Monday, June 4, 2012

கேரள பருப்பு கறி

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பூண்டு பல் - சிறியது 1
பச்சை மிளகாய் - சிறியது -1
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு இணுக்கு
நெய், உப்பு - தேவைக்கு

பருப்பை ஊற வைக்கவும். தேங்காய்,சீரகம், பச்சை மிளகாய்,பூண்டு, 3 இலை கருவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

குக்கரில் ஊறவைத்த பாசிப்பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விட்டு அணைக்கவும்.ஆவியடங்கியவுடன் திறக்கவும்.


அத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர்,உப்பு சேர்த்து சிம்மில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்.



கொதித்து தேங்காய் வாடை மடங்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.இப்படியே பரிமாறலாம்.வெறும் சாதத்துடன், நெய் பருப்பு கறி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.ஓணம்,விஷூ சத்யாவின் போது முதலில் சாதத்தில் இந்த பருப்பும்,நெய்யும் பரிமாறுவார்கள்.


சுவையான பருப்பு கறி ரெடி.விருப்பபட்டால் நெய்யில் கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்தும் சேர்க்கலாம்.ஆனால் அங்கு தாளிக்காமல் நெய் விட்டு பரிமாறுவதே வழக்கம்.


21 comments:

ராதா ராணி said...

கேரளத்து குறிப்பா குடுத்து அசத்துறீங்க ஆசியா...பருப்புகறி கம கமன்னு நெய் வாசத்தோட நல்லா இருக்கு..

angelin said...

எங்கம்மா எப்பவுமே மசூர் பருப்பு இக்கு பதில் பாசிப்பருப்ப தான் கடைந்து செய்வாங்க ஆசியா . நாளாச்சி இதை செய்து இப்ப நினைவுக்கு வந்திடுச்சி .தாளிச்சா ரொம்ப டேஸ்ட் .பகிர்வுக்கு நன்றி

Asiya Omar said...

ராதா வாங்க,மகிழ்ச்சி.இது முன்பே சமைத்தது,ஃபைலில் இருந்து எடுத்துப் போட்டேன்.நான் எங்கே எதையாவது ருசித்தால் சமைத்துப் பார்ப்பது வழக்கம்.

Divya Pramil said...

Looks delicous :)

Participate and win prizes
The Master Chef Contest
You Too Can Cook Indian Food Recipes

அமைதிச்சாரல் said...

நல்லா இருக்கு ஆசியா..

Aruna Manikandan said...

sounds healthy and delicious :)

vanathy said...

looking delicious.

Akila said...

Looks delicious...

Event: Dish Name Starts With M
Learning-to-cook
Regards,
Akila

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கு சகோ...

Mahi said...

ஆசியாக்கா இதே போழ் கொறச்சு மலையாளக் குறிப்பும் தந்துட்டேயிரிக்கணம்,கேட்டொ?! பரிப்பு கறி அடிப்பொளியாயிட்டுண்டு!;))))

[ஆண்டவா,மலையாள மக்கள் என் மலையாளத்தைப் பார்த்து டென்ஷன் ஆகாம (அவிங்களை) காப்பாத்து! :))))]

Asiya Omar said...

ஏஞ்சலின் வருகைக்கு மிக்க நன்றி.
திவ்யா மிக்க நன்றி.
அமைதிச்சாரல் மிக்க நன்றி.
அருணா மிக்க நன்றி.
வானதி மிக்க நன்றி.
அகிலா மிக்க நன்றி.
சகோ.வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

Asiya Omar said...

அய்யோ! மகி, உன் கருத்தை பார்த்து விட்டு என் கணவர் சொல்கிறார், பரிப்பு கறியின் மகிமை எனக்கு தானே தெரியும் என்று.எனக்கு கேரள சமையல் டிப்ஸ் தரும் ப்ரியா இதைப் பார்க்காமல் இருக்க வேண்டும்.(அவங்களுக்கு தமிழ் வாசிக்க மட்டும் தெரியும் !)அவங்க வீட்டில் சாப்பாடு போட்டதில் இருந்து இப்படி பல முயற்சி நடக்குது.

Priya said...

Paruppu curry manam inga varaikum varuthu.arumai.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கேரள பருப்புக்கறி ஜோர் ஜோர்.

இமா said...

குறிப்பு நல்லா இருக்கு ஆசியா.

இங்க பயறு சமைச்சால் இமா தனியத்தான் சாப்பிடவேணும்.

Thenammai Lakshmanan said...

super .. aromatic..:)

ஸாதிகா said...

அசத்தல் பருப்புக்கறி..கேரளா.கர்நாடகா.மகாராஷ்ட்ரா ...என்று பல்சுவை விருந்துகள் பரிமாறுங்கள்

Asiya Omar said...

ப்ரியா மிக்க நன்றி.
வை.கோ சார் மிக்க நன்றி.
இமா மிக்க நன்றி.
தேனக்கா மிக்க நன்றி.
ஸாதிகா மிக்க நன்றி.

அன்பான நட்புள்ளங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.

ஹேமா said...

எங்க வீட்ல இப்பிடித்தான் சமைப்போம் ஆசியா.நன்றி !

athira said...

கேரள பப்புக்கறி சூப்பர்...

Asiya Omar said...

ஹேமா மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.