Monday, June 11, 2012

பூண்டு சாஸ் (Garlic Sauce) /மை ஹேண்ட் ப்ளெண்டர்

பாத்திரங்கள் என் உபகரணங்கள் பகுதிக்கு பதிவிட்டு நாளாகுது, எனவே கார்லிக் சாஸ் குறிப்போடு என்னுடைய ஹேண்ட் ப்ளெண்டர் பற்றிய ஒரு பகிர்வு.

இந்த ப்ளெண்டர் சாப், மிக்ஸ், விஷ்க் ஆகிய மூன்று வேலையும் செய்யும்.கீரை கடைய,பருப்பு கடைய, கலக்க,முட்டை அடிக்க, வெங்காயம்,தக்காளி, காய்கறி,இஞ்சி பூண்டு பொடியாக சிதைக்க என்று பல வேலை செய்யும். எங்க வீட்டில் அடிக்கடி கிரில் சிக்கன் செய்வதால் இந்த கார்லிக் சாஸ், ஹமூஸ், முதப்பல் தேவைப்படும். ஹமூஸ் முதப்பல் எல்லாம் மிக்ஸியில் செய்து விடலாம். ஆனால் இந்த கார்லிக் சாஸ் கூட மிக்ஸி பெரிய ஜார் உபயோகித்து செய்யலாம்.ஆனால் இந்த ப்ளெண்டர் இருந்தால் வசதியாக இருக்கும் எனப்பட்டதால் இதுவும் வாங்கி ஒரு வருஷமாக ஒரிரு தடவை செய்து விட்டு மூலையில் இருந்தது. செய்ய சோம்பல் பட்டு வெளியே செல்லும் பொழுது சூப்பர் பூண்டு சாஸ் தான் கிடைக்குதேன்னு வாங்கி வந்து விடுவது வழக்கம். அந்த ப்ளெண்டர் அழுதுகிட்டு இருக்கு, அதை என்னன்னு பாருன்னு அவர் சொன்னதால் இப்ப வெளியே எடுத்தாச்சு.


பூண்டு சாஸ் :


தேவையான பொருட்கள்:


பூண்டு - 3 பெரிய பல்


முட்டை வெள்ளைக்கரு - 2


எலுமிச்சை ஜூஸ் - 2   டீஸ்பூன்அல்லது சுவைக்கு.


 ரிஃபைண்ட் ஆயில் - 150 மில்லி


உப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு பின்ச் (சுவைக்கு தக்க)


அடிக்கும் முட்டை வெள்ளைக்கரு,எண்ணெய்,லைம் ஜூஸ் எல்லாம் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்தால் ஜில்லுன்னு இருக்கும். அதன் பின்பு எடுத்து உபயோகிக்கவும்.

முதலில் பூண்டு பல்லை பாதி வேக்காடாக ஓவன் அல்லது சிறிது ஆவியில் அல்லது தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும். அதனை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதை பின்ச் உப்பு சேர்த்து நசுக்கி கொள்ளவும். பின்பு அதனை ப்ளெண்டரில் போட்டு லைம் ஜூஸ் விட்டு சுற்ற விடவும், பின்பு எண்ணெய்,முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை அடிக்கவும். மயோனைஸ் போல் வரும்.அதனை முன்பே செய்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் பொழுது பரிமாறலாம்.

அப்படியே வெள்ளையாக சூப்பராக இருக்கும். சிக்கன் கிரில்,  ஃபிஷ் கிரில் (அல்லது பேக்கிங், பார்பிகியூ) செய்யும் பொழுது சப்பாத்தி, ப்ரெட், நாண், குபூஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இப்படியேயும் பரிமாறலாம்.நான் கொஞ்சம் கெட்டியாக இருக்க அத்துடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு,சிறிது மிளகுத்தூள் சேர்த்தும் செய்து பார்த்தேன் .சூப்பராக இருந்தது.(விரும்பினால்: இப்படியும் செய்யலாம்.
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 டேபிள்ஸ்பூன்(தேவைக்கு))
சுவையான மசித்த உருளைக்கிழங்கு சேர்த்த பூண்டு சாஸ் ரெடி.விருப்பமான உணவுடன் பரிமாறலாம். சாண்ட்விச்,ஷவர்மா செய்யும் பொழுதும் உபயோகித்தால் சூப்பர் சுவையாக இருக்கும். இந்த பூண்டு சாஸ் அரேபிய உணவு வகையில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.


20 comments:

Lali said...

Hi sister! Pleas tell me the brand of this blender?

Lali
http://karadipommai.blogspot.in/

VijiParthiban said...

