Wednesday, June 20, 2012

சுவையரசி போட்டி - ஒரு அனுபவம்

அமீரக தமிழ் மன்றம் நடத்திய சுவையரசி போட்டி பற்றிய மெயில் ஏப்ரல் மாதம் வந்தது.இதுவரை நானும் விதம் விதமாக வீட்டில் தான் சமைத்து உங்களோடு பகிர்ந்ததுண்டு. சமையல் போட்டி எதிலும் கலந்து கொண்டதில்லை. இந்தமுறை கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து நாங்களும் அல் ஐனில் இருந்து துபாய்க்கு சென்று வந்தோம்.
ஏப்ரல் 13 -ஆம் தேதி சுவையரசி போட்டி துபாய் கராமா சிவ்ஸ்டார்பவனில் நடந்தேறியது. மே 4 ஆம் தேதி நடந்த அமீரக தமிழ் மன்றம் நடத்திய கனவு மெய்ப்பட வேண்டும் என்ற பெண்கள் தின சிறப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.விழா பற்றிய விபரம் இன்னொரு பதிவாக வெளியிடுவேன்.முதல் மூன்று பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் அறிவித்தார்கள். கீழ்காணும் பரிசுப் பார்சல் எனக்கு கிடைத்தது தான்.


'Suvai Arasi 2012' (Queen of Taste) COOKING COMPETITION
Title
‘Sweet 2012'
 • · Date: FRIDAY 13th April 2012 @ 3.30 PM SHIVSTAR BHAVAN, KARAMA
 • · COOK AT HOME AND BRING
 • Enter an original recipe that does not contains any readymade mix
 • You should cook / mix and bring the dessert on time please
 • The registration and the decoration should be completed before 4:00 pm before the judges’ arrival
 • All decisions of the Judges in any matter relating to this cooking competition shall be final .
 • Along with the cooked item you have to bring a written recipe for the dish
 • Name the dessert, put the receipe along, insert the registration number on desk and move.
 • You have to submit and finish decorating before 4.00 p.m. and we cannot accept any submission after that, as the judging time starts from 4.00 p.m.
 • The submitted dish will be scored according to the following criteria:
  i. Taste - 20 marks
  ii. Innovative idea – 10 marks
  iii. Delicious look, overall appearance and decoration – 20 marks
 • Result of the competition will be announced only on the Women's Day Celebration i.e. 4th May 2012.
 • All the participants will be receiving a gift.

கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசாக ஒரு ஹாட்பேக்கும்,ஆச்சி மசாலா கிஃப்ட் பேக்கும் வழங்கப்பட்டது.

இனி போட்டி பற்றிய அனுபவத்தை பார்ப்போம். இனிப்பு - 2012 என்பது தான் தலைப்பு. சரியான நேரத்திற்கு சென்று பாரம் நிரப்பி கட்டணமாக ரூ 150 திர்ஹம் செலுத்தி குடும்ப உறுப்பினராகிக் கொண்டோம்.
அழைப்பிதழ் படி அனைத்து ஏற்பாடும் சிறப்பாக செய்திருந்தார்கள். அப்பப்பா,விதம் விதமாக இனிப்புகளை செய்து கொண்டு வந்து கலந்து கொண்ட அனைவரும் அசத்தினார்கள்.
அனைவரும் பதார்த்தங்களை பார்வைக்கு வைத்தோம்.
எங்களுக்கு என்று கொடுத்த எண்ணை பதார்த்தம் பக்கம் வைத்து விட்டு நாங்கள் வெளியேறிவிட்டோம்.
நடுவர்கள் வரும் சமயம் நாங்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை.அவர்கள் சுவைத்து மதிப்பெண் போட்ட பின்பு நாங்கள் சென்று ஒருவருக்கொருவர் அனைத்து பதார்த்தத்தையும் சுவைத்து மகிழ்ந்தோம். ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த போட்டியின் முடிவு மே 4 ஆம் தேதி விழா மேடையில் அறிவிக்கப் பட்டது.ஆர்வமாக அனைவரும் விழாவிற்கு சென்று சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் கண்டு கழித்து இறுதியாக சுவையரசி- 2012 யார் என்ற அறிவிப்பு சிறப்பு விருந்தினரான நடிகை ரேகா முன்னிலையில் அறிவிக்கப் பட்டது. என் கேமராவில் நான் கிளிக்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கு.அதிர்ஷ்டவசமாக பரிசு பெற்ற பதார்த்தங்களை எடுத்திருந்தேன். போட்டியில் 24 நபர்கள் பங்கேற்றார்கள். இனி சில போட்டிக்கு வந்திருந்த பதார்த்தங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு.

