Tuesday, September 25, 2012

முருங்கைக்கீரை கூனி இறால் பொரியல் / Drumstick leaves dry shrimps poriyal



தேவையான பொருட்கள்;
முருங்கைக்கீரை - ஒரு கப்
காய்ந்த கூனி இறால் - ஒரு கைப்பிடியளவு
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய பூண்டு பல் - 2
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு



கீரையை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.கூனி இறாலை மண் போக அலசி ஊற வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், சீரகம்,உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளி போட்டு தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம்,பூண்டு  சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும் .கீரை சிறிது வதக்கியவுடன்  தண்ணீர் தெளித்து சிறிது மூடி போடவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.கூனி இறால் சேர்க்கவும்.நன்கு வதக்கி வேக விடவும்.
தேங்காய்த் துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.


சுவையான முருங்கைக்கீரை கூனி இறால் பொரியல் ரெடி.
சும்மாவே சாப்பிடலாம்.,சைட் டிஷாகவும் பரிமாறலாம்.

குறிப்பு:
தூத்துக்குடியில் இருந்த சமயம் ஃப்ரெஷ் கூனி இறால் கிடைக்கும்,பால் போல் இனிப்பாக இருக்கும். அதனை மீன் கார மாலையம்மா இப்படி சமைக்கும் படி சொல்லித் தருவது வழக்கம், அந்த நினைவில் காய்ந்த கூனி இறாலை வைத்து சமைத்து பார்த்தேன், ருசி செமையாக இருந்தது.

11 comments:

angelin said...

கூனி இறால் இங்கே கிடைக்கும் என்று நினைக்கிறேன் .....குறிப்பு கிடைச்சு .செய்திட்டு சொல்கிறேன்

athira said...

சூப்பர்.. ஆனா இதுக்கு உடன் முருங்கை இலை கிடைக்கோணும்... எங்களுக்கு கிடைக்கும்போது வாடிடும்.

Jaleela Kamal said...

ரொம்ப அருமை முருங்கீரையும் மணமும் ருசியும் அபாரம் அப்படியே அந்த பிளேட்ட இங்க தள்ளுங்கள்

S.Menaga said...

கூனி இறால் சேர்த்து முருங்கைகீரையுடன் செய்ததில்லை ,நன்றாக இருக்கு...

திண்டுக்கல் தனபாலன் said...

கூனி இறால் கிடைத்தால் செய்யலாம்...

பகிர்வுக்கு நன்றி சகோ...

அமைதிச்சாரல் said...

அருமையான குறிப்பு. இங்கே காய்ந்ததுதான் கிடைக்கும்.ஃப்ரெஷ்ஷா வேணும்ன்னா ஊருக்குத்தான் போகணும்.

Chitra said...

Nice post. u made it healthy :)

ஸாதிகா said...

வித்த்யாசமாக இருக்கு தோழி.கூனி போட்டு முருங்கைக்கீரை..சூப்பர்தான்.

Priya said...

I too get dry prawns here, will give a try definitely.

தமிழ் காமெடி உலகம் said...

நல்லா இருக்கு...பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் அழகான சமையல் குறிப்பு.......உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)