Tuesday, August 21, 2012

கிரிஸ்பி சிக்கன் ட்ரம்ஸ்டிக் / Crispy Chicken Drumstick





தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ் - 1 கிலோ
சில்லி பவுடர் - 1-2 டீஸ்பூன்(அவரவர் விருப்பம்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
எண்ணெய், உப்பு - தேவைக்கு.

கோட்டிங் மிக்ஸ்க்கு :
மைதா - 4 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்லோர் அல்லது அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் ( நல்ல கிரிஸ்பியாக விரும்புபவர்கள் அரிசி மாவு முயற்சிக்கலாம்)
ஹாட் & ஸ்பைஸி ப்ரெட் க்ரம்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் ( ரெடிமேடாக கிடைக்கிறது)
(வீட்டில் தயார் செய்ய 2 டேபிள்ஸ்பூன் ப்ரெட்கிரம்ஸ் உடன் அரை டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்தால் ஸ்பைஸி ப்ரெட் கிரம்ஸ் ரெடி)
உப்பு - அரை டீஸ்பூன்.

கோட்டிங் மிக்ஸ் ரெடி செய்து கொள்ளவும்.கலந்து கொள்ளவும்.

சிக்கன் தோல் நீக்கி மசாலா ஏறுவதற்கு வசதியாக கீறி விட்டுக் கொள்ளவும்.நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.பின்பு தேவையான பொருட்களில் சொன்ன எண்ணெய் தவிர அனைத்து பொருளையும் சேர்த்து கலந்து ஒரு மணிநேரமாவது ஊறவைக்கவும்.காரம் குறைவாக இருக்க சில்லி பவுடர் அளவை குறைத்து கொள்ளலாம்.

மசாலா ஏறிய சிக்கனில் தண்ணீர் ஊறியிருந்தால், தண்ணீரை வடிகட்டிவிட்டு, ஊறிய சிக்கனை கோட்டிங் மிக்ஸில் நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும்.ஒரு அரைமணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து எடுக்கவும்.


பின்பு கடாயில் எண்ணெய் நன்கு காயவிட்டு, சிக்கன் துண்டுகளை மிதமான நெருப்பில் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.




சுவையான கிரிஸ்பி சிக்கன் ட்ரம்ஸ்டிக் ரெடி.இதனை பார்ட்டியில் ஸ்டார்டராக அல்லது சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

14 comments:

S.Menaga said...

படங்களை பார்க்கும்போது நாவுறுதே....

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையா இருக்குங்க...

செய்து பாத்திடலாம்... நன்றி...

அமைதிச்சாரல் said...

நல்லாருக்குது ஆசியா..

Divya Pramil said...

Crispy and yum!! No wonder you are a smart chef!!

Today's Recipe - Badam Paal / Badam Kheer
You Too Can Cook Indian Food Recipes

சிநேகிதி said...

எனக்கு பிடித்த ட்ரம்ஸ்டிக் பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல் இருக்கு அக்கா

ராதா ராணி said...

நல்லா மொறு, மொறுப்பா சாப்பிடும் ஆசையை தூண்டுதே....

Sangeetha Nambi said...

Asusual rocking recipe thaan ponga...
http://recipe-excavator.blogspot.com

Saraswathi Tharagaram said...

Super recipe and looks so crispy..

Akila said...

simply superb...

Event: Dish Name Starts With N till August 31st
Learning-to-cook

Regards,
Akila

சே. குமார் said...

செய்து பார்க்கலாம்...
ஈத்துக்கு பிரியாணி கிடைக்குமுன்னு பார்த்தா அக்கா கூப்பிடவேயில்லை.

Priya said...

Wow rendu yethukalam pola irruku,super o super.

Asiya Omar said...

மேனகா மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

திவ்யா மிக்க நன்றி.

சிநேகிதி மிக்க நன்றி.

ராதா மிக்க நன்றி.

சரஸ்வதி மிக்க நன்றி.

அகிலா மிக்க நன்றி.

குமார் குடும்பத்துடன் அழைப்பு நிச்சயம்.மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி.

Jaleela Kamal said...

அடிக்கடி செய்யும் லாலி பாப்.மிக அருமை,
பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தது.
நானும் ஹாட் அண்ட் ஸ்பைஸ் கிரம்ஸ் தான் வாங்குவ்து..

Asiya Omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.