Saturday, June 2, 2012

மாம்பழப் புளிசேரி / Mango Pulicheri

இந்த குறிப்பை அகிலாஸ்கிச்சன் Dish Name Starts with M இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

தேவையான பொருட்கள்:
நறுக்கிய இனிப்பான மாம்பழத்தூண்டுகள் - ஒரு கப்.
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி(விரும்பினால்)
சிறிது புளித்த தயிர் - அரை கப் (தேவைக்கு)
சீனி - ஒரு தேக்கரண்டி(விரும்பினால்)
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
பூண்டு பல் - சிறியது ஒன்று (விரும்பினால்)
கருவேப்பிலை- 3 இலை
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
கடுவேப்பிலை - 1 இணுக்கு

நன்கு பழுத்த மாம்பழத்தை தோல்நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.





ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், அரை கப் தண்ணீர், மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,சீரகத்தூள்,சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.


கொதி வரவும் பட்டு போல் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு தேங்காய் வாடை அடங்கும் படி சிம்மில் வைத்து கொதிக்கட்டும்.




அத்துடன் தயிர் சேர்க்கவும்,கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
உப்பு சரிபார்க்கவும்,மாம்பழம் இனிக்கவில்லை என்றால் ஒரு தேக்கரண்டி சீனி சேர்க்கலாம்.


வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம், மிளகாய் வற்றல்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.


சுவையான மாம்பழப் புளிசேரி ரெடி. ப்ளைன் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். பப்படம்,காய்கறி துவரன்,வறுவலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


இது ஓணம்,விஷு சத்யாவின் (விருந்தின்) போது கேரளாவில் பிரசித்தமாக செய்து பரிமாறப்படும்.இப்ப கோடை நேரம், மாம்பழம் தாராளமாக கிடைக்கும். சிறிய மாம்பழம் என்றால் தோல் நீக்கி முழுதாக போடலாம். இந்த குழம்பை செய்து நாமும் ருசித்து பார்க்கலாம்.பூண்டு, சீரகம் சேர்க்காமலும் செய்யலாம்.கெட்டித்தனமை ஊற்றிக் கொள்வது போல் இருக்க வேண்டும்.தயிர் விரும்பினால் கூட்டிக் கொள்ளலாம்.

20 comments:

athira said...

சூப்பர் ஆசியா. பார்கவே வாய் ஊறுது.. செய்து பார்க்க வேண்டும், சூப்பர் கலராக இருக்கு.

ராதா ராணி said...

மாம்பழத்தில குழம்பா...புதுசா இருக்கு.செய்து பார்க்கிறேன் ஆசியா..ரொம்ப சீக்கிரம் குழம்பு பண்ணிடலாம் போல..:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாம்பழப் புளிசேரி

புதுக்கச்சேரி போல கேட்கவே புதுமையாகவும் அருமையாகவும் இருக்கு!

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அஸ்மா said...

சலாம் ஆசியாக்கா!

மாம்பழப் புளிசேரி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா செய்ததுமில்லை, சாப்பிட்டதுமில்லை :) மோர்க் குழம்பு மாதிரியான் டேஸ்ட்டில் இருக்குமோ?

இன்ஷா அல்லாஹ் செய்துப் பார்க்கிறேன். நன்றி ஆசியாக்கா.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

விதவிதமான சமையல் அசத்துங்க....உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு டெய்லி விருந்துதான்........


புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்

எனது தள கட்டுரைகளில் சில:
அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

Kanchana Radhakrishnan said...

சூப்பர் ஆசியா.
பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நல்லா இருக்கு.... செய்துடுவோம்.... :)

ராமலக்ஷ்மி said...

மாம்பழ சீசனில் அருமையான குறிப்பைத் தந்துள்ளீர்கள். அவசியம் செய்து பார்க்கிறேன். இதே போல (தயிர் சேர்க்காமல்) அன்னாசியிலும் செய்கிறார்கள் கர்நாடகாவில்.

Priya said...

Slurp,mouthwatering here, romba pidichathu.

அமைதிச்சாரல் said...

இந்த சீசன்ல நாலஞ்சு தடவை செஞ்சு சாப்பிட்டாச்சு. சீசன் சமயம் ஊர்ல இடியாப்பத்துக்கு இதைத்தான் சைடிஷ்ஷா செய்வாங்க. அதுவும் நம்மூர்ல இதுக்குன்னே குட்டி சைஸ்ல மாம்பழம் கிடைக்கும். தோலை சீவாமலேயே போட்டுச் செய்யலாம்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆசியாக்கா.. இது புதுசா இருக்கே.. படத்தில் பார்க்கும்போது ரொம்ப அருமையா இருக்கு.. சாப்பிடதான் முடியல..

S.Menaga said...

ரொம்ப நல்லாயிருக்குக்கா!!

Aruna Manikandan said...

parkave supera irruku :)

Mahi said...

அருமையா இருக்கு ஆசியாக்கா! :P

நான் இதுவரை இந்த புளிசேரி சாப்பிட்டதே இல்லை..அதனாலோ என்னவோ, வீட்டில் செய்துபார்க்க தயக்கமாவே இருக்குது! இந்த முறை மாம்பழம் நல்லா இனிப்பா இருந்தது, அப்படியே சாப்ட்டுட்டோம்! ;)
அடுத்த முறை வாங்கினால் செய்து பார்க்க முயற்சிக்கிறேன். :)

enrenrum16 said...

இனிப்பான மாம்பழம்னு சொல்லிட்டீங்க...அது குழம்பில் போடுறதுக்குள்ள காலியாகிடுமே... ஹி..ஹி... சும்மா சொன்னேன்.... அமைதிச்சாரல் சொன்ன மாதிரி இடியப்பத்துக்கு ட்ரை பண்ணிட வேண்டியதுதான்.. குறிப்புக்கு நன்றி.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

vanathy said...

சூப்பர் ரெசிப்பி.

ஹேமா said...

புதுசா இருக்கு ஆசியா.மலை நாட்டுப் பகுதிகளில் மாங்காயில் குழம்ப்பு வைப்பார்கள்.சாப்பிட்டிருக்கிறேன் !

மாதேவி said...

மாம்பழ புளிசேரி சூப்பர்.

Mahi said...

அக்கா, மாம்பழப் புளிசேரி செய்தாச்சு..சூப்பரா இருந்தது! சீக்கிரமா படத்தோட அப்டேட் செய்யறேன்! :)