Tuesday, August 28, 2012

சிக்கன் ஃப்ரிட்டர்ஸ்/ Chicken Fritters

தேவையான பொருட்கள்;


போன்லெஸ் சிக்கன் - 300 கிராம்
கரைத்துக் கொள்ள:
மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
முட்டை -1
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
பால் - கால் கப்
உப்பு - தேவைக்கு
கரைத்து கொள்ள தேவையான பொருட்களை ரெடி செய்து கலந்து கொள்ளவும்.

சிக்கன் சுத்தம் செய்து கழுவி சிறிய துண்டாக கட் செய்து கொள்ளவும்.

கலந்த மாவு வகைகளுடன் முட்டை பால் சேர்த்து திக்காக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

சிக்கனை அதனுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.பொரிக்கும் பொழுது நன்கு கலந்து தனித் தனி துண்டாக பிரட்டி எடுத்து எண்ணெயில் போடவும்.விருப்பப்பட்டால் இத்துடன் ப்ரெட் கிரம்ஸும் ரோல் செய்தும் பொரிக்கலாம்.

கடாயில் தேவைக்கு எண்ணெய் காயவிட்டு ரெடி செய்த சிக்கன் கலவையை பக்குவமாக மீடியம் ஃப்லேமில் பொன்னிறத்தில் பொரித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.

சுவையான சிக்கன் ஃப்ரிட்டர்ஸ் ரெடி. இது சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.
அழகிய தட்டில் வைத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.நான் இங்கு கொஞ்சமாக செய்து காட்டியிருக்கிறேன்.நீங்கள் உங்கள் அளவிற்கு தக்கபடி செய்து கொள்ளவும்.


17 comments:

ராதா ராணி said...

அனைவர்கும் குறிப்பா குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு நல்ல ரெசிப்பி..நினைத்த உடன் செய்யற ஒரு அருமையான குறிப்பா இருக்கு ஆசியா..

Sangeetha Nambi said...

Real tasty....
http://recipe-excavator.blogspot.com

Saraswathi Tharagaram said...

Great relish!! sound so simple, yet very good..Great for get together party appetizer.

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு ஆசியா பிள்ளைகள் முன் வைத்தால் தட்டு காலி தான் இல்லையா??

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமா இருக்குங்க... நன்றி...

சிநேகிதி said...

பிள்ளைகளை பிடித்த ஸ்நாக்ஸ்.. முதல் குறிப்புக்கு நன்றி..

சிநேகிதி said...

உங்களின் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது நன்றி

மஞ்சுபாஷிணி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யம்மி யம்மி... என் பிள்ளைகள் சிக்கன் விருப்பமா சாப்பிடுவாங்க. இதில் காரம் இல்லாம இருப்பதால் இன்னும் கூடுதலா சாப்பிடுவாங்க. அழகா படம் போட்டு ஈசியா க்ரிஸ்பியா போட்டிருக்கீங்கப்பா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

Priya said...

Definitely a kid's pleaser fritters, addictive and irresistible.

angelin said...

அருமையான டேஸ்டி க்ரிஸ்பிஸ் ...பகிர்வுக்கு நன்றி ஆசியா .என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து விடுகிறேன் .

மாதேவி said...

அசைவப் பிரியர்களுக்கு பிடித்த உணவு.
அருமை ஆசியா.

Divya Pramil said...

I love these fritters.. I have posted a similar recipe earlier but haven't added baking powder to it..Will try next time :)

Today's Recipe - Diamond Biscuits / Maida Biscuits
You Too Can Cook Indian Food Recipes

athira said...

குறிப்பு சூப்பர், ஆனா இதை ஏற்கனவே இங்கு போட்டீங்கதானே ஆசியா?

Asiya Omar said...

ராதா ராணி மிக்க நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

சரஸ்வதி மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

தனபாலன் சார் மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

மஞ்சுபாஷிணி மிக்க ந்ன்றி.

Asiya Omar said...

ப்ரியா மிக்க நன்றி.

ஏஞ்சலின் மிக்க நன்றி.

மாதேவி மிக்க நன்றி.

வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

Asiya Omar said...

மிக்க நன்றி திவ்யா ப்ரமில். உங்க சிக்கன் ஃப்ரிட்டர்ஸ் குறிப்பு லின்க் தர முடியுமா? செய்முறையை பார்க்க ஆர்வம்.


Jaleela Kamal said...

சிக்கன் பிரிட்டர்ஸ் ரொம்ப நல்ல இருக்கு
பார்டியில் வைத்தால் உடனே தட்டு காலி தான் இல்லையா?

ஹனீப் ஒன்லி சிக்கன் மட்டும் தான் பிடிக்கும் ஆகையால் அதில் இப்படி தான் செய்து கொடுப்பது.அதே போல் லாலி பாப்பும் இது மட்டும் தான் அவனுக்கு பிடிக்கும்.