தேவையான பொருட்கள் ;
இறால் - அரைக்கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்லோர் - 2 தேக்கரண்டி
முட்டை வெள்ளைக்கரு - 1
ரெட் ஃபுட் கலர் - பின்ச்(விரும்பினால்)
எண்ணெய் - 3- 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு

இறால் உரிக்கும் முன்பு நன்கு அலசிக் கொள்ளவும்.தலை,மேல் இருக்கும் ஓடு பகுதி உரித்து கருப்பாக இருக்கும் அழுக்கு போன்ற பகுதியை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.

எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் இறாலுடன் சேர்த்து கலந்து ஒரு அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

இறால் ஊறிய பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவிடவும்.காய்ந்தவுடன் நாம் விரவி வைத்த இறாலை போட்டு பொரிக்கவும்.அரைகிலோவை உறித்தால் 15 -முதல் 20 இறால் இருக்கும்.இரண்டு முறையாக பொரிக்கலாம்.

எண்ணெய் குடிக்காது, 5-6 நிமிடத்தில் இறால் வெந்து விடும்.ஒரு புறம் வெந்தவுடன் மறு புறம் திருப்பி போடவும்.

அத்துடன் இரண்டு இணுக்கு கருவேப்பிலை போடவும்.

இறால் நன்கு பொரிந்த பின்பு எண்ணெய் வடித்து எடுத்து பரிமாறவும்.
சுவையான பொரித்த இறால் ரெடி. இதனை பக்க உணவாகப் பரிமாறலாம்.
17 comments:
Impressive.love the crispy prawns.
எல்லா வகை சாதத்திற்கும் பக்க உணவா சாப்பிட நல்ல இருக்கும் ஆசியா..பொரித்த இறால் நல்லா இருக்கு.
Wow Prawn 65... :) Tempting...
இறால் பார்க்க நன்றாக இருக்கு.சாப்பிட ஆசையாக உள்ளது
அப்படியே எடுத்து சாப்பிடத்தூண்டுது தோழி
Love these crunchy n yummy prawns... Happy to follow you
ரொம்ப கம்மியாக பொறித்து இருக்கிங்க.. எனக்கு இவ்வள்வும் பத்தாது.. அரைக்கிலோவையும் இப்படியே பொறித்து சாப்பிடுவேன்.. பார்க்கவே சூப்பராக இருக்கு அக்கா
Salivating here,attagasama irruku.
ஐயோ... ஐயையோ... பேச்சே வரலை. படங்கள் அப்படி ! நன்றி சகோதரி !
சவீதா மிக்க நன்றி.
ராதா மிக்க நன்றி.
சங்கீதா மிக்க நன்றி.
நஸ்ரின் மிக்க நன்றி.
ஸாதிகா மிக்க நன்றி.
விமிதா மிக்க நன்றி.
சிநேகிதி மிக்க நன்றி.
ப்ரியா மிக்க நன்றி.
திண்டுக்கல் தனபாலன் மிக்க நன்றி.
வருகை புரிந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.ஒரு மாதம் கழித்து மீண்டும் சந்திப்போம்.
சூப்பர் ஆசியா, ரெஸ்ரோரண்ட் பொரியல்போல இருக்கு.
வாவ்... இறால் பொரியல் சூப்பரோ சூப்பர்.
அருமை அக்கா. அக்கா என்னுடைய வலைப்பூவை சற்று திறந்து பாருங்கள் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி காத்துகொண்டிருக்கிறது வாருங்கள்.....
இறால் வறுவல் கலரே சூப்பர் அக்கா .... எனக்கு பிடித்தது இறால் .....
ஆசியா அக்கா என்னுடைய வலைப்பூவை சற்று திறந்து பாருங்கள் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி காத்துகொண்டிருக்கிறது வாருங்கள்.....
open this link
http://vijiparthi.blogspot.in/2012/07/first-award.html
ம்ம்...மூக்கு முட்டுது வாசனை.புட்டும் இறால் பொரியலும் சூப்பர் !
அதிரா மிக்க நன்றி.
குமார் மிக்க நன்றி.
விஜிபார்த்திபன் கருத்திற்கும் அவார்டுக்கும் மிக்க நன்றி.
ஹேமா மிக்க நன்றி.
Post a Comment