை சேர்க்கவில்லை..முட்டை காய் மாதிரி செய்திருந்தேன்..அடுத்தமுறை இது மாதிரி செய்து பார்க்க வேண்டும்.

விச்சு said...

பார்க்க பார்க்க ஆசையைத் தூண்டுது.

angelin said...

நாவூறும் ரெசிப்பி ஆசியா .எந்த வகை ஃபிரைட் ரைசாக இருப்பினும் இந்த கிரேவி நல்ல காம்பினேஷன் .யம் யம் :P
நேற்று உங்க கத்திரி உருளை வறுவல் செய்தேன் .

அமைதிச்சாரல் said...

ஆஹா!!.. அருமையா இருக்கே. இன்னிக்கு டின்னருக்கு இதான்.

Priya said...

Mouthwatering dish, excellent side dish for rice.

vanathy said...

நல்லா இருக்கு. கத்தரிக்காய் வெள்ளை நிறத்தில் இருக்கே? இல்லாவிட்டால் எனக்குத் தான் கண்களில் கோளாறோ???

S.Menaga said...

கிரேவி ரொம்ப நல்லாயிருக்கு...

தங்களின் அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றிக்கா...இங்கு மழை,குளிர் இருப்பதால் சளி,ஜூரம்னு ஒரே அவஸ்தை...வசந்தகாலம் போல் இல்லாமல் குளிர்காலம் மாதிரி இருக்கு...நீங்கள் எப்படி இருக்கீங்க??

athira said...

கிரேவி சூப்பர்.. செய்து பார்க்கத்தான் வேண்டும்..

Mahi said...

Delicious gravy..would love to have it plain rice! Yum,yum! :P

ஹேமா said...

கத்தரிக்காய் பொரிச்சு அதுவும் புளிவிட்டு...சூப்பர் !

செய்தாலி said...

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_26.html

Asiya Omar said...

சங்கீதா மிக்க நன்றி.
விஜி மிக்க நன்றி.
ராமலஷ்மி மிக்க நன்றி.
காஞ்சனா மிக்க நன்றி.
பாக்கியா மிக்க நன்றி.
ராதாராணி மிக்க நன்றி.
விச்சு மிக்க நன்றி.
ஏஞ்சலின் மிக்க நன்றி.
அமைதிச்சாரல் மிக்க நன்றி.
ப்ரியா மிக்க நன்றி.
வானதி இது வெள்ளை கத்திரிக்காய் தான்.வயலட்டில் செய்தால் ருசியாக இருக்கும்.

மேனகா.விசாரிப்பிற்கு மகிழ்ச்சி.
அதிரா மிக்க நன்றி.
மகி மிக்க நன்றி.
ஹேமா மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.