Thursday, September 20, 2012

சங்கரா மீன் ஃப்ரை / Red Snapper Fish Fry


தேவையான பொருட்கள்;
மீடியம் சைஸ் முழு சங்கரா மீன் - 6
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
ரெட் கலர் - 2 பின்ச்
ஒயிட் வினிகர்  - 3 டீஸ்பூன் அல்லது ஒரு எலுமிச்சை சாறு
கார்ன் ஃப்லோர் - 3 டேபிள்ஸ்பூன் ( மீனை பிரட்டி எடுக்க) அல்லது அரிசி மாவு அல்லது கடலை மாவு.
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
1. மீனை செதில், பக்கவாட்டில் உள்ள  முட்பகுதிகளை நீக்கி வயிற்றுப்பகுதியை  சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.
2. மசாலா ஏறுவதற்கு வசதியாக மீனை கீறி விட்டுக் கொள்ளவும்.
3.. மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,மிளகுத்தூள்,சீரகத்தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,வினிகர்,தேவைக்கு உப்பு சிறிது தண்ணீர்  சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. மீனில் தயார் செய்த மசாலாவை தடவி,  ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜிலோ அல்லது வெளியிலோ ஊற வைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
6. ஊறிய மீனை கார்ன் ஃப்லோரில் லேசாக பிரட்டி பொரிப்பதால் மீன் உதிராமல் வெடிக்காமல் முழுதாக பொரித்து எடுக்க அருமையாக வரும்.
எண்ணெய் காய்ந்து வரும் பொழுது மீனை போட்டு ஒரு பக்கம் முறுகவும் மறு பக்கம் திருப்பி போட்டு ,இரண்டு பக்கமும் ஒரே போல் பொரித்து எண்ணெய் வடிய விட்டு எடுக்கவும்.

சுவையான சங்கரா மீன் ஃப்ரை ரெடி.
சங்கரா மீனை முழுசாக பொரித்து சாப்பிடும் பொழுது அதன் சுவையே தனி தான்.

13 comments:

ராதா ராணி said...

மீன் ஃப்ரை சூப்பர்..படத்தில மொறு மொறுப்பா சாப்பிட தூண்டுது ..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையா இருக்குங்க... சென்னையிலே இருக்கும் போது நிறைய கிடைக்கும்... இங்கே அதிகமா கிடைக்கிறதில்லே... நன்றி...

Vimitha Anand said...

Simple and yummy fry...

Shama Nagarajan said...

delicious...love it

சே. குமார் said...

அழகா சொல்லியிருக்கீங்க அக்கா.
எங்க அறையில் அடிக்கடி இந்தப் பொறியல் நடக்கும்... வினிகர மற்றும் கார்ன் பிளவர் மாவு சேர்ப்பதில்லை...
அடுத்த முறை சேர்த்துப் பொறித்துப் பார்க்கலாம்.

angelin said...

என் கணவருக்கு மிகவும் பிடிக்கும் ..ஆனா இங்கே ஃப்ரோசன் மீன் தான் கிடைக்கும் ..செய்து பார்கிறேன்

Divya Pramil said...

I love this fish variety such a tasty one :)
Today's Recipe ~ Watermelon Juice
You Too Can Cook Indian Food Recipes

athira said...

அவ்வ்வ்வ்வ்வ் சொல்லி வேலையில்லை... மீன் பொரியல் ஆருக்கும் பிடிக்காமல் போகுமோ:)

Saraswathi Tharagaram said...

What a great and simple method to enjoy fish...Crispy and flavorful fry..

ஹேமா said...

வெள்ளிக்கிழமை...இண்டைக்குத்தான் பாக்கிறன்.மீன் பொரியல்.வாயூறுது ஆசியா !

Asiya Omar said...

ராதா ராணி மிக்க நன்றி.
தனபாலன் சார் மிக்க நன்றி.
விமிதா மிக்க நன்றி.
சாமா மிக்க நன்றி.
குமார் மிக்க நன்றி.
அதிரா மிக்க நன்றி.
திவ்யா மிக்க நன்றி.
ஏஞ்சலின் மிக்க நன்றி.
சரஸ்வதி மிக்க நன்றி.
ஹேமா மிக்க நன்றி.

ஸாதிகா said...

வினிகர் எத்ற்கு சேர்க்கறீங்க ஆசியா?அவசியம் செய்து பார்த்த்டவேண்டும்,

Asiya Omar said...

ஸாதிகா வினிகர் சேர்ப்பது புளிப்பு சுவைக்கு.கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.