Friday, June 22, 2012

மஷ்ரூம் பீஸ் ஃப்ரைட் ரைஸ் ( பிரியாணி ப்லேவர்)

தேவையான பொருட்கள்:
வேகவைத்த உதிரியான சாதம் - ஒரு பவுல்
நறுக்கிய காளான்- அரை கப்
பச்சை பட்டாணி - கால் கப்
நறுக்கிய சிறிய பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
தயிர் - 1டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர், கரம் மசாலா - தலா கால் டீஸ்பூன்
நறுக்கிய மல்லி, புதினா - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஒரு பவுலில். இஞ்சி பூண்டு பேஸ்ட்,தயிர், சில்லி,கரம் மசாலா பவுடர்,டொமட்டோ சாஸ்,உப்பு,அத்துடன் காளான்,பச்சை பட்டாணி சேர்த்து கலந்து சிறிது நேரம் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.அத்துடன் ரெடி செய்த காளான்,பச்சை பட்டாணி கலவையை சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்,தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும்.

வதங்கியவுடன், வேக வைத்த சாதம் சேர்த்து கிளறவும்.உப்பு சரி பார்க்கவும்.
நறுக்கிய மல்லி,புதினா தூவி சிறிது பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுவையான மஷ்ரூம்,பீஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி.சூடாகப் பரிமாறவும்.
ஆனியன் ரைத்தா பொட்டட்டோ சிப்ஸ் உடன் பரிமாறவும்.



14 comments:

ஸாதிகா said...

வித்தியாசமான முயற்சி தோழி.

Sangeetha Nambi said...

Tasty & Easy recipe....

http://recipe-excavator.blogspot.com

MANO நாஞ்சில் மனோ said...

காளான் எனக்கு பிடித்தமான உணவு, நன்றி...!!!

ராதா ராணி said...

எளிமையான புதிய குறிப்பு.நல்லா இருக்கு.

athira said...

ஆஹா அருமை.. சிம்பிள் அண்ட் ரேஸ்ட்டி....

Asiya Omar said...

மிக்க நன்றி ஸாதிகா.

மிக்க நன்றி சங்கீதா.

மிக்க நன்றி நஞ்சில் மனோ.

மிக்க நன்றி ராதா ராணி.

மிக்க நன்றி அதிரா.

Asiya Omar said...

சகோ.குமார் உங்க கருத்து மாடரேட் செய்ய முடியலை.எனவே காப்பி பேஸ்ட்.

"மஷ்ரூம் பீஸ் ஃப்ரைட் ரைஸ் ( பிரியாணி ப்லேவர்)":
சே.குமார் said..

புதுமையா இருக்கு.
காளான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சின்ன வெங்காயம் ஒன்று போதுமா?

சிறிய பெரிய வெங்காயம் குமார்.கருத்திற்கு மிக்க நன்றி.

savitha ramesh said...

so easy and tasty mam.

Mahi said...

நல்லா இருக்கு ஆசியாக்கா! சீக்கிரமா செய்துடும் ஃப்ரைட் ரைஸ்!

திண்டுக்கல் தனபாலன் said...

மட்டன் விக்கிற விலைக்கு இந்த பிரியாணி எவ்வளவோ பெட்டர்...! உடம்பிற்கும் நல்லது ! நன்றி சகோதரி !

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நல்லா இருக்கு சகோ....

Priya said...

Wish to have this fried rice for my lunch rite now.

vanathy said...

சூப்பரா இருக்கு ரெசிப்பி.

asiyao said...

சவிதா மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.