Monday, June 25, 2012

பீன்ஸ் பாசிப்பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்;
பிஞ்சு பீன்ஸ் - கால் கிலோ
பாசிப்பருப்பு - 3-4 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தேங்காய்த் துருவல் - 2மேஜைக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிட்டிகை
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு


பீன்ஸ் நார் எடுத்து விளிம்பு கழித்து அலசிக் கொள்ளவும்.பொடியாக நறுக்கி ஆவியில் அல்லது அளவாக தண்ணீர் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
பாசிப்பருப்பை ஊற வைத்து வற்றல்,பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து ஓவனில் 2 நிமிடம் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.அதனை கையால் அல்லது மிக்சியில் உதிர்த்து கொள்ளவும்.


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு வெடிக்கவும், வேகவைத்து அரைத்து உதிர்த்த பாசிப்பருப்பு கலவையை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.

பின்பு வேகவைத்த பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.அத்துடன் தேங்காய்துருவல் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.

சுவையான பீன்ஸ் பாசிப்பருப்பு உசிலி ரெடி.இதே போல் கொத்தவரங்காயிலும் செய்யலாம்.

22 comments:

ராதா ராணி said...

பீன்ஸ் பருப்பு உசிலி படத்துலயே அழகு,அதன் சுவையும் தெரிகின்றது ஆசியா.:)

Sangeetha Nambi said...

Healthy one...

http://recipe-excavator.blogspot.com

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ருசிகரமான பதிவு, அதுவும் படங்களுடன் அருமையாக.

பாராட்டுக்கள்.

Priya said...

Yummy,healthy and nutritious usili.

அமைதிச்சாரல் said...

ருசியான உசிலி.. அருமை ஆசியா

Princy Vinoth said...

nice healthy recipe :)

சே. குமார் said...

அருமையா இருக்கும் போல...
படமே அதன் சுவையை சொல்லுது...

அக்கா...
இரண்டு நாட்களுக்கு முன்னர் போட்ட சிறுகதையை நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

உசிலி.. அருமை ஆசியா

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கவே நல்லா இருக்கு சகோ...

athira said...

மிகவும் சுவையான கறிதான்.

Mahi said...

Never added coconut in usili Asiya Akka.,looks yum!

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான பதிவு ! நன்றி சகோதரி !

மனோ சாமிநாதன் said...

பீன்ஸ் பாசிப்பருப்பு உசிலி குறிப்பு படங்களைப்போலவே நன்றாக இருக்கிறது ஆசியா! துவரம்பருப்பிலும், துவரம்பருப்பு பாதி, கடலைப்பருப்பு பாதியுமாய் கூட இந்த உசிலி செய்வதுண்டு.

Asiya Omar said...

ராதா மிக்க நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

வை.கோ.சார் மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

ப்ரின்ஸி விநோத் மிக்க நன்றி.

Asiya Omar said...

குமார் வருகைக்கு நன்றி.கதையை படித்து கருத்து சொல்லியாச்சு.

காஞ்சனா மிக்க நன்றி.

சகோ.வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

திண்டுக்கல தனபாலன் மிக்க நன்றி.

மனோ அக்கா மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் மகிழ்ச்சி.

ஸாதிகா said...

அசத்தல் உசிலி

மாதேவி said...

சுவையான பீன்ஸ் உசிலி.

♥ தூயா ♥ Thooya ♥ said...

படிக்கும் போது அருமையாக உள்ளது, உடனே செய்து பார்க்க போகின்றேன். நன்றிகள்

கோமதி அரசு said...

பீன்ஸ் பருப்பு உசுலி நன்றாக இருக்கிறது ஆசியா.

chezhiyan said...

வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

ஹேமா said...

சைவம் சமைக்கும் நேரம் சமைத்துப்பார்க்கலாம்.பார்க்கவே அழகாயிருக்கு ஆசியா !

Asiya Omar said...

ஸாதிகா
மாதேவி
தூயா
கோமதியக்கா
செழியன்
ஹேமா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.