இது தான் முதல் பரிசு பெற்ற ஸ்ட்ராபெர்ரி ஜெம்ஸ் கேக்.பார்க்கவே சூப்பர்.
இரண்டாவது பரிசு மார்பிள் கேக்.கிவி,ஸ்ட்ராபெர்ரி வைத்து அலங்கரித்திருந்தது.கடின உழைப்பு தெரிந்தது.

மூன்றாவது பரிசு ஷீர் குர்மாவிற்கு கிடைத்தது.நல்ல ரிச்சாக இருந்தது.
இனி நான் கிளிக்கிய சில பதார்த்தங்கள்.

இது நம்ம மாஸ்டர் செஃப் ஜலீலா செய்து அசத்திய ட்ரை கலர் அகார் அகார். நாங்கள் ருசித்து பார்த்தோம் மிக பக்குவமாக இருந்தது.

இது தான் நான் செய்த பேக்ட் ஆப்பிள் புட்டிங்.எனக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு கிடைத்தது.

ஒரு விஷயம் நடுவர்கள் சுவைத்த பின்பு என் பதார்தத்தை வந்து பார்த்தால் நான் எப்படி வைத்தேனோ அப்படியே இருந்தது. ஒரு ஸ்பூன் கூட எடுத்த மாதிரியில்லை.எடுக்கவில்லை. அருகில் ப்லேட்,ஸ்பூன் எல்லாம் வைத்திருந்தேன்.எப்படி என்னோடது விட்டுப் போனது என்று தெரியவில்லை.ருசிக்காமல் எப்படி மதிப்பெண் கொடுத்தார்கள் என்பது ஆச்சரியமே!

நான் கேட்டதற்கு நீங்கள் தனியாக எடுத்து வைக்கவில்லை என்று பதில் வந்தது.பெரும்பாலான பலகாரங்கள் ,பரிசு பெற்றவைகள் அப்படியே தான் பரிமாறியிருந்தார்கள். அது போல் தான் நானும் பரிமாறியிருந்தேன். என் கணவரும், மகளும் இத்தனை சிரமப்பட்டு செய்து அல் ஐனில் இருந்து துபாய் பயணித்து போய் கலந்து கொண்டாயே, நடுவர்கள் உன் பதார்த்தத்தை ருசிக்கவேயில்லை. என்ற படியே திரும்பி வந்தார்கள்.என்றாலும் நடுவர்கள் சென்ற பின்பு நான் அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் பவுலில் வைத்து பரிமாறி ருசி பார்க்க கொடுத்து, என்னை தேற்றி கொண்டேன்.இது எனக்கு முதல் முறை தானே!

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - அரைகிலோ (3)
தேன் - 4 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
பட்டைத்தூள் - அரை தேக்கரண்டி
ப்ரெட் துண்டுகள் - 8 ( பெரிதாக இருந்தால் 5 )
வெண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 4 மேஜைக் கரண்டி
உலர் திராட்சை - 3 மேஜைக் கரண்டி
நறுக்கிய வால்நட்ஸ் - 3 மேஜைக்கரண்டி
காய்ச்சிய பால் - அரை கப்.

செய்முறை:
1. ப்ரெட் துண்டுகளை சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.

2.ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் உருக விட்டு அதனுடன் ப்ரெட் துண்டுகள் சர்க்கரை சேர்த்து பிரட்டி விட்டு இளஞ்சிவப்பாக வரும் பொழுது பால் உலர் திராட்சை நறுக்கிய வால்நட் பருப்பு சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.

3.ஆப்பிளை தோல் விதை நீக்கி மெல்லிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிளை பரத்தி வைத்து எலுமிச்சை சாறில் பாதி,தேனி பாதி ,பட்டை தூளிலும் பாதி தூவி விடவும்.
திரும்பவும் இதே போல் ஆப்பிள் துண்டுகள் ,எலுமிச்சை சாறி,தேன்,பட்டை தூள் தூவி விடவும்.

