Saturday, August 25, 2012

வெஜ் நூடுல்ஸ் பிரியாணி/ Veg Noodles Briyani



நூடுல்ஸில் பிரியாணி மணம் கொடுத்து சமைத்தால் ருசி சூப்பர். நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
கறி ஃப்லேவர் நூடுல்ஸ் பாக்கெட் - 3 ( சுமார் 250 கிராம்)
நறுக்கிய காய்கறிகள் (கேரட்,கோஸ்,கொடைமிளகாய்)- 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
நறுக்கிய மல்லி புதினா - தலா - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
நுடுல்ஸ் பேக்கில் உள்ள கறி மசாலா - தேவைக்கு.
எண்ணெய் ,நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - மசாலாவில் உள்ளது போதும் அல்லது சிறிது தேவைக்கு.

காய்கறிகளை சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைக்கவும்.வெங்காயம் தக்காளி,மல்லி,புதினாவும் நறுக்கி கொள்ளவும்.
நூடுல்ஸ் பதமாக வடித்து மேலே குளிர்ந்த தண்ணீர் விட்டு வைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.லேசாக சிவறவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
நறுக்கிய தக்காளி மல்லி புதினா சேர்க்கவும்.கால் டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். இலகுவாக வதங்கி விடும்.

நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் வதங்கியதும் நூடுல்ஸ் பேக்கில் உள்ள மசாலாவை தேவைக்கு போடவும். 2-3 டீஸ்பூன் போடலாம்.நன்கு பிரட்டி விடவும்.வடித்த நூடுல்ஸ் சேர்க்கவும்.

நன்கு ஒரு சேர கலந்து காய்கறி,மசாலா எல்லாம் நூடுல்ஸ் மீது சார்ந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.சூடாக பரிமாறவும்.

சூப்பர் சுவையுள்ள வெஜ் நூடுல்ஸ் பிரியாணி ரெடி.

இது என் 400 -வது இடுகை.வருகை தந்து ஆதரவு கொடுத்த அனைத்து அனபான நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

22 comments:

அமைதிச்சாரல் said...

ஆஹா!!.. புதுமையா இருக்கு. வழக்கமா செய்யற வெஜ் நூடுல்ஸ் போரடிச்சா இப்படிக்கூட செஞ்சுரலாம்ன்னு பகிர்ந்தமைக்கு நன்றி.

சிநேகிதி said...

400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா. நூடுல்ஸ் பிரியாணி அசத்தலாக இருக்கு

Vijayalakshmi Dharmaraj said...

i too love this noodle... so yummy... congrats for your 400th post... happy blogging...
VIRUNTHU UNNA VAANGA

ராமலக்ஷ்மி said...

சைனீஸ் வெஜ் நூடுல்ஸ் செய்வதுண்டு. கறி ஃப்லேவர் நூடுல்ஸ் பிரியாணி அருமை. குறிப்புக்கு நன்றி ஆசியா.

நானூறாவது பதிவுக்கு நல்வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் சேவை!

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கு பார்க்க...

400-வது பதிவுக்கு வாழ்த்துகள் சகோ. தொடர்ந்து அசத்துங்க....

Jaleela Kamal said...

400 வது குறிப்புக்கு வாழ்த்துக்கள் ஆசியா.
அங்கு கிடைக்காத பாராட்டுக்கள் இங்கு கிடைக்கட்டும்....
நூடுல்ஸ் பிரியாணி அருமை.

இங்கு ஹனீபுக்கு வாரம் இரு முறை வித விதமான நூடுல்ஸ் தான்..

Saraswathi Tharagaram said...

Congrats Madam.. as usual Very inviting recipe..

ராதா ராணி said...

400 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..!நூடுல்ஸ் பார்க்க அருமை..

Divya Pramil said...

Yummy and really good idea :)

Today's Recipe - Chicken Coconut Milk Curry
You Too Can Cook Indian Food Recipes

இமா said...

சுவையான குறிப்பு ஆசியா. 400வது இடுக்கைக்கு என் வாழ்த்துக்கள்.

சே. குமார் said...

ஆஹா... புதுமையான சுவையான குறிப்பு...

அக்கா...

400வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Shama Nagarajan said...

Super inviting dear !!! If you wish , please link here for Fast Food Event Noodles .

http://www.easy2cookrecipes.blogspot.co.uk/2012/08/re-announcing-fast-food-event-series.html

Sangeetha Nambi said...

Asusual kalakureenga...
http://recipe-excavator.blogspot.com

Asiya Omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி,நிச்சயமாக சுவையாக இருக்கும்.

சிநேகிதி மிக்க நன்றி.

விஜயலஷ்மி மிக்க நன்றி.

Asiya Omar said...

ராமலஷ்மி வாழ்த்திற்கு மகிழ்ச்சி நன்றி.

சகோ.வெங்கட் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஜலீலா மிக்க மகிழ்ச்சி.நன்றி.

Asiya Omar said...

சரஸ்வதி மிக்க நன்றி.மகிழ்ச்சி

ராதா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

திவ்யா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Asiya Omar said...

இமா, நான் எப்படி வருவேன்,எப்ப வருவேன்னு தெரியாது,ஆனால் கரெக்டாக வந்திடுவேன்னு சொல்ற மாதிரி இருக்கு.மிக்க நன்றி.மகிழ்ச்சி.

குமார் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சாமா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சங்கீதா மிக்க நன்றி. மகிழ்ச்சி.

Chitra said...

wow, super aa irukku. never thought of making briyani.. will try//

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான குறிப்பு...

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

VijiParthiban said...

400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா.

மாதேவி said...

வாழ்த்துக்கள் ஆசியா.

Asiya Omar said...

சித்ரா மிக்க நன்றி.

தனபாலன் சார் மிக்க நன்றி.

விஜி மிக்க நன்றி.

மாதேவி மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.