Thursday, June 7, 2012

கேரள கடலை கறி

தேவையான பொருட்கள்;கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிள்காய் -1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - அரைதேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.


கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். அதிகாலை ஊற வைத்தால் மதியம் சமைக்க சரியாக இருக்கும்.


குக்கரில் ஊறிய கடலை,மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு போட்டு மூடி 8 விசில் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.


ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவல் லேசாக சிவற வறுக்கவும்,அத்துடன் மல்லிப் பொடி,சீரகப் பொடி,பெருஞ்சீரகப் பொடி,மிளகாய்ப் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும்.

வறுத்த மசாலாவை தண்ணீர் விட்டு பட்டு போல் அரைத்து எடுக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு,கருவேப்பிலை போட்டு பொரியவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி,பச்சை மிள்காய் சேர்த்து,சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கவிடவும்.


தக்காளி வதங்கி இப்படி கூட்டு போகும் ஆக வேண்டும்.


அரைத்த மசாலாவை சேர்த்து தேவைக்கு தண்ணீர்(கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர்) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.


நன்கு கொதிவரவும், வெந்து எடுத்து வைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும். நன்கு கொதித்து வரும் பொழுது அடுப்பை குறைத்து வைக்கவும்.
குழம்பு கெட்டித்தனமை தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதித்து இறக்கவும்.


சுவையான சத்தான கேரள கடலை கறி ரெடி.

வெறும் சாதம், சப்பாத்தி, ஆப்பம்,புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.


எப்பவும் எனக்கு இந்த கடலை கறி மீது ஒரு கண் உண்டு.நான் கோவையில் கல்லூரி ஹாஸ்டலில் விரும்பி சாப்பிடும் கறி இது,பின்பு அபுதாபியில் இருந்த சமயம் என் எதிர்த்த வீட்டு சிந்து அடிக்கடி இந்த கடலை கறி வைப்பதுண்டு. இது என் ஸ்டைலில் வைத்திருக்கிறேன்.கேரளாவில் முழு மல்லி,சீரகம், வற்றல் என்று அரைத்து செய்வார்கள். நான் இங்கு தேங்காயுடன் அனைத்து மசாலாவின் பொடியை வறுத்து அரைத்து செய்திருக்கிறேன்.எனக்கு என் ஹாஸ்டலில் சாப்பிட்ட ருசி கிடைத்தது.அருமையாக இருந்தது. நீங்களும் செய்து அசத்துங்க.

27 comments:

இமா said...

குறிப்பு நன்றாக இருக்கிறது.

Asiya Omar said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி இமா.மிக்க நன்றி.

ராதா ராணி said...

ஆஹா..நம்பவே முடியல்லை ஆசியா..இன்று எங்க வீட்டிலையும் இந்த கொண்டை கடலை கறிதான்..வாராவாரம் வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டைகடலை மாலை போடுவோம்.அப்பொழுது சில வாரம் இந்த கறி செய்வேன்.நல்லா இருக்கு.இதே முறையில் தான் நானும் செய்தேன்.நீங்க பச்சை மிளகாய் 1 போட்டிருக்கிங்க,நான் காரத்துக்காக 3 மிளகாய் போட்டேன்.:)

Sangeetha Nambi said...

Love this with Puttu.... :)

Priya said...

Puttum kadala curryum, wat an authentic dish.

vanathy said...

super recipe.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

கேரள கடலை கறி பேரே வித்தியாசமா அசத்தலா இருக்கு உங்க சமையல் மாதிரி...கொண்டைகடலை அதிகமா சாப்பிட்ட உடம்மு சதை போடும்னு சொல்லுறாங்களே உண்மையா சகோ?

நாங்களும் தளம் வச்சிருக்கோம் அதுக்கும் வாங்க......உங்க கருத்தை தெரிவியுங்கள்........

புதிய வரவுகள்:
பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?,கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

எனது தள கட்டுரைகளில் சில:
அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

savitha ramesh said...

love the putty.

அமைதிச்சாரல் said...

அசத்தலான குறிப்பு ஆசியா..

Mahi said...

முன்பே கடலைகறி ரெசிப்பி போட்டிருக்கீங்களோ ஆசியாக்கா? நல்லா இருக்கு குழம்பு! செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

ராதா ராணி மிக்க நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

திருவாளப்புத்தூர் லருத்திற்கு மிக்க நன்றி.எப்பவாவது செய்து சாப்பிடலாம்.

சவீதா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

Asiya Omar said...

மகி,கருத்திற்கு நன்றி.அது எங்க சித்தி வீட்டில் அடிக்கடி செயவது.அது வேறு மாதிரி,சிக்பீஸ் ஸ்டூ ஆப்பத்திற்கு செய்து சாப்பிடக்கூடியது.
http://asiyaomar.blogspot.com/2010/10/chickpeas-stew.html
இந்த லின்க் தானே சொல்றீங்க,அது பச்சை மிள்காய் தேங்காயப்பால் விட்டு செய்யிறது.

Akila said...

Looks delicious

Kalpana Sareesh said...

Wonderful recipe.. bookmakred..

சிநேகிதி said...

அக்கா நலமா/? கொண்டை கடலை குழம்பு நன்றாக இருக்கு

athira said...

சூப்பர் பார்க்கவும் அழகூஊஊஊ..


இது ஜீனோவுக்கு ரொம்பப் பிடிக்குமே....

Vijiskitchencreations said...

My favorite recipe. How are u doing?

ஸாதிகா said...

கேரளாவில் உள்ள என் தோழி ஒருவர் இப்படித்தான் கடலைக்க்றி செய்வார்.நான் இந்தக்கடலையில் சுண்டல்ம் வைத்து சாப்பிடுவதோடு சரி;

Asiya Omar said...

அகிலா மிக்க நன்றி.

கலபனா மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நலம்.வருகைக்கு மகிழ்ச்சி.

அதிரா மிக்க நன்றி.ஜினோவிற்கு இவ்விடம் தெரியாது.

விஜி மிக்க நலம்.வருகைக்கு மகிழ்ச்சி.

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

குறிப்பு சூப்பர்.

padus kitchen said...

i am new visitor to your blog. it is simply super.i loved very much.i am going to try all your receipes

S. Gathampari Harivijayaraj said...

its really drooling..my all time favorite...luks very attractive

எல் கே said...

இந்த வாரம் சப்பாத்திக்கு இதுதான்

Asiya Omar said...

காஞ்சனா மிக்க நன்றி.

பத்து மிக்க நன்றி.

காதம்பரி மிக்க நன்றி.

Asiya Omar said...

எல்.கே.ப்ளாக் பக்கம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.வருகைக்கு நன்றி.

Pattu Raj said...

Very nicely explained. It is inspiring me to try it out soon. Thanks for sharing.

All your other recipes too are very good.

Unknown said...

நானூம் செய்து பார்க்குறேன் க்டலை கறி