Thursday, September 27, 2012

வெண்டைக்காய் முட்டைப் பொரியல் / Bhindi Egg Stir Fry

தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - கால் கிலோ
முட்டை - 1
பெரிய வெங்காயம் - 1
கடுகு,  உ.பருப்பு -1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
மிளகு,சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
1.வெண்டைக்காயை கழுவி துடைத்து இப்படி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும்,கடுகு,உ.பருப்பு,வற்றல் கிள்ளி போட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
3.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும். உப்பு,மிளகு,சீரகத்தூள்  சேர்க்கவும், நன்கு பிரட்டி விடவும்.
4. முட்டையை பின்ச் உப்பு சேர்த்து  அடித்து  வதங்கிய வெண்டைக்காயுடன் சேர்க்கவும், அடுப்பை சிம்மில் வைத்து சிறிது முட்டை வெந்து வரவும் நன்கு உதிர்ந்து வருவது போல் பிரட்டி விட்டு தேங்காய் துருவல் சேர்க்கவும், பிரட்டவும். அடுப்பை அணைக்கவும்.

சுவையான வெண்டைக்காய் முட்டைப் பொரியல் ரெடி.

என்னுடைய
 கேரட் முட்டைப் பொரியல்
முட்டைகோஸ் முட்டைப்  பொரியல்
பார்க்க கிளிக்கவும்.

12 comments:

Sangeetha Nambi said...

Never tried adding Egg with Lady's finger.... Yummy !!!
http://recipe-excavator.blogspot.com

ராதா ராணி said...

இதே முறையில் காலிபிளவர் சேர்த்து செய்வேன் ஆசியா..வெண்டைக்காயில் செய்ததும் நல்லா இருக்கு.

சிநேகிதி said...

புதுசா இருக்கே... ட்ரை பண்ணி பார்ப்போம்

Vimitha Anand said...

New kinda stir fry... try panren

Priya said...

Quite a new dish for me, will try next time.

திண்டுக்கல் தனபாலன் said...

வெண்டைக்காயுடன் முட்டையா...! செய்து பார்ப்போம்...

தமிழ் காமெடி உலகம் said...

வெண்டைக்காய் முட்டை பொரியலை இன்று தான் கேள்வி பட்டு இருக்கிறேன்..கண்டிப்பா சமைத்து பார்த்துட்டு சொல்லறேன்...இப்படி எதாவது புதுசா இருந்தா இன்னும் சொல்லுங்க...பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

ஸாதிகா said...

சப்பாத்தி,இடியாப்பம் போன்றவற்றுக்கு அருமையான சைட் டிஷ்.வெண்டைக்காய் சாப்பிடாத குழந்தைகளையும் இப்படி சமைத்து சாப்பிட வைத்து விடலாம்.

அப்பாவி தங்கமணி said...

ஐ... புதுசா இருக்கே... ட்ரை பண்ணி பார்க்கிறேங்க

Easy (EZ) Editorial Calendar said...

அருமையான சமையல் குறிப்பு.. ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லறேன் ...உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான பொரியல்..

உங்களுடைய நீலகிரி பிரியாணியினை செய்தேன்..மிகவும் அருமையாக இருந்தது...சூப்பர்ப் பிரியாணி...என்னுடைய ப்ளாகில் பதிவு போட்டு இருக்கின்றேன்...மிகவும் நன்றி...

athira said...

புது ரெசிப்பி நல்லாயிருக்கு.

ஆனா ஒரு முட்டையும் ஒரு வெண்டிக்காயிலும் ஒரே வித சத்துக்கள் உள்ளதாம் என அறிந்தேன் சரி பிழை தெரியாது.