மிகவும் அருமை அக்கா " பாத்திரங்கள் என் உபகரணங்கள் ".

Sangeetha Nambi said...

Super ponga...

Asiya Omar said...

Thanks Lali for your visit and comments.Brand is Aftron.

Asiya Omar said...

விஜி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சங்கீதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி said...

நானும் இந்த ப்ளெண்டர் வாங்கி அதிகம் உபயோகிக்கலை. இப்போ வெளியே எடுக்கப் போகிறேன் பூண்டு சாஸ் செய்ய:)! உருளை சேர்த்து செய்யலாம் எனும் தகவலுக்கும் நன்றி ஆசியா.

Divya Pramil said...

Very useful dip :) And the blender looks stylish..

Participate & win prizes
The Master Chef Contest
You Too Can Cook Indian Food Recipes

Today's Recipe
Mini Beetroot Omelettes

Priya said...

Puthu handblender super o super. Loving that garlic sauce.

ராதா ராணி said...

பூண்டு சாஸ் சூப்பர்..உங்க வீட்டு கிச்சனை அழகு படுத்தற ப்ளெண்டர் ரெம்ப நல்லாயிருக்கு.

Akila said...

Looking so nice... whats the brand of blender...

Event: Dish Name Starts With M
Learning-to-cook

Regards,
Akila

Kavitha said...

பூண்டு சாஸ் வித்தியாசமாக இருக்கிறது
எத்தனை நாட்கள் ஸ்டோர் செய்யலாம்?

Asiya Omar said...

மிக்க நன்றி ராமலஷ்மி.

மிக்க நன்றி திவ்யா.

மிக்க நன்றி ராதா.

மிக்க நன்றி ப்ரியா.

மிக்க நன்றி அகிலா,Brand - Aftron.

மிக்க நன்றி கவிதா.ஃப்ரிட்ஜில் 2-3 நாட்கள் வைத்து உபயோக்கிக்கலாம்.

ஸாதிகா said...

காலிக் சாஸ் செய்முறைக்கு மிக்க நன்றி ஆசியா.ரெஸ்டாரெண்டில் கிரில்ட் சிக்கனுடன் தருவார்கள்.இனி அதனை வீட்டிலும் தயரிக்கலாம்.உருளை சேர்த்திருப்பது வித்தியாசமாக உள்ளது...ஹேண்ட் பிளண்டர் இத்தனை வேலைகளையும் செய்கின்றது....!!!!!!!

enrenrum16 said...

Thanks for your recipe sis... insha Allah, i'll do this.

மாதேவி said...

உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்த வித்தியாசமான பூண்டுசோஸ் அருமை ஆசியா.

vanathy said...

என்னிடமும் இப்படி ஒரு பொருள் இருக்கு. போய் தேடிக் கண்டு பிடிக்கணும். சூப்பர் ரெசிப்பி.

Mahi said...

ப்ளெண்டர் அழகா இருக்கு ஆசியாக்கா! கார்லிக் சாஸ் ரெசிப்பி சிம்பிளா இருக்கிறது. வெஜ் உணவு வகைகள் ஏதாவதுடன் செய்து பார்க்கிறேன்.

இந்த மாதிரி உபகரணங்கள் வாங்கினா ஒரு டெடிகேஷனோட:) உபயோகிக்கணும். வாங்கி பத்திரமாப் பூட்டி வைக்கக்கூடாது, அதனாலதான் நான் இதெல்லாம் வாங்கறதே இல்லையாக்கும்! ;) ;) அவ்வ்வ்வ்வ்வ்வ்...;)

Mano Saminathan said...

ரொம்பவும் அருமையான குறிப்பு இது ஆசியா! நானும் இதை கொஞ்சம் வேறு மாதிரி செய்வேன் செய்வேன். எத்தனை நாட்கள் வரை இதை ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்?

Asiya Omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

என்றென்றும் 16 மிக்க நன்றி.

மாதேவி மிக்க நன்றி.

வானதி உபயோகித்து பாருங்க.மிக்க நன்றி.

மகி அதே! :)))))...ஹி ஹி...

மனோ அக்கா மூன்று நாட்கள் வைக்கலாம், நான் ஃப்ரிட்ஜ் சில்லரில் ஐந்து நாட்கள் வரை வைத்திருந்து உபயோகித்துள்ளேன்,அதே டேஸ்ட் இருந்தது.வருகைக்கு மகிழ்ச்சி அக்கா.

அமைதிச்சாரல் said...

வித்தியாசமான சாஸ்.. நல்லாருக்கு ஆசியா.