Sunday, June 17, 2012

சிக்கன் கோலா உருண்டை / சிக்கன் ஃபிங்கர்ஸ் /Chicken balls / Fingers


தேவையான பொருட்கள்;
எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் - கால் கிலோ
முட்டை - 1
பொட்டுக்கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி இலை- 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய புதினா - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்,சீரக,சோம்பு,கரம்மசாலா - தலா கால்டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
உப்பு - தேவைக்கு.
(பரிமாறும் அளவு - 4 நபர்களுக்கு.)

சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டி, உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு சேர்த்து வேக வைத்து ஆற வைக்கவும்.
பொட்டுக்கடலையை பொடித்து கொள்ளவும்.
வேக வைத்த சிக்கனை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
அடுத்து மிக்ஸியில் வெங்காயம்,பச்சை மிளகாய்,புதினா, மல்லி இலையையும் பர பரவென்று சுற்றி எடுக்கவும்.

அரைத்த சிக்கன், பொட்டுக்கடலை மாவு, முட்டை, அரைத்த வெங்காயம்,மல்லி,புதினா,பச்சை மிளகாய் விழுது,மிளகு,சீரக,சோம்பு,கரம் மசாலா தூள்களை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும். அவற்றை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.


கடாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு நன்கு காயவும் கோலா உருண்டைகளை மிதமான தீயில் சிவற பொரித்து எடுக்கவும்.பொரிக்கும் பொழுது எண்ணெய் அவ்வளவாக குடிக்காது.


சுவையான சிக்கன் கோலா உருண்டை ரெடி. இதனை அப்படியே பண்டம் போல் சாப்பிடலாம், சைட் டிஷ் ஆகவும் பரிமாறலாம்.




பார்ட்டியில் பரிமாறினால் சிறு குழந்தைகளும் போட்டி போட்டி கொண்டு சாப்பிடுவார்கள்.கோலா உருண்டை உள்ளே சாஃப்டாக வெளியே கிரிஸ்பாக இருக்கும்.



இந்த கோலா உருண்டைக்கு ரெடி செய்தவற்றை இப்படி ஃபிங்கர்ஸ் மாதிரி உருட்டி ப்ரெட் கிரெம்ஸில் பிரட்டி நன்கு அழுத்தி ஷேப் செய்து இப்படியும் பொரித்து எடுக்கலாம்.ப்ரெட் கிரெம்ஸ் நன்கு பொடித்து இருக்க வேண்டும்.


சுவையான சிக்கன் ஃபிங்கர்ஸ் ரெடி. ப்ரெட் கிரெம்சில் பிரட்டாமல் உருண்டைகளாக பொரித்தால் கோலா உருண்டை.நீளவாக்கில் திரட்டி ப்ரெட் கிரெம்ஸில் தோய்த்து பொரித்தால் சிக்கன் ஃபிங்கர்ஸ்.(டூ இன் ஒன்.)குழந்தைகளுக்கு சிறிது காரம் குறைத்து இதே முறையில் செய்து கொடுக்கவும்.


சிக்கன் ஃபிங்கர்ஸ் டொமட்டோ சாஸ் உடன் பரிமாறலாம். மூன்று வயது குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

boneless chicken - 250 gm

egg - 1

roasted gram flour - 3 tbsp

chopped onion- 2 tbsp

chopped coriander leaves - 2 tbsp

chopped mint leaves - 1 tbsp

ginger garlic paste - 1 tsp

pepper powder - half tsp

turmeric,cumin, fennel,karam masala powder- each quarter tsp

oil - required

Bread crumbs - half - one cup

salt - to taste.

Steps to follow:

Wash, drain and cook the chicken pieces with salt, turmeric and ginger garlic paste. Grind the roasted channa dal. Then grind,onion,chillies,corinader and mint leaves.

Then mince the cooked chicken pieces.

In a bowl add cooked minced chicken, besan flour, beaten egg, ground onion,chilli,corinader,mint paste, pepper,cumin,fennel,karam masala and salt to taste.Mix well and make into small balls.

Heat oil in a pan pan and fry until golden brown colour. Drain and serve.

Tasty chicken balls are ready to serve.Serve this as a starter or side dish.

We can make chicken fingers with the same mix. Shape like kabab and roll it in bread crumbs and fry until golden brown colour.

Serve the chicken fingers with tomato sauce. Small Children would love to have this.

14 comments:

Mano Saminathan said...

மறுபடியும் ஒரு அருமையான ரெசிபி இது ஆசியா!

angelin said...

healthy recipe வித்தியாசமா வீட்டிலேயே செய்யகூடியதா இருக்கு ஆசியா .என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
நானும் பாசிபருப்பு கடைசல் செய்தேன் .ரொம்ப நல்லா வந்தது

athira said...

ஆசியா அழகான ரெசிப்பி.. சூப்பர். நான் ரெடிமேட்டாகத்தான் வாங்கிச் செய்வேன்ன்ன்...

Packya said...

ஆஹா..மொறு மொருனு கலர்புல்லா இருக்கு..சுவையான ரெசிபி..

ராதா ராணி said...

கோலா உருண்டை ஒரே மாதிரி அளவா அழகா செய்திருக்கீங்க..நல்லா இருக்கு ஆசியா.

அமைதிச்சாரல் said...

அருமையா இருக்கு ஆசியா..

ஸாதிகா said...

ஆசியா என் பையன் படத்தைப்பார்த்ததுமே இதே போல் உடனேச் செய்து கொடுங்க யம்மியா இருக்கு என்று கேட்கிறார்.

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப அருமையா இருக்குங்க ! நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! நன்றி !

Divya Pramil said...

Wow looks awesome :) I love kola balls.. Yummy :) Thanks for linking these to my contest :)
My best wishes :)

Participate & win prizes
The Master Chef Contest
You Too Can Cook Indian Food Recipes

Asiya Omar said...

மிக்க நன்றி மனோ அக்கா.
மிக்க நன்றி ஏஞ்சலின்.
மிக்க நன்றி அதிரா.
மிக்க நன்றி பாக்கியா.
மிக்க நன்றி ராதா ராணி.
மிக்க நன்றி அமைதிச்சாரல்.

Asiya Omar said...

மிக்க நன்றி ஸாதிகா.பிள்ளைகளுக்கு செய்து கொடுங்க,கிட்ட தட்ட நம்ம கறி வடை தான்,இதனை உருண்டையாக போடனும் அவ்வளவே.

திவ்யா மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.

Asiya Omar said...

திண்டுக்கல் தனபாலன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.email subscription Widget வைத்து விட்டேன்.நல்லது,மிக்க மகிழ்ச்சி.

Priya said...

Rendu yeduthukalama, super kola urundais.