4.அதன் மேல் ரெடி செய்த ப்ரெட் கலவையை பரத்தி வைத்து கொஞ்சம் பால் தெளித்து மூடி வைக்கவும்.ஆப்பிளில் வேகும் பொழுது தண்ணீர் ஊறும்.

5.எலெக்ட்ரிக் அவனை 250 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.30- 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.ஆறிய பின்பு அது இறுகி விடும் ப்ரிட்ஜில் வைத்து எடுத்து, வெளியே வைத்தும் பரிமாற்லாம்.ஃப்ரிட்ஜில் வைக்காமலும் பரிமாறலாம்.

சுவையான சத்தான ஆரோக்கியமான பேக்ட் ஆப்பிள் புட்டிங் ரெடி.

இதனை ஓவனில் வைக்காமல் அப்படியே ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பவுலில் செட் செய்து அலுமினியம் ஃபாயில் கொண்டு கவர் செய்து குக்கரில் ஆவியில் அரைமணி நேரம் வேக வைத்தும் எடுக்கலாம்.இது பேனசோனிக் ரெசிப்பி புத்தகத்தில் பார்த்து செய்தேன்.உங்கள் அனைவரின் சார்பாக நம்ம ஜலீலா ருசித்து விட்டு மிக அருமை என்று பாராட்டினார்கள்.

விருப்பம் போல் அலங்கரித்து பரிமாறலாம். நான் இதனை செர்ரி, பிஸ்தா,பாதாம் ப்ளேக்ஸ் உபயோகித்து அலங்கரித்து பரிமாறினேன்.கட் செய்து பரிமாறவும்.
என்னுடைய இந்த குறிப்பின் படிப்படியான புகைப்படத்தை காண இங்கு செல்லவும்.

எனது டேட் புட்டிங் குறிப்பையும் செய்து பாருங்கள். டேட் புட்டிங் போலவே இந்த ஆப்பிள் புட்டிங்கையும் ஸ்டீம் செய்து எடுக்கலாம்.

- ஆசியா உமர்.20 comments:

Akila said...

Unga recipe romba nalla than iruku. Judgesku saapida kuduthu vaikalannu ninaichikongapa

விச்சு said...

நானும் கொஞ்சம் எடுத்து சாப்பிடலாமா? எல்லாமே பார்க்கவே அழகா இருக்கு.

angelin said...

வாழ்த்துக்கள் ஆசியா
எல்லா வெரைடிசும் அழகா இருக்கு .
ஜலீலாக்காவின் ட்ரை கலர் AGAR AGAR சூப்பரா இருக்கு .
இத்தகைய இவேன்ட்ஸ் நாம் திறைமைகளை வெளிக்கொணர ஒரு சந்தர்ப்பம் .நீங்க நிறைய பரிசுகளை வெல்லணும்.
உங்க ரெசிப்பி ஆப்பிள் ஸ்மூதி செய்தாச்சு உங்க வீட்டில் நடந்தார்போலவே போட்டோ எடுக்கமுன் கப் காலி .:)))))

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துகள் வாழ்த்துக்கள்....!!!

Priya Sreeram said...

Kudos yo your sporting spirit ! I am surprised how the judges rate any dish without tasting it. Having said that I agree with akila that it is their misfortune not to have tasted your work of labour and love. Carry on the good work :)

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கவே அழகா இருக்கு! கொஞ்சம் தில்லிக்கும் பார்சல் ப்ளீஸ்.... :)

ராமலக்ஷ்மி said...

மிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். ஆப்பிள் புட்டிங் செய்முறைக்கு நன்றி ஆசியா. சென்று வந்ததை அனுபவமாக எடுத்துக் கொண்டு மேலும் உற்சாகமாக அடுத்து வரும் போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். வெற்றிகள் தேடி வரும்.

சே. குமார் said...

அக்கா...
கலந்து கொண்டதே சந்தோஷம்...
பதார்த்தத்தை சுவைக்காமல் மார்க் இட்ட மேதாவிகளை எப்படி நடுவராக தேர்வு செய்தார்கள்.
விடுங்க...
கலந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் அக்கா...

