Wednesday, August 29, 2012

ஈசி கிட்ஸ் பட்டர் குக்கீஸ் / Easy Kids Butter Cookies.




தேவையான பொருட்கள்;
பட்டர் - 100 கிராம்
சீனி - 50 கிராம்
மைதா மாவு - 175 கிராம் ( 1 கப்)
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்


முதலில் பட்டர் சீனியை கலந்து கொள்ளவும்.சீனி கரைந்தும் கரையாமலும் இருந்தால் குகீஸ் கிரிஸ்பாக இருக்கும்.
வெனிலா எசன்ஸ் சில துளிகள் சேர்க்கவும்.
மைதா மாவு சேர்க்கவும் பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு மாதிரி வரும் .உருட்டி கொள்ளவும்.

சின்னதாக பிரித்து தேவையான சேப் செய்து கொள்ளவும்.அச்சு இருந்தால் ஈசி.

ஓவனை 150 டிகிரிக்கு முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் பட்டர் மைதா தடவிக் கொள்ளவும்.அதனில் ரெடி செய்த குக்கீஸ் வைக்கவும்.

15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.ஆறியவுடன் டப்பாக்களில் அடைத்து வைக்கவும்.கிரிஸ்பி யம்மி குக்கீஸ் ரெடி. நீங்க செய்யும் அளவை பொருத்து எண்ணிக்கை மாறுபடலாம். 15- 20 குக்கீஸ் வரும்.

விரும்பினால் இப்படி பட்டர், ஐசிங் சுகர் பீட்டர் கொண்டு மிக்ஸ் செய்து ஐசிங் டெக்கரேட் செய்து கொடுத்தால் குழந்தைகள் என்ன பெரியவர்களே விரும்பி சாப்பிடுவாங்க.குக்கீஸ் மீது பட்டர் ஐசிங் தடவி மற்றொரு குக்கீஸால் மூடி கடித்து சாப்பிட்டால் ஆஹா! தான்.


வாவ்! யம்மி ஈசி பட்டர் குக்கீஸ் ரெடி.

நானே விட்டால் அத்தனை யும் சாப்பிட்டிருப்பேன்.செம டேஸ்ட். இது என் மகள் எனக்காக செய்தது. என்ன சொல்லுங்க,வீட்டில் செய்தால் அதன் ருசி தனி தான்.


13 comments:

angelin said...

ஆஹா !!!! குக்கீஸ் எல்லாம் அழகா கீ கீனு :)ஸ்மைல் செய்றாங்க

என்கிட்டே பூ ஷேப் கட்டர் இருக்கு ..ஸ்கூல் ஆரம்பிக்குமுன் மகளுடன் சேர்ந்து செய்கிறேன் ..

சிநேகிதி said...

வாவ்.. குழந்தைகளை கவரும் விதத்தில் இருக்கிறது.. thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you

Divya Pramil said...

Kids will definitely love these.. :)

Today's Recipe - Prawn 65 / Eral 65
You Too Can Cook Indian Food Recipes

வெங்கட் நாகராஜ் said...

இப்படி அழகா ச்மைல் பண்ற குக்கீஸ்.. இதை பார்த்துட்டே இருக்கலாம். :))

நல்லா இருக்கு!

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப எளிதாக இருக்கே... வீட்டில் செய்து பார்ப்போம்...

நன்றி சகோதரி...

Saraswathi Tharagaram said...

Excellent and elegant cookies..

அமைதிச்சாரல் said...

குக்கீஸ் நல்லாருக்குது.

Vijayalakshmi Dharmaraj said...

wow... looks so crispy... kids ll love it...
VIRUNTHU UNNA VAANGA

ராதா ராணி said...

நல்லா இருக்கு ஆசியா...நானும் செய்து பார்க்கிறேன்.

Priya said...

So cute and addictive cookies.

S.Menaga said...

குக்கீஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு...

athira said...

சூப்பர் ஆசியா... மொறு மொறு என இருக்கு.

Jaleela Kamal said...

ரொம்ப அழகாக இருக்கு