Wednesday, August 8, 2012

ஜில்லுன்னு வந்தாச்சு..!

ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக பத்திரமாக எடுத்து வந்த மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்தேன்.இந்த அமீரகக் கடும் கொடும் வெயிலுக்கு மிக இதமாகவே இருக்கு.எங்க வீட்டில் ஃப்ரிட்ஜ் தண்ணீர் யாரும் குடிப்பதில்லை.மண் பானை தண்ணீரையாவது குடிப்பாங்கன்னு பார்த்தால் யாருமே தொடலை,ஏன்னு கேட்டால் ஃப்ரிட்ஜ் தண்ணீரை விட ஜில்லுன்னு இருக்காம்.பின்ன இருக்காதா என்ன? ஏசியில் மண் பானையை வைத்தால் அப்படி தானே இருக்கும்.ஆஹா!ஆனால் நோன்பு திறந்தவுடன் இந்த மண்பானை தண்ணீரில் எலுமிச்சை பிழிந்த நன்னாரி சர்பத்(ஊரில் இருந்து வரும் பொழுது என்னோட சாச்சி ஆசையாக வாங்கி தந்தது)அதுவும் சப்ஜாவிதையுடன் கலந்து குடிக்கும் பொழுது சூப்பராகத்தான் இருக்கு.

ரமலான் மாதம் கழித்து பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன், என்றாலும் என் நோன்பு ஸ்பெஷல் ரெசிப்பிக்களை மீள் பதிவாகவாவது பதிவிடலாம் என்ற எண்ணம் வந்ததால் இந்த இடுகை.

இந்த பதிவில் என்னுடைய வெரைட்டி கஞ்சி வகைகள் உங்களுக்காக..கஞ்சி இல்லாமல் நோன்பு திறப்பா? நோன்பு திறப்பின் சிறப்பு உணவில் முதல் இடம் இந்த கஞ்சிக்கு தான் என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன?

என்றென்றும் அன்புடன்,
-ஆசியா உமர்.

20 comments:

VijiParthiban said...

வாங்க அக்கா நலம் அறிய ஆவல். விடுமுறை நாட்களெல்லாம் எப்படி முடிந்தது. ம்ம்ம்ம் ரமலான் வாழ்த்துக்கள் அக்கா...
சூப்பர்...

Vijayalakshmi Dharmaraj said...

arumai...arumai...

ராதா ராணி said...

ஊருக்குபோயிட்டு சுகமா திரும்பியாச்சா...நானும் இதே குட்டிப்பானைதான் வாங்கி இருக்கேன்...சிம்பிள் நோன்பு கஞ்சி இங்க பக்கத்தில ஒரு மாமி கொடுத்தாங்க..புதினா ,மல்லி , போட்டு ரெம்ப டேஸ்டா இருந்திச்சி..கஞ்சி ரெசிப்பி இதே மாதிரித்தான் மாமியும் சொன்னாங்க... செய்து பார்க்கணும் ஆசியா..

athira said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஅவ் வெல்கம் பக்:).

நோன்போடயா பிரயாணம் செய்தீங்க? எப்பூடி?

இதைத்தான் நாங்க கூசா என்போம் இலங்கையில். இதில் தண்ணி ஊத்திக் குடித்தால் சொர்க்கம் தெரியுமேஏஏஏஏ:).

சிநேகிதி said...

வாங்க நலமா? உங்கள் வரவு நல்வரவாக இருக்க வாழ்த்துக்கள்

Sangeetha Nambi said...

Welcome back... Semma tradional related post...
http://recipe-excavator.blogspot.com

Kurinji said...

Welcome back Asia....

அமைதிச்சாரல் said...

விடுமுறை முடிஞ்சு வந்தாச்சா.. வாங்க வாங்க :-)

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி சகோதரி....

Divya Pramil said...

I love mud pot water soooo much :) And really good recipes :)
Round up of the Master Chef Contest - Nominees and Winners announced
You Too Can Cook Indian Food Recipes

கோமதி அரசு said...

ஆசியா, வந்து விட்டீர்களா?
ஊரில் எல்லோரும் நலமா?
மண்பானை மிக அழகாய் இருக்கிறது.

மண்பானை தண்ணீர் நல்ல ஜில் என்று இருக்கும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்.

R.Punitha said...

Hi Asiya omar,

Looks Delicious !!!

Perfect presentation:)

Keep up this good work Dear..

www.southindiafoodrecipes.blogspot.in

Mahi said...

Welcome back Asiya Akka, paanai looks cute n pretty! :)

இமா said...

ரம்ழான் வாழ்த்துக்கள் ஆசியா.

Priya said...

Paanai thanni kudichi neeraya varusham ayduchu..Super o super.

Jaleela Kamal said...

சலாம் ஆசியா
ரமலான் வாழ்த்துக்கள்


பானை தண்ணி குடிக்க ஆசையாக இருக்கு

அழகான பானை பார்க்கவே அருமை

asiyao said...

விஜி பார்த்திபன்
விஜயலஷ்மி
ராதாராணி
அதிரா
சிநேகிதி
சங்கீதா
குறிஞ்சி
அமைதிச்சாரல்
திண்டுக்கல தனபாலன்
திவ்யா
கோமதியரசு
புனிதா
மகி
இமா
ப்ரியா
ஜலீலா

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி.

halal foodie said...

Thanks for sending this porridge to my event Asiya

ஸாதிகா said...

வருக வருக தோழி .தலைப்பே குளு குளுன்னு இருக்கே!

சே. குமார் said...

akka

uriyil irunthu vanthacha...
annavarum sugamthaaney...
vidumurai santhosama kalinthathallava....

advance ramalaan vazhththukkal akka.