Asiya Omar said...

முதலாய் வந்து கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

விச்சு தேவைக்கு எடுத்துக்கலாம்.கருத்திற்கு மகிழ்ச்சி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.என் மகள் இது மாதிரி அவளாக ரெசிப்பி கிரியேட் செய்து எனக்கு ருசி பார்க்க தருவது வழக்கம்.ஆப்பிள் ஸ்மூத்தி ஹிட்டாயிடுச்சா? இனி அவள் ஏதாவது செய்தால் நிச்சயம் கேட்டு ஷேர் செய்றேன்..

Asiya Omar said...

நாஞ்சில் மனோ வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

ப்ரியா மிக்க நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.

சகோ.வெங்கட்,நேரில் பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருந்தது.எல்லாம் டேஸ்ட் செய்தேன் அந்த உணர்வே தனி.கருத்திற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

மிக்க நன்றி ராமலஷ்மி.இது நிஜமாகவே ஒரு நல்ல அனுபவம்,பங்கு பெற்ற அனைவருமே அவங்க பெஸ்டை கொடுத்திருந்தார்கள்.என்ன எங்களுக்கு தான் ஒரு சின்ன ஏமாற்றம்,அது எப்படி ஒரு ஸ்பூன் கூட எடுக்காமல் என் பதார்த்தத்தை விட்டார்கள் என்று.நாலைந்து பேர் உள்ளே நின்றார்கள் மதிப்பிடுவதற்கு.


சகோ.குமார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Mahi said...

இனிப்புகள் அணிவகுப்பு அருமை! ஆனால் உங்க டெஸர்ட்டை எடுத்து சாப்பிடாமலே எப்படி முடிவு செய்தாங்களாம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சரி விடுங்க, அடுத்த முறை தனித்தனி கப்பில பரிமாறி அசத்திருங்க ஆசியாக்கா!

பேக்ட் ஆப்பிள் புடிங் ஆங்கில வலைப்பூவில் அப்பவே பாத்துட்டேனே, சூப்பரா இருக்கு! அதுவும் அந்த மேலே அடுக்கி வைச்சிருக்கும் செர்ரி ரொம்ப டெம்ப்டிங்-கா இருக்குது! :)

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் சகோதரி ! ரொம்ப சிரமப்பட்டுள்ளீர்கள் என்பது மட்டும் உங்கள் எழுத்தில் தெரிகிறது ! படங்கள் எல்லாம் பார்த்தாலே பசிக்கிறது ! பாராட்டுக்கள் ! நன்றி !

இமா said...

ஆஹா!! கலர்ஃபுல்..லா இருக்கு ஆசியா. பாராட்டுக்கள்.
ம்... பரவால்ல, யோசிக்காதீங்க. எல்லாமே அனுபவம்தானே. அடுத்த தடவை அலர்ட்டா விசாரிச்சு வைச்சு சரியா பண்ணிரலாம்.

Sangeetha Nambi said...

Congrats and all dishes are tempting me Asiya...

http://recipe-excavator.blogspot.com

ஸாதிகா said...

அருமையான புகைப்படங்கள் பிரமாதமான பகிர்வு.

சிநேகிதி said...

முதல் முறை தானே அக்கா அடுத்த முறை அசத்தி முதல் பரிசு பெற வாழ்த்துக்கள். உங்கள் குறிப்பு அருமை.

Asiya Omar said...

மிக்க நன்றி மகி.கருத்திற்கு மகிழ்ச்சி.

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.வருகைக்கு மகிழ்ச்சி.

வாங்க இமா,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றி சங்கீதா.மகிழ்ச்சி.

மிக்க நன்றி ஸாதிகா. மகிழ்ச்சி.

சிநேகிதி மிக்க மகிழ்ச்சி.
அனுபவதிற்காகத்தான் கலந்து கொண்டேன்,கருத்திற்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

ஆப்பிள் புடிங் பார்க்கவே நல்லாருக்கு.

அடுத்த தடவை முதல் பரிசு வெல்ல வாழ்த்துகள் ஆசியா.

Vijiskitchencreations said...

Late comer. Congrats Asia. I did't see this post, because I was in India.

Next time definitely u will win.