Wednesday, May 16, 2012

பட்டர் காளான் / Butter Mushroom

தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 200கிராம்
பட்டர் - 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
காஷ்மீரி சில்லி பவுடர் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 2
முந்திரி பருப்பு - 10
ஃப்ரெஷ் கிரீம் - 2 மேஜைக்கரண்டி
கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
நறுக்கிய மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும், முந்திரி பருப்பை அரை கப் தண்ணீரில் ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும்.
பட்டன் காளானை நன்கு அலசி பாதியாக நறுக்கி கொள்ளவும்.அத்துடன்,சில்லி பவுடர்,கரம்மசாலா, இஞ்சி பூண்டுபேஸ்ட், உப்பு சேர்க்கவும்.நன்கு கலந்து ஊறட்டும்.


ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,தக்காளி வதக்கவும்.அத்துடன் கசூரி மேத்தி பவுடர், ஊறிய முந்திரிபருப்பை சேர்க்கவும்.நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும்.


வாணலியில் பட்டர் விட்டு காய்ந்து வரும் பொழுது மசாலா கலந்த காளானை சேர்த்து வதக்கவும்.தண்ணீர் ஊறி வற்றி காளான் வெந்து வரும்.


அரைத்த வெங்காயம்,தக்காளி,முந்திரி கசூரி மேத்தி விழுதை சேர்க்கவும்.மிக்ஸி ஜாரை அலம்பி அந்த தண்ணீரையும் சிறிது சேர்க்கவும்.நன்கு கொதித்து வரட்டும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.


உப்பு சரி பார்க்கவும்.


ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும், நறுக்கிய மல்லி இலை தூவவும்.கலந்து விட்டு பரிமாறவும்.


சுவையான பட்டர் காளான் ரெடி. இதனை நாண், பரோட்டா, சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம். காரம் குறைவாக விரும்புபவர்கள் அரைதேக்கரண்டி சில்லி பவுடர் சேர்க்கலாம்.


26 comments:

athira said...

meeeeeeeeeee the first:)))

athira said...

இன்னும் படிகல்ல, படம் மட்டும் பார்த்தேன், நில்லுங்க படிச்சுட்டு.. சொல்றேன்..

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர்.. இந்தக் கிரேவியுடன் மட்டுமே தொட்டுத் தொட்டுத் சாப்பிடலாம்போல இருக்கு.

ராதா ராணி said...

பட்டர் காளான் நல்ல கிரேவியா நாவூற செய்கிறது.:P

savitha ramesh said...

romba nalla irukku mam.Love the curry.

ராமலக்ஷ்மி said...

செய்து பார்க்கிறேன் ஆசியா. ஆவலைத் தூண்டுகின்றன படங்களும். நன்றி.

கடைசி இரண்டு படங்களிலிருந்து கமகமவென வாசம் வரும் உணர்வு. அதற்கு தனிப்பாராட்டு:)!

சே. குமார் said...

பாக்கும் போது சூப்பராத்தான் இருக்கு.. செய்ய முடியாது... சாப்பிட அக்கா வீட்டுக்குத்தான் வரணும்.

Sumi said...

romna nalla iruku.Kandippa seinchi parkiren

Priya said...

Super rich butter mushrooms, ghee riceoda superaa irrukume.

middleclassmadhavi said...

Will try. Thanks for sharing!

Ramani said...

செய்முறை விளக்கும் படங்களும்
மனதைக் கொள்ளை கொண்டது
அவ்சியம் செய்து பார்க்கத் தூண்டும் அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Akila said...

Wow simply superb

விச்சு said...

எனக்கு ஒரு ப்ளேட்.

ஸாதிகா said...

பட்டர் காளான் மண மணக்கிறதே..கிரேவியும் க்ரீமியாக பார்க்கவே சாப்பிடத்தூண்டுகிறது.

VijiParthiban said...

மிகவும் அருமை.
மிகவும் அருமையான பட்டர் காளான். எனக்கு பார்க்கும் பொழுதே நாக்குஊருகிறது அக்கா. எனக்கு கொஞ்சம் தாருங்கள் அக்காகாகா..........

Mahi said...

பார்டிக்கு நல்லதொரு டிஷ்! நல்லா ரிச்சா இருக்கும் போல..பட்டன் காளானைத்தான் பட்டர் காளான்னு எழுதிருக்கீங்களோன்னு குழம்பிட்டே வந்தேன்! =)

Yasmin said...

இந்தக் கிரேவி பாக்கும் போதே அருமை...செய்து பார்க்கிறேன்.

Packya said...

பட்டன் காளான் அப்படியே சாப்பிட தூண்டுது. ம்ம்ம்.. யம்மி....

ஜெய்லானி said...

காஷ்மீரி சில்லி பவுடர் - 1 தேக்கரண்டியா ..?? கேட்கும் போதே கண்ணீர் வருதே அவ்வ் :-))))

ஜெய்லானி said...

//athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர்.. இந்தக் கிரேவியுடன் மட்டுமே தொட்டுத் தொட்டுத் சாப்பிடலாம்போல இருக்கு//

அதிஸுக்கு காஷ்மீரி சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி

Asiya Omar said...

அதிரா மிக்க நன்றி.
ராதா மிக்க நன்றி.
சவிதா மிக்க நன்றி
ராமலஷ்மி மிக்க நன்றி.
சே.குமார் மிக்க நன்றி.
சுமி மிக்க நன்றி.
ப்ரியா மிக்க நன்றி.
மிடில் கிளாஸ் மாதவி மிக்க நன்றி.
ரமணி சார் மிக்க நன்றி.
அகிலா மிக்க நன்றி.
விச்சு மிக்க நன்றி.
ஸாதிகா மிக்க நன்றி.
விஜி மிக்க நன்றி.
மகி மிக்க நன்றி.
யாஸ்மின் மிக்க நன்றி.
பாக்கியா மிக்க நன்றி.

Asiya Omar said...

சகோ.ஜெய்லானி, காஷ்மீரி சில்லி பவுடர் காரம் குறைவாகவும்,நிறம் நல்ல சிவப்பாகவும் இருக்கும்,காரம் பாதி ஸ்பூன் கூட போட்டு கொள்ளலாம்.வருகைக்கு மிக்க நன்றி.

ஜெய்லானி said...

//காஷ்மீரி சில்லி பவுடர் காரம் குறைவாகவும்,நிறம் நல்ல சிவப்பாகவும் இருக்கும்,காரம் பாதி ஸ்பூன் கூட போட்டு கொள்ளலாம்//

பாக்கெட் பவுடரா வாங்கினா நீங்க சொல்ரது சரி . காய்ந்த மிளகாயா வாங்கி அரைச்சா... வயிறு தாங்காது :-)))))))

ஹேமா said...

நானும் காளான் அடிக்கடி சமைப்பேன்.ஆனால் இந்தச் செய்முறை வேறாக இருக்கிறது.சமைத்துப் பார்க்கிறேன் ஆசியா !

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெய்லானி,காரம் உங்க சுவைக்கு கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.

ஹேமா மிக்க நன்றி.செய்து பாருக்க.மகிழ்ச்சி.

ramya anand said...

First time here...butter mushroom different Aaa irukku..pu dhu recipe